61 வயதில் ஒருவழியா பிரபல நடிகர் செய்த சாதனை!! அந்த அழகு தேவதையை பெற்ற தந்தையா இவர்?

கார் ஓட்டுவது எவரொருவருக்கும் ஜாலியான விஷயம் ஆகும். அதேநேரம், கார் ஓட்ட தெரியாதவர்களும் இருக்கின்றனர். ஆதலால், அத்தகையவர்களிடத்தில் கார் டிரைவிங் லைசன்ஸ் இருக்காது. மிக நீண்ட வருடங்களுக்கு பிறகு கார் டிரைவிங் லைசன்ஸை பெற்றவர்களும் இருக்கின்றனர். அவ்வாறுதான் இங்கு ஒருவர் 61 வயதில் டிரைவிங் லைசன்ஸை பெற்றுள்ளார். இத்தனைக்கும் இவர் ஒரு சாதாரண மனிதர் கிடையாது; 100க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்த அனுபவமிக்க நடிகர் ஆவார். இதுகுறித்த கூடுதல் விபரங்களை இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம், வாங்க.

கார் ஓட்டுவது ஒரு கலை என்றுதான் சொல்ல வேண்டும். இதன் காரணமாகவே, அது சிலருக்கு முறையாக வருவதில்லை. இருப்பினும், சினிமா நடிகர், நடிகைகள் இளம் வயதிலேயே கார் ஓட்ட கற்றுக்கொண்டு விடுவர். ஏனெனில், திரைப்படங்களில் நடிக்க வேண்டுமென்றால் நிச்சயமாக கார் ஓட்ட தெரிந்திருக்க வேண்டும். அப்போதுதான் சில திரைப்பட இயக்குனர்கள் படத்தில் நடிக்கவே அனுமதிப்பார்கள்.

chunky pandey gets driving license

அதுமட்டுமின்றி, சினிமா பிரபலங்களாகி விட்டாலே நிறைய இடங்களுக்கு செல்ல வேண்டியிருக்கும். ஒரு சிலருக்கோ நன்றாக கார் ஓட்ட தெரிந்திருக்கும். ஆனால், கார் டிரைவிங் லைசன்ஸை வாங்க முடியாமல் இருப்பர். அந்த வகையில், இங்கு ஒரு நடிகர் தனது 61ஆவது வயதில் ஒருவழியாக கார் டிரைவிங் லைசன்ஸை பெற்றுள்ளார். இந்தியாவில் கார் ஓட்டுனர் உரிமத்தை பெறுவதற்கு குறைந்தப்பட்ச வயது 18 ஆகும்.

இந்த வகையில் பார்த்தால், சுமார் 43 வருடங்களுக்கு பிறகு கார் டிரைவிங் லைசன்ஸை பெற்றுள்ளார். இந்த நடிகர் வேறு யாரும் இல்லை, நடிகர் கார்த்திக்கின் சர்தார், பிரபாஸின் சாஹோ, விஜய் தேவரகொண்டாவின் லிகர் படங்களில் நடித்த அனுபவமிக்க நடிகர் சங்கி பாண்டே (Chunky Pandey) ஆவார். தமிழ், தெலுங்கு படங்களில் நடித்து இருப்பினும், சங்கி பாண்டே ஒரு அனுபவமிக்க பாலிவுட் நடிகர் ஆவார்.

இந்திய மற்றும் வங்காள தேச திரைப்படங்களிலும் நடித்துள்ள இவர், இதுவரையில் 100க்கும் அதிகமான படங்களில் நடித்துள்ளார். பாலிவுட்டின் பிரபலமான இளம் நடிகை அனன்யா பாண்டேவின் தந்தை தான் இந்த சங்கி பாண்டே ஆவார். இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு பதிவை தற்போது வெளியிட்டுள்ளார். இதில், 43 வருடங்களுக்கு பிறகு டிரைவிங் லைசன்ஸை பெற்றுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

மேலும், மும்பை மேற்கு ஆர்டிஓ அலுவலக அதிகாரி உடன் காரில் அமர்ந்திருக்கும் படத்தையும் சங்கி பாண்டே வெளியிட்டுள்ளார். இந்த படத்தில், நடிகர் சங்கி பாண்டே அமர்ந்திருப்பது டொயோட்டா இன்னோவா கிரிஸ்ட்டா கார் போன்று தெரிகிறது. இன்னோவா கிரிஸ்ட்டா ஆனது இந்தியாவில் பிரபலமான எம்பிவி கார்களுள் ஒன்றாகும். இருப்பினும், இந்த காரின் உரிமையாளர் சங்கி பாண்டேவா என்பது தெரியவில்லை.

chunky pandey gets driving license

பாலிவுட்டின் அமிர்கான், ஜாக்கி ஷெராப்பில் இருந்து கோலிவுட்டின் ரஜினிகாந்த், விஜய் வரையில் நடிகர்கள் பலரிடத்தில் இன்னோவா கிரிஸ்ட்டா கார் உள்ளது. கார் டிரைவிங் லைசன்ஸ் இல்லாததால், இத்தனை வருடங்களாக கார் ஓட்டுவதற்கு தனியாக டிரைவர் ஒருவரை பணியில் அமர்த்தி நடிகர் சங்கி பாண்டே பயணம் செய்து வந்தார். ஆனால், இனி இவர் சாலையில் கார் ஓட்டுவதற்கு தகுதி உடையவராகி உள்ளார்.

இந்தியாவில் கார்களை சாலையில் ஓட்ட வேண்டுமென்றால், கார் டிரைவிங் லைசன்ஸ் மிகவும் அவசியமான ஒன்றாகும். ஒவ்வொரு பகுதியில் உள்ள பிராந்திய போக்குவரத்து அலுவலகம் (RTO) மூலமாக டிரைவிங் லைசன்ஸ் வழங்கப்படுகிறது. 2-வீலர், 4-வீலர், ஸ்பெஷல் வாகனங்கள் என ஒவ்வொரு விதமான வாகனங்களுக்கும் தனித்தனியாக டிரைவிங் லைசன்ஸ் வழங்கப்படுகிறது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: சாலை விதிமுறைகள், சாலை பாதுகாப்பு மற்றும் வாகனங்களை கண்ட்ரோல் செய்யும் திறன் உள்ளிட்டவற்றின் அடிப்படையில் டிரைவிங் லைசன்ஸ் வழங்கப்படுகின்றன. 43 வருடங்களாக லைசன்ஸை பெறாததால் நடிகர் சங்கி பாண்டேவுக்கு கார் ஓட்ட தெரியாமல் இருந்திருக்க வாய்ப்பில்லை. போதிய நேரம் அல்லது குறிப்பிட்ட சில ஆவணங்கள் இல்லாததால் இத்தனை வருடங்களாக கார் டிரைவிங் லைசன்ஸை பெறுவது தாமதமாகி வந்திருக்கும்.

More from DriveSpark

Article Published On: Tuesday, September 17, 2024, 11:43 [IST]
English summary
61 year old actor chunky pandey finally gets car driving license
மேலும்... #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+