60 லிட்டர் டேங்கில் 61 லிட்டர் பெட்ரோல் நிரம்பிய அதிசயம்! இது என்னடா உலகமகா உருட்டா இருக்குது!

60 லிட்டர் டீசல் டேங்கில் 60.970 லிட்டர் டீசல் நிரப்பிய சம்பவம் சமீபத்தில் திண்டுக்கல்லில் நடந்துள்ளது. இது எப்படி 60 லிட்டர் டேங்கில் அதைவிட அதிகமாக டீசல் நிரப்ப முடியும்? ஏதாவது ஏமாற்று வேலை நடந்ததா? அல்லது தொழில்நுட்ப ரீதியில் இதற்கு இதற்கு சாத்தியம் உள்ளதா? விரிவாக காணலாம் வாருங்கள்.

திண்டுக்கல் மாவட்டம் பழனி பைபாஸில் பெட்ரோல் பங்க் ஒன்று உள்ளது அந்த பெட்ரோல் பங்கில் தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் வந்து பெட்ரோலை நிரப்பி செல்கின்றனர். இப்படியாக அதே பகுதியை சேர்ந்த அழகர்சாமி என்பவர் தனது வேனுக்கு டீசல் நிரப்ப அந்த பெட்ரோல் பங்கிற்கு வந்துள்ளார்.

Petrol Bunk Fraud viral video

அப்பொழுது அவர் தனது வேனுக்கு முழு டேங்க் அளவில் டீசல் நிரப்ப சொல்லி கேட்டுள்ளார். பங்கு ஊழியர்களும் அவரது வேனிருக்கு டீசல் நிரப்பும் பணியில் ஈடுபட்டனர். அப்பொழுது அவரது டேங்கில் சுமார் 60 லிட்டர் மற்றும் 970 மில்லி அளவிலான டீசலை பிடித்தது.

இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அழகர்சாமி பெட்ரோல் பங்க் ஊழியர்களிடம் விசாரித்தார். அப்பொழுது அவர் தனது வேனின் முழு டீசல் டேங்க் அளவு வெறும் 60 லிட்டர் தான் என்றும் அதில் ஏற்கனவே டீசல் இருந்தது என்றும் தற்போது அதற்கு மேல் 60 லிட்டர் 970 மில்லி டீசல் எப்படி நிரப்பப்பட்டது என்றும் கேள்வி எழுப்பினார். இதற்கு பெட்ரோல் பங்க் ஊழியர்கள் பதில் சொல்ல முடியாமல் திணறினார்‌.

Petrol Bunk Fraud viral video

இதனால் அங்கு வாக்குவாதம் ஏற்பட்டது பெட்ரோல் பங்க் ஊழியர்களுக்கும் அழகர்சாமி வகையறா ஆட்களுக்கும் பிரச்சனை ஏற்பட்ட சூழ்நிலையில் இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் போலீசார் பிரச்சினை ஏற்பட்ட பெட்ரோல் பங்கிற்கு விரைந்து சென்றனர். அங்கு வந்து இரு தரப்பையும் பிரித்துவிட்டனர்.

அங்கு பெட்ரோல் பங்க் உரிமையாளர் மற்றும் அழகர்சாமி ஆகியோரிடம் விசாரணை நடத்தினர் இதில் பெட்ரோல் பங்க் ஊழியர்கள் முறைகேடு செய்துள்ளதாக அழகர்சாமி போலீசில் கூறினார். இதையடுத்து போலீசார் வேனின் டீசல் டேங்கை கழட்டி அதில் உள்ள பெட்ரோல் அளந்து பார்க்க முடிவு செய்தனர்.

Petrol Bunk Fraud viral video

இதை எடுத்து பெட்ரோல் பங்கிலேயே வேனில் இருந்த டீசல் டேங்க் கட்டப்பட்டு அதிலுள்ள பெட்ரோல் அடக்கப்பட்டது. அப்பொழுது டேங்க் உள்ளே 60 லிட்டர்க்கும் கொஞ்சம் அதிகமாக பெட்ரோல் இருந்துள்ளது. 60 லிட்டர் கொள்ளளவு கொண்ட ஒரு டீசல் டேங்கில் எப்படி அதைவிட அதிகமாக பெட்ரோல் நிரப்ப முடியும் என்ற கேள்வி பலருக்கு இப்பொழுது எழுந்திருக்கும்.

வாகன தயாரிப்பு நிறுவனங்கள் வாகனம் வாங்கும் போது குறிப்பிடும் பெட்ரோல் கொள்ளளவு நம்பர் என்பது ஒரு உத்தேசமான நம்பர் தான். அதிலிருந்து கொஞ்சம் கூடவோ குறையவோ பெட்ரோல் பிடிக்கலாம். மேலும் இந்த பெட்ரோல் டேங்க் கொள்ளளவு என்பது வெறும் டேங்கின் கொள்ளளவு தான். டேங்கிலிருந்து இன்ஜினுக்கு செல்லும் பைப் டேங்க்கின் வாய் பகுதி ஆகியவற்றின் அளவு தனி.

இதையெல்லாம் வைத்து கணக்கிடும்போது ஒருவேளை அழகர்சாமி கொண்டு வந்த வேனில் சுத்தமாக டீசல் இல்லாமல் வேன் டீசல் அடிக்க வந்திருந்தால் அந்த வேனில் 60 லிட்டர் 970 மில்லி டீசல் நிரப்பப்பட்டது கிட்டத்தட்ட சரியாகத்தான் இருக்கும். ஒருவேளை அவர் ஏற்கனவே கொஞ்சம் டீசலுடன் வந்திருந்தால் இதில் ஏதாவது முறைகேடு நடந்திருக்க வாய்ப்புள்ளது.

ஆனால் டீசல் விற்பனையை பொருத்தவரை எண்ணெய் நிறுவனங்கள் எல்லாம் மிக கட்டுப்பாட்டுடன் அதன் விற்பனை மையங்களை கையாண்டு வருகிறது. அவ்வப்போது டீசல் விற்பனையில் ஏதேனும் முறைகேடு நடக்கிறதா என சோதனை செய்து வருகின்றனர். டீசல் விற்பனை செய்யும் நாப்களில் பல கட்டுப்பாடுகளை வைத்துள்ளனர். இதனால் இதில் முறைகேடு நடப்பதற்கான வாய்ப்பு குறைவுதான்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: டீசல் டேங்கில் அதன் கொள்ளளவு என்பது மிகச்சரியான அளவு என கருத்தில் கொள்ள முடியாது. அதே நேரம் மிகப்பெரிய அளவில் மாற்றங்கள் ஏற்படவும் வாய்ப்புகள் இல்லை. இதனால் வாடிக்கையாளர்கள் எப்பொழுதும் பெட்ரோல் பங்கில் எரிபொருள் நிரப்பும் போது கவனமாக இருக்க வேண்டும். நிச்சயம் ஏரிபொருளை நிரப்பும் முன்பு 0 என்பதை பார்க்க வேண்டும்.

More from DriveSpark

Article Published On: Thursday, July 13, 2023, 19:44 [IST]
English summary
61 liter diesel filled in 60 liter tank video viral on social media
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X