வெள்ளத்தில் மூழ்கிய பாலத்தில் ஓடி ஆம்புலன்சுக்கு வழி காட்டிய சிறுவன்! உயிரை பணயம் வைத்த வீடியோ வைரல்

குழந்தைகளின் உயிரை காப்பாற்றுவதற்காக வெள்ளத்தில் மூழ்கிய பாலத்தின் மீது துணிச்சலாக ஓடி ஆம்புலன்சுக்கு வழி காட்டிய சிறுவனுக்கு வீரதிர விருது வழங்கப்பட்டுள்ளது. அந்த சிறுவன் தன் உயிரை பணயம் வைத்த வீடியோ காட்டு தீயாய் பரவி வருகிறது.

வெள்ளத்தில் மூழ்கிய பாலத்தில் ஓடி ஆம்புலன்சுக்கு வழி காட்டிய சிறுவன்! உயிரை பணயம் வைத்த வீடியோ வைரல்

இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் தற்போது கன மழை பெய்து வருகிறது. குறிப்பாக கேரளா, கர்நாடகா உள்ளிட்ட தென் இந்திய மாநிலங்களில் கன மழை கொட்டி தீர்த்து கொண்டுள்ளது. இதனால் கேரளா மற்றும் கர்நாடக மாநிலங்களின் பல்வேறு மாவட்டங்கள் வெள்ளக்காடாய் மாறியுள்ளன. அங்கு மீட்பு பணிகள் துரித கதியில் நடைபெற்று வருகின்றன.

வெள்ளத்தில் மூழ்கிய பாலத்தில் ஓடி ஆம்புலன்சுக்கு வழி காட்டிய சிறுவன்! உயிரை பணயம் வைத்த வீடியோ வைரல்

தமிழகத்தை எடுத்து கொண்டால், நீலகிரி மாவட்டம் மிக கடுமையான பாதிப்பை சந்தித்துள்ளது. பொதுவாக மழைக்காலங்களில் சாலைகளில் அதிகப்படியான தண்ணீர் தேங்கி நிற்கும். அத்தகைய சாலைகளில் வாகனங்களை இயக்குவது மிகவும் கடினமானது. அது மிகவும் ஆபத்தானதும் கூட. குறிப்பாக மழைக்காலங்களில் பாலங்களை தண்ணீர் மூழ்கடித்து விடும்.

வெள்ளத்தில் மூழ்கிய பாலத்தில் ஓடி ஆம்புலன்சுக்கு வழி காட்டிய சிறுவன்! உயிரை பணயம் வைத்த வீடியோ வைரல்

மழை நீரில் மூழ்கி விடுவதால், பாலம் இருப்பதே கண்ணுக்கு தெரியாது. வெள்ள நீரில் மூழ்கிய பாலங்களை வாகனங்களில் கடப்பது மிகவும் சவாலானது. ஆனால் அப்படிப்பட்ட பாலம் ஒன்றை ஆம்புலன்ஸ் வாகனம் ஒன்று சமீபத்தில் வெற்றிகரமாக கடந்துள்ளது. 12 வயது மட்டுமே நிரம்பிய ஒரு சிறுவன்தான் இதற்கு முக்கியமான காரணம்.

வெள்ளத்தில் மூழ்கிய பாலத்தில் ஓடி ஆம்புலன்சுக்கு வழி காட்டிய சிறுவன்! உயிரை பணயம் வைத்த வீடியோ வைரல்

பொதுவாக நமது நாட்டில் அவசரமாக செல்லும் ஆம்புலன்ஸ்களுக்கு வழி விடுபவர்களை காண்பதே அரிதாக உள்ளது. இப்படிப்பட்ட ஒரு சூழலில், மழை வெள்ளத்தில் மூழ்கிய பாலம் ஒன்றை ஆம்புலன்ஸ் வெற்றிகரமாக கடக்க 12 வயதே நிரம்பிய ஒரு சிறுவன் உதவி செய்துள்ளார். அதுவும் தனது உயிரை பணயம் வைத்து இந்த காரியத்தை அவர் செய்துள்ளார்.

