70 வயதில் மகனுடன் இணைந்து வாங்குகிற காரா இது... ஷோரூமுக்கு குடும்பத்துடன் வந்துட்டாங்க!! காரின் விலை எவ்வளவு?

பாலிவுட் சினிமா வட்டாரத்தில் அவ்வப்போது புதுசு, புதுசாக சொகுசு கார்களை வாங்குவார்கள் என்பதை பலமுறை பார்த்துள்ளோம். இந்தியாவின் மற்ற சினிமா பிரபலங்களும் விலையுயர்ந்த வாகனங்களை வாங்கிக் குவிக்கின்றனர் என்றாலும், பாலிவுட் சினிமா துறையினர் அளவிற்கு இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். இந்த வகையில், பாலிவுட்டில் பிரபலமான நட்சத்திரங்களாக விளங்கும் அப்பா - மகன் இருவர் மார்க்கெட்டிற்கு புதியதாக வந்த மெர்சிடிஸ்-பென்ஸ் (Mercedes-Benz) காரை வாங்கி அசத்தி உள்ளனர். யார் இந்த அப்பா - மகன் நடிகர்கள் என்பதையும், அவர்கள் வாங்கியுள்ள மெர்சிடிஸ்-பென்ஸ் காரை பற்றியும் இனி இந்த தொகுப்பில் விரிவாக பார்க்கலாம், வாங்க.

மெர்சிடிஸ்-பென்ஸ், இந்தியாவின் முன்னணி லக்சரி கார் நிறுவனம். பல்வேறு விதமான சொகுசு கார்கள் மெர்சிடிஸ் நிறுவனத்தில் இருந்து இந்தியாவில் விற்பனை செய்யப்படுகின்றன. அந்த வரிசையில், சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட மெர்சிடிஸ்-பென்ஸ் கார், சி.எல்.இ கேப்ரியோலெட் (CLE Cabriolet) ஆகும். இந்த காரின் டெலிவிரிகளும் துவங்கப்பட்டுவிட்டன.

shekhar suman buys cle cabriolet

இந்த நிலையில் பாலிவுட் காமெடி நடிகரான சேகர் சுமன் மற்றும் அவரது மகனும் நடிகருமான அத்யாயன் சுமன் ஆகியோர் ஒன்றாக இணைந்து மெர்சிடிஸ்-பென்ஸ் சிஎல்இ கேப்ரியோலெட் காரை டெலிவிரி பெற்றுள்ளனர். இதில் அத்யாயன் சுமன் சினிமா பாடகரும் ஆவார். குடும்பத்துடன் இவர்கள் காரை டெலிவிரி பெறும் படங்கள் இன்ஸ்டாகிராமில் வெளியிடப்பட்டுள்ளன.

இந்தியாவில் மெர்சிடிஸ்-ஏஎம்ஜி ஜி.எல்.சி43 கூபே கார் உடன் சிஎல்இ கேப்ரியோலெட் கார் சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்தியாவில் மெர்சிடிஸ் கார்கள் வரிசையில் மெர்சிடிஸ் சி-கிளாஸ் மற்றும் இ-கிளாஸ் கார்களுக்கு இடையே புதிய சிஎல்இ கேப்ரியோலெட் நிலைநிறுத்தப்பட்டு உள்ளது. இந்த புதிய கார் இந்தியாவில் உற்பத்தி செய்யப்படவில்லை. முழுவதுமாக வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படுகிறது.

shekhar suman buys cle cabriolet

இதன் காரணமாகவே, இந்த பென்ஸ் காரின் எக்ஸ்-ஷோரூம் விலை சற்று அதிகமாக ரூ.1.10 கோடியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மெர்சிடிஸ் சி-கிளாஸ் உடன் ஒப்பிடுகையில், புதிய சிஎல்இ கேப்ரியோலெட் ஆனது நீளமானது மற்றும் பெரிய அளவிலான கிரில் பகுதியை கொண்டுள்ளது. காரின் முன்பகுதி சுறாவின் தலை போன்று உள்ளது. இதற்கேற்ப பொனெட் நன்கு நீளமானதாக சிஎல்இ கேப்ரியோலெட் காரில் கொடுக்கப்பட்டுள்ளது.

