அபராதம் வசூலிக்க வேண்டுமென்றே வைக்கப்படும் தவறான சாலை குறியீடுகள் ஆய்வு சொல்லும் அதிர்ச்சி தகவல்கள்
டெல்லியில் போக்குவரத்து வழிமுறைகள் பற்றி சமீபத்தில் கல்வி நிறுவனம் நடத்திய ஆய்வு ஒன்றில், பல அதிர்ச்சி கர தகவல்கள் வெளியாகியுள்ளன.
தலைநகர் டெல்லியில் 70 சதவீத சாலை குறியீடுகள் தவறாக அமைக்கப்பட்டுள்ளதாக சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.

சாலை போக்குவரத்து கல்வி நிறுவனம் மற்றும் போக்குவரத்து மேலாண்மை சார்ந்த அமைப்பு இணைந்து டெல்லியில் உள்ள அனைத்து சாலை குறியீடுகள் குறித்த ஆய்வு ஒன்றை மேற்கொண்டன.

இதில் போக்குவரத்து விதிமீறல்களை குறைப்பதற்கான தேவை, போக்குவரத்து நெரிசலுக்கான காரணி மற்றும் சாலை பாதுகாப்பு போன்றவற்றுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டன.

டெல்லியில் உள்ள சாலை குறியீடுகளில் சுமார் 70 சதவீதம், செவ்வக வடிவிலான பலகைகளில் நீலம் மற்றும் மஞ்சள் நிறங்களில் எழுத்தப்பட்டுள்ளன.

இந்த செயல்பாடுகள் அனைத்தும் ஐக்கிய நாட்டு சபை அமைத்துள்ள சாலை விதி குறியீடுகளுக்கு முற்றிலும் எதிரானதாக இருப்பதாக அந்த ஆய்வு தெரிவிக்கிறது.

போக்குவரத்து பயனாளிகளுக்கு தவறான வழிமுறைகளை காட்டி, அதற்கு அபராதம் கட்டவைக்கும் நோக்கிலே இந்த சாலை குறியீடுகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் அந்த ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தவறான வழிமுறைகளால் சாலை பயனாளிகள் ரூ.50,000 வரை அபராதம் கட்டுவதோடு மட்டுமில்லாமல், சுமார் ஒரு வருட காலம் வரை சிறை செல்லும் வாய்ப்பு இதனால் உருவாக்கப்படும் என ஆய்வு கூறுகிறது.

இதனிடையே டெல்லியில் சாலை சந்திப்புகளில் உள்ள பல சிக்னல்கள் போக்குவரத்து விதிகளின் படி சரியாக இயங்குவதில்லை என்றும் தெரியவந்துள்ளது.

முதன்மையான பகுதிகளில் மட்டுமில்லாமல், சில இரண்டாம் பட்ச பகுதிகளில் உள்ள பல சிக்னல்கள் செயல்படாமல் இருக்கும் நிலையும் உள்ளது.

அதேபோல சிக்னல் விளக்குகள் மஞ்சள் நிறத்தில் இருந்து சிவப்பு நிறத்திற்கு மாறும் நேரமும் மிகவும் குறைவாக உள்ளது.
இந்த சிக்னல் மாறுவதற்குள் சாலையை கடக்க நினைக்கும் வாகன ஓட்டிகள் போலீசாரிடம் சிக்கி அபாரதம் கட்டும் நிலையும் ஏற்படுகிறது.

இதுபற்றி சாலை போக்குவரத்து கல்வி நிறுவனத்தின் தலைவராக உள்ள ரோஹித் பல்யுஜா 70 சதவீத போக்குவரத்து கட்டுபாட்டு கருவிகள், சிக்னல்கள் உட்பட சாலை பாதுகாப்பு உபகரணங்கள் சரியான செயல்பாட்டில் இல்லை என்கிறார்.

மேலும் இந்த குறைப்பாட்டை அறியாத பொதுமக்கள் பலர் வாகனங்களை ஓட்டும்போது, சாலை விதிமீறலை செய்ய வாய்ப்பு ஏற்படுகிறது. இது நிச்சயம் பொதுமக்களின் தவறு கிடையாது என்றும் அவர் தெரிவிக்கிறார்.

பாதுகாப்பான சாலை பயணங்களுக்காக மத்திய அரசு 1988 மோட்டார் வாகன சட்டத்தை 2016ல் திருத்தி அமைத்தது.
அடுத்த கூட்டத்தொடரில் மாநிலங்களவையில் ஆளும் அரசும், எதிர்கட்சியும் முதற்கட்டமாக இந்த புதிய சட்டத்தை விவாதத்திற்கு உட்படுத்த வேண்டும்.

இதன்மூலமே நாட்டில் சாலை போக்குவரத்து தொடர்பான விஷயங்கள் வெளிவந்து, அதிலுள்ள குறைப்பாட்டை நீக்க வழிவகை செய்ய வாய்ப்புகள் அமையும்.


Click it and Unblock the Notifications