வெள்ளத்தில் மூழ்கிய பாலத்தில் ஓடி ஆம்புலன்சுக்கு வழி காட்டிய சிறுவன்! உயிரை பணயம் வைத்த வீடியோ வைரல்

கர்நாடக மாநிலம் ராய்ச்சூர் அருகே உள்ள ஹிர்ரெர்யானகும்பி என்னும் கிராமத்தில் பாலம் ஒன்று உள்ளது. ஆனால் அங்கு தொடர்ந்து பெய்து வரும் கன மழையால் வெள்ள நீரில் பாலம் மூழ்கி விட்டது. இந்த சூழலில், கடந்த ஆகஸ்ட் 10ம் தேதியன்று அங்கு ஆம்புலன்ஸ் ஒன்று வந்தது. உடல் நலம் பாதிக்கப்பட்டு உயிருக்கு போராடி கொண்டிருந்த குழந்தைகளை அந்த ஆம்புலன்ஸ் ஏற்றி வந்ததாக கூறப்படுகிறது.

வெள்ளத்தில் மூழ்கிய பாலத்தில் ஓடி ஆம்புலன்சுக்கு வழி காட்டிய சிறுவன்! உயிரை பணயம் வைத்த வீடியோ வைரல்

அத்துடன் உயிரிழந்த பெண் ஒருவரின் உடலும் அந்த ஆம்புலன்ஸில் இருந்தாக தகவல்கள் தெரிவிக்கின்றன. எனவே ஆம்புலன்ஸ் அவசரமாக மருத்துவமனைக்கு சென்றாக வேண்டிய கட்டாயத்தில் இருந்தது. ஆனால் பாலம் மூழ்கி இருந்ததால், ஆம்புலன்ஸ் டிரைவர் செய்வதறியாமல் திகைத்து நின்றார். அப்போது அந்த இடத்தில் சிறுவர்கள் சிலர் விளையாடி கொண்டிருந்தனர்.

வெள்ளத்தில் மூழ்கிய பாலத்தில் ஓடி ஆம்புலன்சுக்கு வழி காட்டிய சிறுவன்! உயிரை பணயம் வைத்த வீடியோ வைரல்

அவர்களிடம் ஆம்புலன்ஸ் பாலத்தை கடக்க முடியுமா? என அதன் டிரைவர் கேட்டுள்ளார். நிலைமையின் தீவிரத்தை புரிந்து கொண்ட வெங்கடேஷ் என்ற 12 வயது சிறுவன் ஆம்புலன்ஸ் வாகனத்திற்கு உதவ முன்வந்தார். இதன்பின் வெள்ளத்தில் மூழ்கிய பாலத்தின் மீது வெங்கடேஷ் தைரியமாக வழி காட்டி கொண்டே ஓடினார். அவரை பின் தொடர்ந்து ஆம்புலன்ஸ் டிரைவர் வாகனத்தை செலுத்தினார்.

வெள்ளத்தில் மூழ்கிய பாலத்தில் ஓடி ஆம்புலன்சுக்கு வழி காட்டிய சிறுவன்! உயிரை பணயம் வைத்த வீடியோ வைரல்

ஆம்புலன்ஸ்க்கு முன்னால் வெங்கடேஷ் வழி காட்டி கொண்டே ஓடியதால், அந்த வாகனத்தால் பாலத்தை கடந்து செல்ல முடிந்தது. வேறு யாருக்கும் இந்த துணிச்சல் வருமா? என்பது தெரியவில்லை. வெங்கேடஷ் மிகவும் சமயோசிதமாக செயல்பட்டுள்ளார். அத்துடன் ஆம்புலன்ஸின் உள்ளே இருந்தவர்களின் உயிரை காப்பாற்றவும் அவர் உதவி செய்துள்ளார்.

வெள்ளத்தில் மூழ்கிய பாலத்தில் ஓடி ஆம்புலன்சுக்கு வழி காட்டிய சிறுவன்! உயிரை பணயம் வைத்த வீடியோ வைரல்

சிறுவன் வெங்கடேஷ் உள்ளூரில் உள்ள அரசு பள்ளி ஒன்றில் 7ம் வகுப்பு படித்து வருகிறார். இந்த சூழலில் சம்பவ இடத்தில் எடுக்கப்பட்ட வீடியோ ஒன்று சமூக வலை தளங்களில் உடனடியாக பரவ தொடங்கியது. எனவே சிறுவன் வெங்கடேஷ் ஒரே நாளில் ஹீரோவாக உருவெடுத்து விட்டார். அவரது துணிச்சலான செயலை கீழே உள்ள வீடியோவில் நீங்கள் காணலாம்.

