70 வருஷ பழைய காருல 78 வயசு தாத்தா செய்ய கூடிய சாதனையா இதெல்லாம்.. இந்த வயசுல நாம பேப்பர படிச்சுட்டு இருப்போம்!
வயதான முதியவர் ஒருவர் மிகவும் பழைய காரைக் கொண்டு உலகின் சவாலான மலைக்கு சென்று வந்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இது கார் காதலர்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தும் வகையில் அமைந்திருக்கின்றது. சண்டிகர் மாநிலத்தைச் சேர்ந்தவர் 78 வயதான முதியவர் அமர்ஜீத் சிங் சோதி. இவரே அந்த உலகின் உயரமான சிகரத்திற்கு சென்று வந்தவர் ஆவார். அவர் கர்துங் லா-விற்கே சென்று வந்திருக்கின்றார். இங்கு மட்டுமல்ல அம்லிங் லா-விற்கும் அவர் சென்று வந்திருக்கின்றார். இவர் பயன்படுத்தியது ஃபியட் 500சி (Fiat 500C) விண்டேஜ் கார் மாடல் ஆகும்.
இது ஓர் 70 ஆண்டுகளுக்கும் அதிகமான பழைய கார் மாடல் ஆகும். மலையேற்ற பயணங்களுக்கு என்றே பிரத்யேக வாகனங்கள் சந்தையில் பல விற்பனைக்குக் கிடைக்கின்றன. உதாரணமாக, மஹிந்திரா தார் (Mahindra Thar), மாருதி சுஸுகி ஜிம்னி (Maruti Suzuki Jimny) மற்றும் போர்ஸ் கூர்கா (Force Ghurka) போன்ற கார் மாடல்களைக் கூறலாம்.

இந்த கார் மாடல்களில் ஆஃப்-ரோடு பயணங்களுக்கு என்றே பிரத்யேக தொழில்நுட்பங்கள் மற்றும் சிறப்பம்சங்கள் வழங்கப்பட்டு இருக்கும். இதனால்தான், ஆஃப்-ரோடு பயண பிரியர்களின் மனம் கவர்ந்த கார் மாடலாக இவை இருக்கின்றன. மேலும், இவையே இந்தியாவில் விற்பனைக்குக் கிடைக்கும் ஆஃப்-ரோடு பயணங்களுக்கு உகந்த கார் மாடல்களும் ஆகும்.
இந்த மாதிரியான கார்களை எல்லாம் ஓரம் தள்ளி விட்டுட்டே 78 வயதான முதியவர், தன்னுடைய 70 வருட பழைய ஃபியட் 500சி காரைக் கொண்டு மலையேற்ற பயணத்திற்குச் சென்றிருக்கின்றார். இதனால்தான் ஒட்டுமொத்த வாகன ஆர்வலர்களும் அவரை மிகுந்த ஆச்சரியத்துடன் பார்க்கத் தொடங்கி இருக்கின்றனர்.

அவர் பயணித்தது இரண்டுமே ஆபத்து மற்றும் சவால்கள் நிறைந்த பாதையைக் கொண்ட சிகரங்கள் ஆகும். இந்த சாலையில் செல்வதற்கு இன்றைய நவீன கால கார்களே மிகுந்த சிரமம்களுக்கு ஆளாகும் என்பது கவனிக்கத்தகுந்தது. இத்தகைய பாதையிலேயே அமர்ஜீத் சிங் சோதி சர்வசாதாரணமாக சென்று திரும்பி இருக்கின்றார்.
அம்லிங் லா மற்றும் கர்துங் லா இவை இரண்டும் உலகில் உள்ள மிக உயரமான சிகரங்கள் ஆகும். வாகனங்கள் பயணிக்க சற்றும் ஏதுவான அமைப்பைக் கொண்டிராத ஓர் சிகரமே இவை ஆகும். இதனால்தான், பயண பிரியர்கள் பலர் இங்கு மிகுந்த ஆர்வத்துடன் சென்றுக் கொண்டிருக்கின்றனர்.
இந்த இரண்டிற்கும் அவர் சென்று வர அவருக்கு சுமார் 15 நாட்கள் ஆனதாகக் கூறப்படுகின்றது. இந்த குறைவான நாட்களிலேயே 70க்கும் அதிகமான ஆண்டுகள் பழைய காரில் சண்டிகரைச் சேர்ந்த வயதான முதியவர் சென்று வந்திருக்கின்றார். குறிப்பாக, கர்துங் லா-வின் உச்சியை அவர் ஐந்தே நாட்களில் அடைந்திருக்கின்றார்.
இந்த பயணத்தில் விண்டேஜ் கார் பஞ்சர் போன்ற சிறு பிரச்னையில்கூட சிக்காமல் பயணித்து இருப்பதுதான் ஆச்சரியத்தின் உச்சமே. இந்த காரை தான் ஓர் மருத்துவரிடம் இருந்து வாங்கியதாகவும், இதுவே தன்னுடைய முதல் கார் என்றும் அமர்ஜித் சிங் சோதி தெரிவித்துள்ளார். மேலும், இந்த காரை தான் சுமார் 50 ஆண்டுகளாக பயன்படுத்தி வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
கர்துங் லா மற்றும் அம்லிங் லா ஆகியவற்றிற்கு மட்டுமல்ல இந்த விண்டேஜ் காரைக் கொண்டு இன்னும் பல மலைப் பகுதிகளுக்கு சோதி பயணித்திருப்பதாகக் கூறப்படுகின்றது. இந்த தகவலை அவரே சமீபத்தில் ஓர் யுட்யூப் சேனலுக்கு அளித்த பேட்டியின் வாயிலாக தெரியப்படுத்தி இருக்கின்றார்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: விண்டேஜ் காரை பலரும் அழகிற்காகவும், தங்களின் பெருமைக்காகவும் பயன்படுத்தி வரும் சூழலில் 78 வயது முதியவர் சாதனைப் படைப்பதற்காகவே பயன்படுத்தி வருகின்றார் என்பது ஆச்சரியமளிக்கும் வகையில் அமைந்திருக்கின்றது. நம்மில் பலர் இந்த வயதில் ஓய்வு பெற்றுவிட்டு, வீட்டில் அமர்ந்து பேப்பர் படிக்கவே ஆசைப்படுவோம். இவர்களில் மாறுபட்டவராக சோதி உள்ளார்.


Click it and Unblock the Notifications








