மகனை வைத்து பந்தா காட்டிய தந்தைக்கு நடந்த சோகம்! இப்படி ஆகும்னு மனுஷன் நெனச்சு கூட பாத்திருக்க மாட்டாரு!

இந்தியாவில் உரிய வயதை எட்டுவதற்கு முன்பாகவே குழந்தைகள் வாகனம் ஓட்டும் நிகழ்வு தொடர்ந்து அதிகரித்து கொண்டே வருகிறது. ஸ்கூட்டர்கள், பைக்குகள், கார்கள் என பலதரப்பட்ட வாகனங்களையும் குழந்தைகள் சர்வ சாதாரணமாக இயக்குவதை நேரிலும், வீடியோக்களிலும் நம்மால் காண முடிகிறது. பெரும்பாலும் 12-17 வயது வரையுள்ள குழந்தைகள்தான் வாகனங்களை அதிகமாக ஓட்டுகின்றனர்.

ஆனால் 6 வயது மட்டுமே ஆன ஒரு குழந்தை கார் ஓட்டும் வீடியோ தற்போது சமூக வலை தளங்களில் காட்டு தீ போல் பரவி கொண்டுள்ளது. இந்த வைரல் வீடியோவில் (Viral Video), 6 வயதே நிரம்பிய ஒரு சிறுவன், ஹூண்டாய் க்ரெட்டா (Hyundai Creta) காரை ஓட்டுவதை நம்மால் காண முடிகிறது.

6-year-old Kid Steer Hyundai Creta SUV

இதற்கெல்லாம் காரணம் அந்த சிறுவனின் தந்தைதான் என கூறப்படுகிறது. இந்த வீடியோவில் தந்தை போல் காட்சியளிக்கும் ஒருவரின் மடியில் அந்த சிறுவன் அமர்ந்துள்ளான். இந்த நபர், அந்த சிறுவனின் தந்தை என தெரிகிறது. அந்த நபர் ஆக்ஸலரேட்டர் மற்றும் பிரேக்குகளை கட்டுப்படுத்திய சூழலில், சிறுவன் ஸ்டியரிங் வீலை கையாள்கிறான்.

இது மேனுவல் கியர் பாக்ஸ் கார் ஆகும். கியர் பாக்ஸையும் தந்தையே கையாளும் சூழலில், சிறுவன் ஸ்டியரிங் வீலை கட்டுப்படுத்துகிறான். இது உண்மையிலேயே மிகவும் முட்டாள்தனமான காரியம் ஆகும். ஆனால் அந்த தந்தை இதைப்பற்றி எல்லாம் கொஞ்சம் கூட கவலைப்படாமல், வீடியோவில் சிரித்து கொண்டே இருக்கிறார்.

இந்த முட்டாள்தனமான காரியம் அரங்கேறி கொண்டிருந்த சமயத்தில், அந்த பகுதியில் ஏராளமான வாகனங்கள் சென்று கொண்டிருப்பதை வீடியோவில் நம்மால் மிகவும் தெளிவாக காண முடிகிறது. இந்த வீடியோவை முழுமையாக பார்த்த வரையில், எந்தவிதமான அசம்பாவிதங்களும் அரங்கேறவில்லை என்பது நமக்கு தெரிய வருகிறது.

ஆனால் ஒரு வேளை சாலை விபத்து நடைபெற்றிருந்தால், அதன் விளைவுகள் பயங்கரமானதாக இருந்திருக்கலாம். எனவே இது போன்ற செயல்களை யாரும் மேற்கொள்ளாமல் இருப்பது நல்லது. இந்த சம்பவம் இந்தியாவில்தான் நடைபெற்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால் எங்கு நடைபெற்றது? என்பது உறுதியாக தெரியவில்லை.

எனினும் இந்த தந்தை மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என சமூக வலை தளங்களில் நெட்டிசன்கள் வலியுறுத்தி வருகின்றனர். இதுகுறித்து காவல் துறை விசாரணை நடத்தும் என்பதால், அவர் சிக்கலில் சிக்கி கொண்டுள்ளார் என்பதே யதார்த்தம். இந்தியாவில் உரிய வயதை எட்டுவதற்கு முன்னரே குழந்தைகளை வாகனம் ஓட்ட அனுமதித்த குற்றத்திற்காக கடந்த காலங்களில் நிறைய முறை பெற்றோர்கள் தண்டிக்கப்பட்டுள்ளனர்.

காவல் துறையினர் அபராதம் விதிப்பதுடன் நின்று விடாமல், அவர்களை சிறைக்கும் அனுப்பி வைத்துள்ளனர். ஆனால் இன்னமும் இதுபோன்ற அபாயகரமான சம்பவங்கள் இந்தியாவில் தொடர்ச்சியாக அரங்கேறி கொண்டே இருப்பது வேதனையான ஒரு விஷயம்தான். வரும் காலங்களிலாவது இன்னும் மிக கடுமையான சட்டங்கள் மூலம் இது போன்ற பிரச்னைகளுக்கு அரசு அனுமதி வைக்கும் என நாம் நம்பலாம்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இதுபோன்ற பிரச்னைகள் தவிர்க்கப்பட வேண்டுமானால், பொதுமக்களாகிய நாமும் அரசுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். சிறு வயதிலேயே என் குழந்தை வாகனம் ஓட்டுகிறது என பெற்றோர்கள் பெருமிதம் கொள்வதே இந்த பிரச்னைக்கு மிக முக்கியமான காரணம். ஆனால் இது வீண் பெருமை என்பதை அனைவரும் உணர வேண்டும்.

More from DriveSpark

Article Published On: Wednesday, May 17, 2023, 14:15 [IST]
English summary
6 year old kid steer hyundai creta suv viral video all details here
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+