இதனிடையே மூத்த ஐஏஎஸ் அதிகாரியான கேப்டன் மணிவண்ணன் என்பவர், சிறுவன் வெங்கடேஷை இந்த ஆண்டுக்கான வீரதீர செயலுக்கான விருதுக்காக குழந்தைகள் நலத்துறைக்கு பரிந்துரை செய்தார். இதன் பேரில் மாநில அரசு சிறுவன் வெங்கடேசுக்கு விருது வழங்கி கௌரவித்துள்ளது. நேற்று (ஆகஸ்ட் 15) நடைபெற்ற சுதந்திர தின விழாவில் அவர் பாராட்டப்பட்டார்.

வெள்ளத்தில் மூழ்கிய பாலத்தில் ஓடி ஆம்புலன்சுக்கு வழி காட்டிய சிறுவன்! உயிரை பணயம் வைத்த வீடியோ வைரல்

பொதுவாக வெள்ளம் காரணமாக சாலைகள் கடுமையான பாதிப்பிற்கு உள்ளாகின்றன. வெள்ளத்தில் மூழ்கி போன சாலைகளில் வாகனங்களை செலுத்தும்போது கவனமாக இருங்கள். கூடுமான வரை அத்தகைய சாலைகளை தவிர்த்து விடுங்கள். அப்படிப்பட்ட சாலைகளில் சென்றால் என்ன நடக்கும் என்பதற்கு சமீபத்தில் மும்பையில் நடைபெற்ற ஒரு சம்பவம் உதாரணம்.

வெள்ளத்தில் மூழ்கிய பாலத்தில் ஓடி ஆம்புலன்சுக்கு வழி காட்டிய சிறுவன்! உயிரை பணயம் வைத்த வீடியோ வைரல்

மும்பை நகரில் சமீபத்தில் 2 பேர் மஹிந்திரா ஸ்கார்பியோ காரில் பயணித்து கொண்டிருந்தனர். அப்போது அங்கிருந்த சுரங்க பாதையில் அளவுக்கு அதிகமான தண்ணீர் தேங்கியிருந்தது. இதனை பெரிதாக எடுத்து கொள்ளாமல் அவர்கள் காரை செலுத்தினர். ஆனால் எதிர்பாராத விதமாக கார் சிக்கி கொண்டது. எனவே காரை விட்டு வெளியே வர அவர்கள் முயன்றனர்.

வெள்ளத்தில் மூழ்கிய பாலத்தில் ஓடி ஆம்புலன்சுக்கு வழி காட்டிய சிறுவன்! உயிரை பணயம் வைத்த வீடியோ வைரல்

ஆனால் அவர்களால் வெளியே வர முடியவில்லை. இதனால் காருக்கு உள்ளேயே சிக்கி அவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். காரின் எலெக்ட்ரிக்கல் சிஸ்டம் செயலிழந்ததால்தான் அவர்களால் காரை விட்டு வெளியே வர முடியவில்லை என தகவல்கள் வெளியாயின. ஆனால் மழைக்காலங்களில் வாகனங்களில் பயணிக்கும்போது மிகுந்த எச்சரிக்கையுடன் இருங்கள்.

வெள்ளத்தில் மூழ்கிய பாலத்தில் ஓடி ஆம்புலன்சுக்கு வழி காட்டிய சிறுவன்! உயிரை பணயம் வைத்த வீடியோ வைரல்

அதே நேரத்தில் மழை காரணமாக சாலைகள் குண்டும், குழியுமாக மாறியிருக்கும். அதன் மேற்பரப்பிலும் தண்ணீர் இருக்கும் என்பதால், குழிகள் உங்கள் கண்களுக்கு புலப்படாது. எனவே அதுபோன்ற சாலைகளில் செல்லும்போது வாகனத்திற்கு பெருத்த சேதம் ஏற்படும் என்பதையும் நினைவில் கொள்ளுங்கள்.

வெள்ளத்தில் மூழ்கிய பாலத்தில் ஓடி ஆம்புலன்சுக்கு வழி காட்டிய சிறுவன்! உயிரை பணயம் வைத்த வீடியோ வைரல்

ஒருவேளை வெள்ளம் சூழ்ந்த சாலைகளில் செல்லும்போது உங்கள் வாகனம் திடீரென நின்று விட்டால், அதனை மீண்டும் ஸ்டார்ட் செய்ய ஒருபோதும் முயற்சி செய்யாதீர்கள். நீங்கள் அவ்வாறு செய்தால், இன்ஜின் நிரந்தரமாக சேதமடைந்து விடும் என்பதை மனதில் நிறுத்துங்கள்.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
7th Class Student Guides Ambulance On Flooded Bridge In Karnataka: Viral Video. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X