வாகனங்களை பார்க்க மக்கள் கூட்டம் கூட்டமா குவிஞ்சிருக்காங்க! எத்தன பேரு விசிட் பண்ணாங்க தெரிஞ்சா அசந்திடுவீங்க!

உலக புகழ்பெற்ற 2023 ஆட்டோ எக்ஸ்போ அண்மையில் நொய்டாவில் நடைபெற்றது. ஒவ்வொரு இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை இந்த வாகன கண்காட்சி நாட்டில் நடைபெறுவது வழக்கம். அந்தவகையில், 2022 ஆம் ஆண்டில் இந்த நிகழ்ச்சி நாட்டில் நடைபெற இருந்தது. ஆனால், கொரோனா வைரஸ் பாதிப்பு உச்சத்தில் அப்போது இருந்த காரணத்தினால் இந்த உலக புகழ்பெற்ற வாகன கண்காட்சி தள்ளிப்போடப்பட்டது. இந்த ஆண்டு வைரஸ் பரவல் அச்சம் சற்றே தணிந்து காணப்படுகின்றது.

இதன் அடிப்படையிலேயே எந்த தடையும் இன்றி வாகன கண்காட்சி நாட்டில் நிகழ்த்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் இந்திய நிறுவனங்கள் மட்டுமின்றி உலக நாடுகளில் இருந்தும் வாகன உற்பத்தியாளர்கள் பங்கேற்று தங்களின் புதுமுக மற்றும் எதிர்கால தயாரிப்புகளை காட்சிப்படுத்தினர். 100 க்கும் மேற்பட்ட புதிய தயாரிப்புகள் இந்த வாகன கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட்டன. ஜனவரி 11 ஆம் தேதி முதலே ஆட்டோ எக்ஸ்போ இந்தியாவில் நடைபெற்று வருவது குறிப்பிடத்தகுந்தது.

ஆட்டோ எக்ஸ்போ

கடைசி நாளில் கலைகட்டிய வாகன கண்காட்சி திருவிழா

ஆனால், இது அதிகாரப்பூர்வமாக மக்களின் பார்வைக்கு 14 ஆம் தேதியே தொடங்கியது. இதை அடுத்து நேற்று (18 ஆம் தேதி) வரை நடைபெற்றது. கடைசி தினம் என்பதால் காலை 11 மணிக்குத் தொடங்கிய ஆட்டோ எக்ஸ்போ இரவு 7 மணி வரை நடைபெற்றது. இந்த நிலையிலும் சில முன்னணி இருசக்கர வாகன உற்பத்தியாளர்கள் தொடங்கி புதுமுக வாகன உற்பத்தியாளர்கள் வரை தங்களின் புதிய வாகனங்களைக் காட்சிப்படுத்தினர்.

எந்தெந்த நிறுவனங்கள் பங்கேற்றன

11 மற்றும் 12 ஆகிய நாட்கள் ஊடகங்களுக்காகவும், 13 ஆம் தேதி தொழில்துறைக்காகவும் ஒதுக்கப்பட்டது குறிப்பிடத்தகுந்தது. டாடா மோட்டார்ஸ், மாருதி சஸுகி, ஹூண்டாய், கியா மோட்டார்ஸ், எம்ஜி மோட்டார், டொயோட்டா, லெக்சஸ், பிஒய்டி மற்றும் பிரவைக் உள்ளிட்ட நிறுவனங்களும் இந்த எக்ஸ்போவில் பங்கேற்று தங்களின் எதிர்கால மற்றும் புதுமுக வாகனங்களைக் காட்சிப்படுத்தினர். இதுதவிர சில பன்னாட்டு நிறுவனங்களும் இதில் கலந்துக் கொண்டு தங்களின் வாகனங்களைக் காட்சிப்படுத்தின என்பது குறிப்பிடத்தகுந்தது.

எக்ஸ்போ

ஹூண்டாயின் அட்டகாசமான கார்கள் அறிமுகம்

ஹூண்டாய் நிறுவனம் அதன் புதிய கார் மாடல்களான நெக்ஸோ, ஐயோனிக் 5 மற்றும் ஐயோனிக் 6 ஆகிய எலெக்ட்ரிக் கார் மாடல்களைக் காட்சிப்படுத்தியது. குறிப்பாக, இந்த நிறுவனத்தின் புதிய கார் மாடலான ஐயோனிக் 5-ஐ பாலிவுட் திரை நட்சத்திரம் ஷாருக்கான் இந்தியாவிற்காக வெளியீடு செய்து வைத்தார். இதேபோல், இந்த நிகழ்ச்சியில் கலந்துக் கொண்ட மாருதி சுஸுகி நிறுவனம் யாரும் எதிர்பார்த்திராத சில சம்பவங்களை நிகழ்த்தியது.

