7ல் தொடங்கி 7ல் முடியும்... போயிங் விமானங்களின் பெயர்களுக்கு பின்னால் உள்ள சிதம்பர ரகசியம்... என்னனு தெரியுமா?

போயிங் நிறுவனத்தின் அனைத்து விமானங்களுக்கும் ஏன் 7ல் தொடங்கி 7ல் முடிவடையும் வகையில் பெயர் சூட்டப்படுகிறது? என்பதற்கான காரணத்தை இந்த செய்தியில் பார்க்கலாம்.

7ல் தொடங்கி 7ல் முடியும்... போயிங் விமானங்களின் பெயர்களுக்கு பின்னால் உள்ள சிதம்பர ரகசியம்... என்னனு தெரியுமா?

நம் அனைவருக்கும் போயிங் (Boeing) நிறுவனத்தை பற்றி நன்றாக தெரியும். தெரியாதவர்களுக்காக ஒரு சிறிய அறிமுகம். உலக அளவில் விமான உற்பத்தியில் முன்னணியில் உள்ள நிறுவனங்களில் ஒன்றுதான் போயிங். அமெரிக்காவை சேர்ந்த போயிங் நிறுவனம், கடந்த 1916ம் ஆண்டு தொடங்கப்பட்டது. போயிங் நிறுவனம் தொடங்கப்பட்டு ஒரு நூற்றாண்டு கடந்து விட்டது.

7ல் தொடங்கி 7ல் முடியும்... போயிங் விமானங்களின் பெயர்களுக்கு பின்னால் உள்ள சிதம்பர ரகசியம்... என்னனு தெரியுமா?

விமானங்கள் மட்டுமின்றி, ராக்கெட்கள், செயற்கைகோள்கள் மற்றும் ஏவுகணைகள் ஆகியவற்றையும் கூட போயிங் தயாரித்து விற்பனை செய்து கொண்டுள்ளது. குறிப்பாக போயிங் நிறுவனத்தின் விமானங்கள் உலகளவில் மிகவும் பிரபலமாக உள்ளன. வணிக ரீதியில் பயன்படுத்தப்படும் பயணிகள் விமானங்கள் மட்டுமின்றி, உலக தலைவர்களுக்காகவும் பிரத்யேகமான விமானங்களை போயிங் தயாரிக்கிறது.

7ல் தொடங்கி 7ல் முடியும்... போயிங் விமானங்களின் பெயர்களுக்கு பின்னால் உள்ள சிதம்பர ரகசியம்... என்னனு தெரியுமா?

இந்தியாவின் குடியரசு தலைவர், குடியரசு துணை தலைவர் மற்றும் பிரதமர் ஆகியோரும் கூட போயிங் நிறுவனத்தின் விமானத்தில்தான் பயணம் செய்து வருகின்றனர். இவர்கள் முதலில் போயிங் 747 விமானங்களை பயன்படுத்தி வந்தனர். அதன்பின் போயிங் 777 விமானங்களுக்கு அவர்கள் மாறியிருக்கின்றனர்.

7ல் தொடங்கி 7ல் முடியும்... போயிங் விமானங்களின் பெயர்களுக்கு பின்னால் உள்ள சிதம்பர ரகசியம்... என்னனு தெரியுமா?

இங்கே ஒரு விஷயத்தை கவனித்தீர்களா? போயிங் நிறுவனத்தின் விமானங்களின் பெயர்கள் 7ல் ஆரம்பித்து 7ல் முடிவடைகிறது. போயிங் நிறுவனத்தின் அனைத்து விமானங்களுக்கும் 7ல் தொடங்கி 7ல் முடிவடையும் வகையில்தான் பெயர் சூட்டப்பட்டுள்ளது. போயிங் நிறுவனம் தனது விமானங்களுக்கு ஏன் இப்படி பெயர் சூட்டுகிறது? என்பதைதான் இந்த செய்தியில் பார்க்க போகிறோம்.

7ல் தொடங்கி 7ல் முடியும்... போயிங் விமானங்களின் பெயர்களுக்கு பின்னால் உள்ள சிதம்பர ரகசியம்... என்னனு தெரியுமா?

