7 பேரின் உயிரை பறித்த கார் ஹேண்ட்பிரேக்... உஷார் மக்களே!!

கார் ஓட்டும்போதும் சரி, காரை நிறுத்திவிட்டு இறங்கும்போதும் சரி, சிறிய கவனக்குறைவு கூட பெரிய விபத்துக்களை ஏற்படுத்திவிடும். அந்த விதத்தில், டெல்லி அருகே நடந்த கோர விபத்தும், கார் வைத்திருப்பவர்களுக்கு

By Saravana Rajan

கார் ஓட்டும்போதும் சரி, காரை நிறுத்திவிட்டு இறங்கும்போதும் சரி, சிறிய கவனக்குறைவு கூட பெரிய விபத்துக்களை ஏற்படுத்திவிடும். அந்த விதத்தில், டெல்லி அருகே நடந்த கோர விபத்தும், கார் வைத்திருப்பவர்களுக்கு எச்சரிக்கை தரும் சம்பவமாக அமைந்துள்ளது.

7 பேரின் உயிரை பறித்த கார் ஹேண்ட்பிரேக்... உஷார் மக்களே!!

டெல்லியை சேர்ந்தவர் ஓம் பிரகாஷ். இவரது மகனுக்கு டெல்லி அருகே உள்ள காஸியாபாத் நகரில் திருமணம் நடக்க இருந்தது. இதையடுத்து, ஓம் பிரகாஷ் தனது குடும்பத்தினர் 11 பேருடன் டாடா சுமோ காரில் காஸியாபாத் நகருக்கு சென்றனர்.

7 பேரின் உயிரை பறித்த கார் ஹேண்ட்பிரேக்... உஷார் மக்களே!!

காஸியாபாத் நகரை நெருங்கிவிட்ட நிலையில், விஜய்நகர் என்ற பகுதியில் சிறு ஓய்வுக்காக டிரைவர் காரை சாலை ஓரத்தில் நிறுத்திவிட்டு இறங்கி இருக்கிறார். அப்போது யாரும் எதிர்பாராத விதத்தில், சாலை ஓர பள்ளத்தில் கார் உருள துவங்கி இருக்கிறது.

7 பேரின் உயிரை பறித்த கார் ஹேண்ட்பிரேக்... உஷார் மக்களே!!

காரில் இருந்தவர்கள் அபய குரல் எழுப்பி கூச்சல் போட்டுள்ளனர். ஆனால், ஒரு சில வினாடிகளில் கார் அந்த கிடுகிடு பள்ளத்தில் கவிழந்து அங்கிருந்த நீர் நிலையில் கவிழ்ந்துவிட்டது.

7 பேரின் உயிரை பறித்த கார் ஹேண்ட்பிரேக்... உஷார் மக்களே!!

இந்த பயங்கர விபத்தில் காரிலிருந்த ஓம்பிரகாஷ் மற்றும் அவரது குடும்பத்தை சேர்ந்த 4 பெண்கள் மற்றும் ஒரு குழந்தை உள்பட 7 பேர் உயிரிழந்தனர். அருகிலிருந்துவர்கள் பள்ளத்தில் இறங்கி காரில் சிக்கியவர்களை மீட்டுள்ளனர்.

7 பேரின் உயிரை பறித்த கார் ஹேண்ட்பிரேக்... உஷார் மக்களே!!

மீட்கப்பட்டவர்களிடம் நடத்திய விசாரணையில் காரின் முன்புறத்தில் அமர்ந்திருந்த குழந்தை காரின் ஹேண்ட்பிரேக்கை எடுத்துவிட்டுள்ளது. அதன்பிறகே கார் நகர்ந்து பள்ளத்தில் உருண்டுவிட்டதாக தெரிவித்துள்ளனர்.

7 பேரின் உயிரை பறித்த கார் ஹேண்ட்பிரேக்... உஷார் மக்களே!!

இந்த விபத்திற்கு பின்னர், கார் டிரைவர் மாயமாகிவிட்டார். அவரை போலீசார் தேடி வருகின்றனர். இந்த சம்பவம் கார் ஓட்டுனர்களும், காரில் பயணிப்பவர்களும் எந்த நேரமும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பதை காட்டுவதாகவே இருக்கிறது.

