இந்த காலத்துல இது கூட இல்லேனா எப்படி? கார்களில் கட்டாயமாக இருக்க வேண்டிய முக்கியமான வசதிகள்!

கார்களில் கட்டாயமாக இருக்க வேண்டிய வசதிகள் என்னென்ன? என்பதை இந்த செய்தியில் பார்க்கலாம்.

இந்த காலத்துல இது கூட இல்லேனா எப்படி? கார்களில் கட்டாயமாக இருக்க வேண்டிய முக்கியமான வசதிகள்!

ஒவ்வொருவரும் தங்களது புதிய கார்களில் மிகவும் சிறப்பான வசதிகள் இடம்பெற வேண்டும் என விரும்புகின்றனர். அரசு சில பாதுகாப்பு வசதிகளை தொடர்ச்சியாக கட்டாயமாக்கி வரும் நிலையில், ஒரு சில முக்கியமான வசதிகள் சந்தையில் 'மிஸ்' ஆவதாக நாங்கள் கருதுகிறோம். எனவே அனைத்து கார்களிலும் கண்டிப்பாக இருக்க வேண்டும் என நாங்கள் கருதும் வசதிகளை இந்த செய்தியில் பட்டியலிட்டுள்ளோம்.

இந்த காலத்துல இது கூட இல்லேனா எப்படி? கார்களில் கட்டாயமாக இருக்க வேண்டிய முக்கியமான வசதிகள்!

டெத் பெடல் (Dead Pedal)

இது ஒரு வகையான ஃபுட்ரெஸ்ட் (Footrest) ஆகும். பெடல்கள் வழங்கப்பட்டிருக்கும் இடத்தில் இடதுபுறம் டெத் பெடல் இருக்கும். இது மிகவும் முக்கியமான வசதி என நாங்கள் கருதுகிறோம். ஏனெனில் தேவைப்படாத நேரங்களில் நமது இடது காலை இங்கே வைத்து கொள்ள முடியும். ஆட்டோமேட்டிக் கார்களுக்கு இந்த வசதி மிகவும் முக்கியம்.

இந்த காலத்துல இது கூட இல்லேனா எப்படி? கார்களில் கட்டாயமாக இருக்க வேண்டிய முக்கியமான வசதிகள்!

அதே நேரத்தில் மேனுவல் கார்களிலும் கூட இந்த வசதி இடம்பெறுவது அவசியம். ஏனெனில் தொலைதூர நெடுஞ்சாலை பயணங்களை சௌகரியமாக மேற்கொள்ள இது உதவும். சௌகரியம் தவிர கிளட்ச்சின் நீண்ட ஆயுளுக்கும் இது அவசியம். கிளட்ச்சில் தேவையில்லாமல் காலை வைத்து மிதித்து கொண்டிருந்தால், அதன் ஆயுட்காலம் குறைந்து விடும் என்பதால்தான், இவ்வாறு கூறுகிறோம்.

இந்த காலத்துல இது கூட இல்லேனா எப்படி? கார்களில் கட்டாயமாக இருக்க வேண்டிய முக்கியமான வசதிகள்!

வயர்லெஸ் சார்ஜிங் (Wireless Charging)

கடந்த சில ஆண்டுகளாக கிட்டத்தட்ட அனைத்து கார்களிலும் சார்ஜிங் சாக்கெட்கள் வழங்கப்படுகின்றன. ஆனால் வேகமாக மாறி வரும் உலகத்தில் நாம் விரைவாக புதிய தொழில்நுட்பங்களுக்கு மாறி கொள்ள வேண்டும். இதன்படி வயர்லெஸ் சார்ஜிங் வசதி நமது சௌகரியத்தை இன்னும் உயர்த்தும் என்பதில் சந்தேகமில்லை.

இந்த காலத்துல இது கூட இல்லேனா எப்படி? கார்களில் கட்டாயமாக இருக்க வேண்டிய முக்கியமான வசதிகள்!

ரியர் டீஃபாகர்ஸ் (Rear Defoggers)

தற்போது பெரும்பாலான கார்களின் முன் பகுதியில் டீஃபாகர் வழங்கப்படுகிறது. ஆனால் பின் பக்க விண்டுஷீல்டு டீஃபாகர் இன்னமும் ஸ்டாண்டர்டு வசதியாக மாறவில்லை. இது மிகவும் முக்கியமான வசதி என நாங்கள் கருதுகிறோம். ஏனெனில் பின் பக்க விண்டுஷீல்டில் படிந்திருக்கும் பனி மற்றும் மழை நீரை அகற்றுவதற்கு இது உதவி செய்யும்.