இது கேப்ரியோலெட் கார் என்பதால், காரின் மேற்கூரையை நீக்கிக் கொள்ளலாம். இதற்காக, மென்மையான துணியாலான ரூஃப் கொடுக்கப்பட்டுள்ளது. கார் முழுவதும் கருப்பு நிறத்தில் பெயிண்ட் செய்யப்பட்டு இருப்பினும், மேற்கூரை மட்டும் சிவப்பு நிறத்தில் கொடுக்கப்படுகிறது. வெறும் 20 வினாடிகளில் மேற்கூரையை திறக்க அல்லது மூட முடியும். மேலும், இந்த காரில் ரக்டான வடிவில் பம்பர்கள், பெரிய அளவில் ஏர் இண்டேக்ஸ் மற்றும் புதிய அலாய் சக்கரங்கள் உள்ளிட்டவையும் இடம்பெறுகின்றன.

shekhar suman buys cle cabriolet

மெர்சிடிஸ்-பென்ஸ் சி-கிளாஸ் காருக்குள் வழங்கப்படும் அதே கேபின் லேஅவுட் புதிய சிஎல்இ கேப்ரியோலெட் காரிலும் கொடுக்கப்பட்டுள்ளது. காருக்குள் டேஸ்போர்டில் 12.3 இன்ச்சில் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் கன்சோல் மற்றும் 11.9-இன்ச் போர்ட்ரைட் ஸ்டைலில் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் உள்ளிட்டவை வழங்கப்படுகின்றன. இந்த காருக்குள் டிரைவருக்கும் சேர்த்து மொத்தமாக 4 இருக்கைகள் மட்டுமே கொடுக்கப்படுகின்றன.

பின் இருக்கை பயணிகளுக்கு தலைக்கான ஏர்பேக் கொடுக்கப்படுகிறது. 2024 மெர்சிடிஸ்-பென்ஸ் சிஎல்இ கேப்ரியோலெட் காரில் 2.0 லிட்டர் 4-சிலிண்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் 48 வோல்ட் மைல்ட்-ஹைப்ரீட் சிஸ்டத்துடன் வழங்கப்படுகிறது. இவற்றுடன் 9-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இணைக்கப்படுகிறது. 0-இல் இருந்து 100kmph வேகத்தை வெறும் 6.6 வினாடிகளில் எட்டிவிடக்கூடிய இந்த பென்ஸ் காரின் டாப்-ஸ்பீடு 250kmph ஆகும்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: 70 வயதான நடிகர் சேகர் சுமன் ஓர் கார் பிரியர் ஆவார். ஃபியட் பத்மினி காரில் துவங்கிய கார்கள் மீதான இவரது காதல், பிஎம்டபிள்யூ ஐ7, ஹோண்டா அக்கார்ட், டொயோட்டா காம்ரி என பல விதமான கார்களிலும் தொடர்ந்தது. அந்த வரிசையில் தற்போது, மெர்சிடிஸ்-பென்ஸ் சிஎல்இ கேப்ரியோலெட் இவரது கார் கலெக்‌ஷனில் இணைந்துள்ளது. இந்த காரை இவர் மட்டும் பயன்படுத்த உள்ளாரா அல்லது இவரது மகன் அத்யாயன் சுமனும் பயன்படுத்தவுள்ளாரா என்பது தெரியவில்லை.

More from DriveSpark

Article Published On: Thursday, September 12, 2024, 23:25 [IST]
English summary
70 year old bollywood actor buys mercedes benz cle cabriolet with his son
மேலும்... #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X