Picture credit: Bhaskar

7 பேரின் உயிரை பறித்த கார் ஹேண்ட்பிரேக்... உஷார் மக்களே!!

ஹேண்ட்பிரேக் போட்டு நிறுத்தி வைத்திருக்கும்போது கூடவே காரை கியரில் நிறுத்தி வைப்பதும் அவசியம். புதிய கார்களில் ஹேண்ட்பிரேக் சிறப்பாக இருக்கும். ஆனால், பழைய கார்களில் ஹேண்ட்பிரேக் பற்சக்கரம் மற்றும் கேபிள் நைய்ந்து போய் இருக்கும்.

7 பேரின் உயிரை பறித்த கார் ஹேண்ட்பிரேக்... உஷார் மக்களே!!

இதனால், சிறுவர்கள் கூட ஹேண்ட்பிரேக்கை எளிதாக எடுத்துவிடும் வாய்ப்பு இருக்கிறது. காரில் குழந்தைகள் அல்லது சிறுவர்கள் இருக்கும்போது விளையாட்டாக ஹேண்ட்பிரேக்கை வைத்து ஆட வாய்ப்புண்டு.

7 பேரின் உயிரை பறித்த கார் ஹேண்ட்பிரேக்... உஷார் மக்களே!!

அதுபோன்ற சமயங்களில் அதன் அபாயத்தை புரிய வையுங்கள். குழந்தைகளாக இருப்பின், ஹேண்ட்பிரேக்கில் அவர்களது கவனம் இல்லாதவாறும் அல்லது அதனை இயக்காதவாறு பார்த்துக் கொள்வது அவசியம்.

7 பேரின் உயிரை பறித்த கார் ஹேண்ட்பிரேக்... உஷார் மக்களே!!

காரில் குழந்தைகளை விளையாட விட்டு ஷாப்பிக் செல்வதையும், வீட்டில் நிற்கும்போது குழந்தைகளை காரில் விளையாட விடுவதையும் தவிர்ப்பது அவசியம். இல்லையெனில், இதுபோன்ற விபத்துக்கள் தொடர்கதையாகிவிடும்.

7 பேரின் உயிரை பறித்த கார் ஹேண்ட்பிரேக்... உஷார் மக்களே!!

சரிவான சாலைகளில் நிறுத்தும்போது சரியாக ஹேண்ட்பிரேக் போட்டு இருக்கிறோமா என்பதை ஒன்றுக்கு இருமுறை உறுதி செய்து கொள்வது அவசியம். சில வேளைகளில் ஹேண்ட்பிரேக்கை இழுத்துவிட்ட போதிலும், ஹேண்ட்பிரேக் பிடிப்பு இல்லாமல் இருக்க வாய்ப்பு இருக்கிறது.

7 பேரின் உயிரை பறித்த கார் ஹேண்ட்பிரேக்... உஷார் மக்களே!!

ஹேண்ட்பிரேக்கை போடாததால் விபத்துக்கள் நடைபெறுவது குறித்து அண்மை காலமாக பல செய்திகளை பார்க்க முடிகிறது. வேலைப்பளூ மற்றும் மன அழுத்தம் காரணமாக, பிற வேலைகளில் கவனம் செலுத்துவதால் காரில் ஹேண்ட் பிரேக் போடுவதற்கு பலர் மறந்து செல்வதால் பல விபரீதங்கள் நடப்பது குறித்து ஏற்கனவே நாம் பல செய்திகளை வழங்கி இருக்கிறோம்.

7 பேரின் உயிரை பறித்த கார் ஹேண்ட்பிரேக்... உஷார் மக்களே!!

இனியாவது குழந்தைகள் அல்லது சிறுவர்களை காரில் அழைத்துச் செல்லும்போது மிக மிக கவனமாக இருப்பது அவசியம். இல்லையெனில், இதுபோன்ற விபரீதங்களில் சிக்கிவிடும் அபாயம் உள்ளது.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #offbeat
English summary
7 Killed As Car Rolls Down A Gorge Near Ghaziabad. Child Disengaged Hand Brake.
Story first published: Monday, April 23, 2018, 11:09 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X