ஆரம்பத்தில் போயிங் நிறுவனம் ராணுவத்திற்கு தேவையான விமானங்களை தயாரிக்கும் நிறுவனமாகதான் இருந்தது. ஆனால் இரண்டாம் உலகப்போருக்கு பின்னர், வர்த்தக ரீதியில் பயன்படுத்தப்படும் பயணிகள் விமானங்கள் சந்தையிலும் களமிறங்குவது என முடிவு செய்தது. அதே நேரத்தில் தனது தயாரிப்புகளுக்கு குறிப்பிட்ட எண்களை வழங்குவது எனவும் போயிங் நிறுவனம் முடிவெடுத்தது.

7ல் தொடங்கி 7ல் முடியும்... போயிங் விமானங்களின் பெயர்களுக்கு பின்னால் உள்ள சிதம்பர ரகசியம்... என்னனு தெரியுமா?

இதன்படி 300கள் மற்றும் 400களை விமானங்களை குறிக்கவே தொடர்ந்து பயன்படுத்துவது என்று போயிங் நிறுவனம் முடிவு செய்தது. அதே சமயம் டர்பைன் இன்ஜின்களுக்கு 500களையும், ராக்கெட்கள் மற்றும் ஏவுகணைகளுக்கு 600களையும் பயன்படுத்துவதற்கு போயிங் நிறுவனம் முடிவு செய்தது. போயிங் நிறுவனத்தின் புதிய தயாரிப்பான ஜெட் போக்குவரத்து விமானங்களுக்கு 700கள் ஒதுக்கப்பட்டன.

7ல் தொடங்கி 7ல் முடியும்... போயிங் விமானங்களின் பெயர்களுக்கு பின்னால் உள்ள சிதம்பர ரகசியம்... என்னனு தெரியுமா?

இந்த கொள்கையின்படி போயிங் நிறுவனத்தின் முதல் ஜெட் போக்குவரத்து விமானத்திற்கு போயிங் 700 என பெயர் சூட்டப்பட்டது. ஆனால் போயிங் நிறுவனத்தின் மார்க்கெட்டிங் துறை இந்த பெயரை விரும்பவில்லை. இந்த பெயர் கவர்ச்சியாக இல்லை என மார்க்கெட்டிங் துறை கூறியது. அத்துடன் 707 என பெயரை மாற்றும்படி பரிந்துரையும் செய்தது.

7ல் தொடங்கி 7ல் முடியும்... போயிங் விமானங்களின் பெயர்களுக்கு பின்னால் உள்ள சிதம்பர ரகசியம்... என்னனு தெரியுமா?

இதன்படி போயிங் நிறுவனமும் 707 என்ற பெயரையே சூட்டியது. 707 வெற்றிகரமாக அறிமுகம் செய்யப்பட்ட பிறகு, அதற்கு அடுத்த ஜெட் போக்குவரத்து விமானங்களுக்கு 727, 737 என்ற பெயர்கள் சூட்டப்பட்டன. இதன் பின்னர் இந்த நடைமுறையேயே போயிங் நிறுவனம் பின்பற்ற தொடங்கியது. போயிங் நிறுவனத்தின் அனைத்து விமானங்களுக்கும் 7X7 கொள்கையின் அடிப்படையில்தான் பெயர் சூட்டப்படுகிறது.

7ல் தொடங்கி 7ல் முடியும்... போயிங் விமானங்களின் பெயர்களுக்கு பின்னால் உள்ள சிதம்பர ரகசியம்... என்னனு தெரியுமா?

அதாவது போயிங் நிறுவனத்தின் விமானங்களின் பெயர்கள் 7ல் தொடங்கி 7ல் முடிவடையும். நாம் ஏற்கனவே கூறியபடி இந்த 7X7 கொள்கையின் அடிப்படையில் பெயர் சூட்டப்பட்ட முதல் போயிங் விமானம் 707தான். அதன்பின் போயிங் நிறுவனத்தின் மற்ற விமானங்களுக்கும் இந்த 7X7 கொள்கை அடிப்படையிலேயே பெயர்கள் சூட்டப்பட்டு வருகின்றன.

Most Read Articles

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
7X7 Principle: How Are Boeing Airplanes Named - We Explain. Read in Tamil
Story first published: Saturday, March 27, 2021, 18:09 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X