இந்த காலத்துல இது கூட இல்லேனா எப்படி? கார்களில் கட்டாயமாக இருக்க வேண்டிய முக்கியமான வசதிகள்!

ரியர் பார்க்கிங் கேமரா (Rear Parking Camera)

இந்தியாவில் கார்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே செல்கிறது. எனவே கார்களை பார்க்கிங் செய்வதற்கான இடவசதி குறைந்து கொண்டுள்ளது. இந்த நேரத்தில் கார் உற்பத்தி நிறுவனங்கள் அனைத்து கார்களிலும், ரியர் பார்க்கிங் கேமராவை ஸ்டாண்டர்டு வசதியாக வழங்கினால் சிறப்பாக இருக்கும்.

இந்த காலத்துல இது கூட இல்லேனா எப்படி? கார்களில் கட்டாயமாக இருக்க வேண்டிய முக்கியமான வசதிகள்!

க்ரூஸ் கண்ட்ரோல் (Cruise Control)

தொலைதூர பயணங்களின்போது டிரைவர் சோர்வடையாமல் இருக்க க்ரூஸ் கண்ட்ரோல் உதவுகிறது. க்ரூஸ் கண்ட்ரோல் வசதி இருந்தால், குறிப்பிட்ட வேகத்தை வரையறுத்து கொண்டு, டிரைவர் சோர்வில்லாமல் பயணம் செய்ய முடியும். அனைத்து கார்களிலும் க்ரூஸ் கண்ட்ரோல் வசதி இருந்தால், உண்மையில் நன்றாக இருக்கும்.

இந்த காலத்துல இது கூட இல்லேனா எப்படி? கார்களில் கட்டாயமாக இருக்க வேண்டிய முக்கியமான வசதிகள்!

க்ரூஸ் கண்ட்ரோல் வசதி மூலம் கிடைக்கும் அனுபவத்தை இதுவரை பெறாதவர்கள், நிச்சயமாக ஒரு முறையேனும் அதனை முயற்சி செய்து பார்க்க வேண்டும். தற்போது க்ரூஸ் கண்ட்ரோல் வசதி கிடைக்கும் கார்களின் எண்ணிக்கை படிப்படியாக உயர்ந்து கொண்டே வருகிறது. எனினும் அனைத்து கார்களிலும் இருந்தால் இன்னும் நன்றாக இருக்கும்.

இந்த காலத்துல இது கூட இல்லேனா எப்படி? கார்களில் கட்டாயமாக இருக்க வேண்டிய முக்கியமான வசதிகள்!

டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம் (Tyre Pressure Monitoring System)

நாம் அனைவரும் தற்போது பரபரப்பான வாழ்க்கையை வாழ்ந்து கொண்டுள்ளோம். டயர்களில் ஏர் பிரஷரை பரிசோதிக்க கூட நமக்கு நேரம் இருப்பதில்லை. எனவே காரில் டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம் இருந்தால் உதவியாக இருக்கும். காரின் டயர்கள் ஓட்டுவதற்கு பாதுகாப்பற்ற வகையில் இருந்தால், டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம் உங்களை எச்சரிக்கை செய்யும்.

இந்த காலத்துல இது கூட இல்லேனா எப்படி? கார்களில் கட்டாயமாக இருக்க வேண்டிய முக்கியமான வசதிகள்!

டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம் வசதியும் தற்போது நிறைய கார்களில் வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் இந்த வசதியையும் அனைத்து கார்களிலும் ஸ்டாண்டர்டாக வழங்கினால் இன்னும் நன்றாக இருக்கும். இன்றைய சூழலில், டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம் மிக முக்கியமான பாதுகாப்பு வசதிகளில் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த காலத்துல இது கூட இல்லேனா எப்படி? கார்களில் கட்டாயமாக இருக்க வேண்டிய முக்கியமான வசதிகள்!

ஆனால் நாங்கள் இங்கே குறிப்பிட்டுள்ள வசதிகளை வழங்கினால் கார்களின் விலை உயரும் என்பதில் சந்தேகமில்லை. எனினும் இந்த வசதிகள் சௌகரியமான மற்றும் பாதுகாப்பான பயணத்திற்கு உதவி செய்யும். நாளுக்கு நாள் கார்கள் மாடர்ன் ஆகி கொண்டே செல்கின்றன. எனவே இந்த வசதிகளையும் கூடிய விரைவில் அனைத்து கார்களிலும் எதிர்பார்க்கலாம்.

Most Read Articles

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
6 most important features for new cars
Story first published: Saturday, September 4, 2021, 21:37 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X