விமானம் சார்ந்த தொழில்நுட்பங்களை பிரிச்சு மேயும் 6 வயது சிறுவன்... வைரல் வீடியோ..!!
விமானம் சார்ந்த தொழில்நுட்பங்களை பிரிச்சு மேயும் 6 வயது சிறுவன்... வைரல் வீடியோ..!!
சர்வதேச விமான நிறுவனம் ஒன்றில் ஒரு நாள் விமானியாக பணியாற்றி உலகையே ஆச்சர்யமடைய செய்துள்ளான் 6 வயது சிறுவன் ஒருவன்.

ஆடம் என்ற அந்த சிறுவன் எகிப்து நாட்டை பூர்விகமாக கொண்டவன். ஆனால் தற்போது அவன் மோரோக்கோவில் வசிக்கிறான்.
அறிவியல் தளங்களில் ஈடுபாடு கொண்ட ஆடம், விமானம் சார்ந்த துறைகளில் மேலும் அவனுக்கு அதீத ஆர்வம் உள்ளது.

இதன்காரணமாக ஒருமுறை எட்டிஹாடு ஏர்வேஸில் அவன் பயணம் செய்தபோது, ஏதேச்சையாக அந்த விமானத்தின் கேப்டனை சந்தித்தான் சிறுவன் ஆடம்.

அப்போது இருவருக்குள்ளும் உரையாடல் எழ விமானங்கள் சார்ந்த துறை மீது ஆடமிற்கு இருக்கும் ஆறிவாற்றலைக் கண்டு கேப்டன் சமர் யாக்ஹெல்ஃப் வாயடைத்து போனார்.

அப்போது காக்பெட்டில் விமானங்களுக்கான ஹைட்ராலிக் திறனை தெளிவாகவும் சரியான புரிதலுடனும் கேப்டன் சமர் முன்புஆடம் விவரித்துக்கொண்டு இருந்தான்.

இதை ஆச்சர்யமாக பார்த்த கேப்டன் சமர் அவனது பெற்றோர் அனுமதியுடன், ஆடமின் செயல்பாடுகளை வீடியோ எடுக்க தொடங்கினார்.
பிறகு எட்டிஹாடு ஏர்வேஸின் தலைமை அதிகாரிகளுக்கு அந்த வீடியோவை கேப்டன் சமர் யாக்ஹெல்ஃப் போட்டு காண்பித்தார்.
Trending On DriveSpark:

சிறுவனின் திருத்தமான பேச்சால் ஆச்சர்யமடைந்த அதிகாரிகள், ஆடமிற்கு ஒரு ஆச்சர்ய பரிசை வழங்க ஆலோசித்தனர்.
அதன்படி, விமானிகளுக்கு செயல்முறை பயிற்சி வழங்கும் ஏ380 ஏர்பஸ்ஸில் ஒரு நாள் விமானியாக பணியாற்றும் வாய்ப்பை ஆடமிற்கு வழங்கினர்.

எதிர்காலத்தில் சிறந்த விமானியாக வேண்டும் என்ற கனவு கொண்ட ஆடம், எட்டிஹாடு ஏர்வேஸில் ஒருநாள் விமானியாக பயிற்சி பெறும் வாய்ப்பை ஏற்றான்.

ஒரு குறிப்பிட்ட நாளில் அபுதாபிக்கு வந்த ஆடம் எட்டிஹாடு ஏர்வேஸ் தயார் செய்திருந்த சிறிய விமானிக்கான உடையை அணிந்து காக்பிட் இருக்கையில் ஏறி அமர்ந்தான்.

முதல்முறை சந்திப்பின் போது ஆடம் பேசியது கம்மி தான் என்பது போல அவனது செயல்பாடுகள் இருந்தன. ஒரு காக்பிட்டில் என்னவெல்லாம் விமானி செய்வார், அதன் தொழில்நுட்பங்கள் என்ன என்பதை மேலும் ஆடம் விவரித்தான்.

ஒரு நாள் விமானியாக பயிற்சி பெற்ற ஆடம் பற்றிய வீடியோவை தங்களது அதிகாரப்பூர்வ யூ-டியூப் பக்கத்தில் எட்டிஹாடு ஏர்வஸ் பதிவிட்டது.
இம்மாத தொடக்கத்தில் வெளிவந்த இந்த வீடியோ, யூ- டியூபை தாண்டி பல்வேறு சமூக வலைதளங்கிலும் பரவியது.

ஃபேஸ்புக்கில் மட்டும் எட்டிஹாடு ஏர்வேஸின் சிறுவன் ஆடம் பற்றிய வீடியோ சுமார் 21 மில்லியன் முறை பார்க்கப்பட்டுள்ளது.
யூ- டியூப் வலைதளத்தில் இதுவரை 6.42 லட்சம் மக்களால் பார்க்கப்பட்டு உள்ளது. 3 லட்சத்திற்கு மேல் பகிரப்பட்டும் உள்ளது.

அந்த ஒரு நாள் முழுவதும் ஆடமிடம் இருந்த பல்வேறு விமான துறை அதிகாரிகள், சிறுவனின் செயல்பாடுகளால் மிகவும் கவரப்பட்டனர்.

எதிர்காலத்தில் விமானியாகும் கனவு நனவாக வேண்டும் என்று வாழ்த்து தெரிவித்தனர். சுமார் 1.40 நிமிடங்கள் ஓடும் இந்த வீடியோ மிகவும் நெகிழ்ச்சியை தருவதாக உள்ளது.

இறுதியாக சிறுவன் ஒரு பொம்பை விமானத்துடன் விளையாடும் காட்சியுடன், "கேப்டன் ஆடம் எதிர்காலத்தில் நீ சிறந்த விமானியாக உருவாகவேண்டும்" என்ற வார்த்தைகள் திரையில் தோன்ற வீடியோ நிறைவடைகிறது.

ஒரு பிரோமோஷன் யுக்திக்காக செய்யப்பட்ட வீடியோவாக இருந்தாலும், சிறுவன் ஆடமின் செயல்பாடு விமானத்துறை மீது பலரின் கவனத்தை திசை திருப்பியுள்ளது.

ஆடம் பற்றிய வீடியோவை பார்த்த பல பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் ஆர்வங்களை புரிந்துக்கொண்டு அதற்கு ஏற்றவாறு செயல்பட உள்ளதாக கமெண்டுகளை பதிவிட்டு வருகின்றனர்.


Click it and Unblock the Notifications