வேட்ட ஆரம்பம்! பழைய வண்டிகளை கொத்து கொத்தாக தூக்கும் அதிகாரிகள்! என்ன பண்ண போறாங்கனு தெரிஞ்சா ஆடிப்போயிருவீங்க
பழைய வாகனங்களுக்கு எதிரான வேட்டை தீவிரமடைந்துள்ளது. இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

இந்திய நகரங்களில் காற்று மாசுபாடு பிரச்னை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. இதற்கு பல்வேறு காரணங்கள் இருக்கின்றன. என்றாலும் பெட்ரோல் மற்றும் டீசலில் இயங்கும் பழைய வாகனங்கள்தான் காற்று மாசுபாடு பிரச்னைக்கு முக்கியமான காரணமாக பார்க்கப்படுகின்றன. குறிப்பாக தலைநகர் டெல்லியில் பழைய வாகனங்கள் காற்றை அதிகம் மாசுபடுத்துகின்றன.

எனவே நாட்டின் மற்ற பகுதிகளை காட்டிலும் டெல்லியில் பழைய வாகனங்களுக்கு எதிரான கட்டுப்பாடுகள் மிகவும் அதிகமாக இருக்கின்றன. அங்கு பழைய வாகனங்களுக்கு எதிரான வேட்டை நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. வாகன உரிமையாளர்களுக்கு இதனை உணர்த்தும் வகையில் தற்போது அதிரடி நடவடிக்கை ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கடந்த அக்டோபர் 1ம் தேதியில் இருந்து அக்டோபர் 20ம் தேதி வரை 270 பழைய டீசல் மற்றும் பெட்ரோல் வாகனங்களை டெல்லி அரசின் போக்குவரத்து துறை அதிகாரிகள் அதிரடியாக பறிமுதல் செய்துள்ளனர். அதே நேரத்தில் நடப்பாண்டு ஜனவரி முதல் அக்டோபர் 20ம் தேதி வரை பறிமுதல் செய்யப்பட்ட ஒட்டுமொத்த வாகனங்களின் எண்ணிக்கை 664 ஆக உள்ளது.

10 ஆண்டுகளுக்கு மேற்பட்ட டீசல் வாகனங்கள் மற்றும் 15 ஆண்டுகளுக்கு மேற்பட்ட பெட்ரோல் வாகனங்கள் என ஒட்டுமொத்தமாக 664 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. ஜனவரி 1ம் தேதியில் இருந்து செப்டம்பர் 30ம் தேதி வரை 394 வாகனங்கள் மட்டுமே பறிமுதல் செய்யப்பட்டிருந்த நிலையில், அடுத்த 20 நாட்களில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களின் எண்ணிக்கை 270 ஆக உள்ளது.

பழைய வாகனங்களுக்கு எதிரான டெல்லி அரசின் போக்குவரத்து துறை அதிகாரிகளின் நடவடிக்கை தீவிரமடைந்து வருவதைதான் இது காட்டுகிறது. இதில், 300க்கும் மேற்பட்ட வாகனங்களை 'ஸ்கிராப்' (Scrap)செய்வதற்கான நடவடிக்கைகள், அதாவது அழிப்பதற்கான நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து துறையின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

முன்னதாக டெல்லியில், 10 ஆண்டுகளுக்கு மேற்பட்ட டீசல் வாகனங்களையும், 15 ஆண்டுகளுக்கு மேற்பட்ட பெட்ரோல் வாகனங்களையும் இயக்க வேண்டாம் என போக்குவரத்து துறை பொது அறிவிப்பை வெளியிட்டிருந்தது. அத்துடன் அங்கீகரிக்கப்பட்ட மையங்களில் அவற்றை ஸ்கிராப் செய்து விட வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டது.

அனைத்து வகையான வாகனங்களின் பதிவு சான்றிதழ்கள் (Registration Certificates - RC) 15 ஆண்டுகளுக்கு செல்லுபடியாகும் என்றாலும் கூட, டெல்லியில் 10 ஆண்டுகளுக்கு மேற்பட்ட வயதுடைய டீசல் வாகனங்களை இயக்க கூடாது. இதனையும் போக்குவரத்து துறை அதிகாரிகள் வாகன உரிமையாளர்களுக்கு தெளிவுபடுத்தியிருந்தனர்.

ஆனால் இந்த விதிமுறையை பொருட்படுத்தாமல் பலர் பழைய வாகனங்களை தொடர்ந்து டெல்லி சாலைகளில் இயக்கி வருகின்றனர். அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க அதிகாரிகள் திட்டமிட்டனர். எனினும் கோவிட்-19 பிரச்னை மற்றும் அதை தொடர்ந்து பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவுகளால் வாகனங்களை பறிமுதல் செய்யும் அதிகாரிகளின் நடவடிக்கையில் இடையூறு ஏற்பட்டது.

ஆனால் தற்போது ஓரளவிற்கு இயல்பு நிலை திரும்பியுள்ளதால், விதிமுறைகளை மீறி டெல்லியில் இயக்கப்படும் வாகனங்களை பறிமுதல் செய்யும் நடவடிக்கைகளை அதிகாரிகள் தீவிரப்படுத்தியுள்ளனர். இனி வரும் காலங்களில் அதிகாரிகளின் இந்த நடவடிக்கைகள் இன்னும் தீவிரமடையும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது பழைய வாகனங்களை இன்னமும் இயக்கி கொண்டுள்ளவர்கள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுபோன்ற நடவடிக்கைகள் தவிர, எலெக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிப்பதன் மூலமாகவும் காற்று மாசுபாடு பிரச்னையை குறைப்பதற்கு, முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான டெல்லி அரசு தீவிரமாக முயற்சி செய்து வருகிறது.

டெல்லி மட்டுமல்லாது இந்தியாவின் பல்வேறு மாநிலங்களும் தற்போது எலெக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாட்டை வெகுவாக ஊக்குவித்து வருகின்றன. அரசுகள் பல்வேறு சலுகைககள் வழங்குவதாலும், பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து கொண்டே வருவதாலும், எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு மாற பொதுமக்களும் ஆர்வமாகதான் இருக்கின்றனர்.
Note: Images used are for representational purpose only.


Click it and Unblock the Notifications








