அதிசயமே அசந்து போகும் வாகன உலகின் ஏழு அதிசயங்கள்!

By Saravana

ஆட்டோமொபைல் துறையின் சுவாரஸ்யங்களை அள்ளிக் கொணர்ந்து வரும் டிரைவ்ஸ்பார்க் தளத்தின் இன்றைய பிறந்தநாள் ஸ்பெஷலாக உலகின் ஏழு அதிசய வாகன விபரங்களை வழங்குகிறோம்.

உலகின் மெகா சைஸ் டிரக், விலையுயர்ந்த கார், அதிவேக ராக்கெட் கார் என்று உலகின் ஏழு அதிசய வாகனங்களின் சிறப்புகளை ஸ்லைடரில் காணலாம் வாருங்கள்.

01. அதிக மைலேஜ் தரும் கார்

01. அதிக மைலேஜ் தரும் கார்

உலகின் அதிக மைலேஜ் தரும் கார் என்ற பெருமைக்கு சொந்தக்காரன் ஃபோக்ஸ்வேகன் எக்ஸ்எல்-1 கார். விற்பனையில் இருக்கும் இந்த கார் லிட்டருக்கு 111 கிமீ மைலேஜ் தரும் என்று தெரிவிக்கப்பட்டது. இந்த காரின் சிறப்பம்சங்களை கீழே உள்ள செய்தி இணைப்பில் விரிவாக காணலாம்.

ஃபோக்ஸ்வேகன் எக்ஸ்எல்-1 காரின் மகிமைகள்...

02. உலகின் மிகப்பெரிய டிரக்

02. உலகின் மிகப்பெரிய டிரக்

இந்த பிரம்மாண்ட டிரக் ரெயின்போ ஷேக்கிற்கு சொந்தமானது. ரெயின்போ ஷேக் யார், இந்த டிரக்கின் பின்னணித் தகவல்களை கீழே உள்ள செய்தி இணைப்பில் காணலாம்.

ரெயின்போ ஷேக்கின் வாகன கலெக்ஷன்

03. ராக்கெட் கார்

03. ராக்கெட் கார்

தரையில் சக்கரங்களில் இயங்கும் வாகனங்களில் அதிவேகத்தில் செல்லும் கார் என்ற பெருமைக்குரியதுதான் எஸ்எஸ்சி. ஏற்கனவே, இருமுறை ராக்கெட் காரை செலுத்தி, அதிவேக சாதனைகளை படைத்த குழுவினர் தற்போது மூன்றாவதாக, மணிக்கு 1,600 கிமீ வேகத்தை இலக்காக கொண்டு உருவாக்கி வரும் இந்த கார் பற்றிய முழுமையான விபரங்களையும், படங்களையும் கீழே உள்ள இணைப்பில் சென்று காணலாம்.

அதிவேக சாதனைக்கான ராக்கெட் கார்

04. உலகின் விலையுயர்ந்த கார்

04. உலகின் விலையுயர்ந்த கார்

உலகின் விலையுயர்ந்த கார் என்ற பெருமை புகாட்டி வேரான் காருக்கு உண்டு. மேலும், உலகின் அதிவேக தயாரிப்பு நிலை மாடல் கார் என்ற பெருமைக்கும் உரித்தானது. இந்த காரின் சில வியத்தகு சுவாரஸ்யங்களை கீழே உள்ள இணைப்பில் சென்று படித்து மகிழுங்கள்.

புகாட்டி வேரான் காரின் வியத்தகு சுவாரஸ்யங்கள்

05. உலகின் குறுகலான கார்

05. உலகின் குறுகலான கார்

உலகின் மிக குறைவான அகலம் கொண்ட கார் மாடல் டேங்கோ. அதாவது, சாதாரண கார்களின் அகலத்தில் பாதிதான் இந்த காரின் அகலம். ஒருவர் மட்டுமே செல்லும் இன்னோவாக்களை பார்த்து எரிச்சலடைபவர்கள், இந்த காரை வாங்கி அவர்களுக்கு பாடம் புகட்டலாம். மூன்று அடி அகலம் கொண்ட இந்த கார் போக்குவரத்து நெரிசல் மிக்க நேரங்களில் மிக விரைவாக செல்வதும் ஆய்வுகள் மூலம் உறுதி செய்யப்பட்டிருக்கிறது. 8 அடி 6 இன்ச் நீளம் கொண்ட இந்த காரில் இரண்டு பேர் பயணிக்கலாம்.

உலகின் சிறிய கார்

06. உலகின் நீளமான கார்

06. உலகின் நீளமான கார்

உலகின் மிக நீளமான கார் இதுதான். 100 அடி நீளம் கொண்ட காரில் 26 சக்கரங்களை கொண்டது. இரண்டு ஓட்டுனர் கேபின்கள் உள்ளது. இது சாலையில் இயக்குவதற்கான அங்கீகாரம் இல்லை. சூரிய குளியல் செய்வதற்கான மேடை, நீச்சல் குளம், பெரிய படுக்கைகள் என உட்புறத்தில் பல்வேறு வித்தியாசமான வசதிகளை கொண்டது.

லிமோசின் அவதாரத்தில் இந்தியாவின் பிரபலமான கார்கள்

07. உலகின் கட்டுறுதியான வாகனம்

பேரமவுண்ட் மரவ்டர் என்று அழைக்கப்படும் இந்த வாகனம்தான் உலகின் மிகவும் கட்டுறுதியான வாகனங்களில் சிறப்பானதாக கருதப்படுகிறது. ராணுவம் மற்றும் பாதுகாப்புப் படையினருக்கு சிறப்பானதாக இருக்கும். 15 டன் எடையுடைய இந்த வாகனம் 7 கிலோ எடையுடைய வெடிகுண்டுகள், கண்ணி வெடி தாக்குதல்களில் கூட சேதமடையாது. 6.5 லட்சம் டாலர் விலை மதிப்பு கொண்டது. இதன் கட்டுறுதியை நாம் சொல்வதைவிட, இதன் ஆக்ரோஷத்தை வீடியோவில் பாருங்கள். நொடியில் புலப்பட்டுவிடும்.

இதர சுவாரஸ்ய செய்திகள்

01. உலகின் மிகப்பெரிய வாகனங்கள்

02. உலகின் மிகப்பெரிய சரக்கு கப்பல்

03. உலகின் மிகப்பெரிய பயணிகள் விமானம்

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #offbeat
English summary
7 Wonders of the Vehicular World.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X