குறிப்பாக, இவிஎக்ஸ் எனும் எலெக்ட்ரிக் காரை அது காட்சிப்படுத்தியது. இதைத்தொடர்ந்து, 12 ஆம் தேதி அன்று புத்தம் புதிய ஃப்ரான்க்ஸ் எனும் கார் மாடலையும், ஜிம்னியையும் அது விற்பனைக்குக் கொண்டு வந்தது. இவற்றிற்கான புக்கிங்குகளும் அன்றைய தினத்திலேயே தொடங்கின. இதேபோல், டாடா மோட்டார்ஸும் இந்த ஆட்டோ எக்ஸ்போ வாயிலாக தனது கெத்தைக் காட்டியது. நிறுவனம் 20 க்கும் மேற்பட்ட பயணிகள் மற்றும் வர்த்தக வாகனங்களை இந்த ஷோவில் வைத்தே காட்சிப்படுத்தியது.

எக்ஸ்போ

டாடாவின் சிஎன்ஜி கார்கள் அறிமுகம்

குறிப்பாக, இந்தியர்கள் மத்தியில் பெரிதும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திக் கொண்டிருக்கும் பஞ்ச் மற்றும் அல்ட்ராஸ் ஆகிய கார் மாடல்களின் சிஎன்ஜி தேர்வை அது காட்சிப்படுத்தியது. இவற்றை நிறுவனம் வெகு விரைவில் விற்பனைக்கு வழங்க இருப்பது குறிப்பிடத்தகுந்தது. இதேபோல், எம்ஜி, கியா மற்றும் டொயோட்டா ஆகிய நிறுவனங்களும் தங்களின் அதிகப்படியான வாகன மாடல்களை 2023 ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிப்படுத்தின. கார் உற்பத்தியாளர்கள் மட்டுமின்றி இருசக்கர வாகன உற்பத்தியாளர்களும் தங்களின் புதிய டூ-வீலர்களை இந்த வாகன கண்காட்சியில் காட்சிப்படுத்தின.

டூ-வீலர்கள் உற்பத்தியாளர்களின் பங்களிப்பும் அதிகம்

ஹீரோ, ஹோண்டா, யமஹா, பஜாஜ், டிவிஎஸ் உள்ளிட்ட நிறுவனங்களுடன் சேர்த்து சில புதுமுக நிறுவனங்களும் தங்களின் இருசக்கர வாகன மாடல்களை 2023 ஆட்டோ எக்ஸ்போவில் வைத்துக் காட்சிப்படுத்தின. பெனெல்லி, கீவே, எம்பிபி, மோட்டோ மோரினி, க்யூஜே மோட்டார் மற்றும் ஜோன்டஸ் உள்ளிட்ட வெளிநாட்டு நிறுவனங்களே தங்களின் அட்டகாசமான பைக் மாடல்களை காட்சிப்படுத்தின. இதுதவிர, அசோக் லேலண்ட், டாடா மோட்டார்ஸ் நிறுவனங்களின் கனரக மற்றும் வர்த்தக வாகனங்களும் 2023 ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிப்படுத்தப்பட்டன.

எத்தனை பேர் பார்வையிட்டனர்

குறிப்பாக, அசோக் லேலண்ட் தன்னுடைய 7 புத்தம் புதிய படைப்புகளைக் காட்சிப்படுத்தி ஒட்டுமொத்த பார்வையாளர்களையும் தன் வசம் கவர்ந்தது. தற்போது கிடைத்திருக்கும் தகவலின்படி இந்த வாகன ஷோவை 6.36 லட்சத்திற்கும் அதிகமானோர் கண்டுகளித்தாகக் கூறப்படுகின்றது. இதுவரை இந்த அளவு அதிக எண்ணிக்கை பார்வையாளர்களை இந்திய ஆட்டோ எக்ஸ்போ கண்டதில்ல என்பது குறிப்பிடத்குந்தது. வாகனங்கள் மீது இந்தியர்களுக்கு ஆர்வம் அதிகரித்துக் காணப்படுவதே பார்வையாளர்களின் உயர்விற்கு முழு காரணமாக இருக்கின்றது. ஆகையால், அடுத்து வருங்காலங்களிலும் பார்வையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
6 36 lakh people came to see auto expo 2023
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X