இந்தியர்களின் மனதில் நீங்கா இடம்பிடித்த 8 சிறந்த பழைய கார்கள்!

இந்தியர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்த 8 சிறந்த கார்களின் விபரங்களை காணலாம்.

மாதத்திற்கு 5 கார்கள் என்ற சராசரியில் இப்போது புதிய கார்கள் அறிமுகமாகி வருகின்றன. அட்டகாசமான டிசைன், நவீன தொழில்நுட்ப அம்சங்களை பெற்றிருந்தாலும், மார்க்கெட்டில் இருந்த சில கார்கள் நம் மனதில் ரீங்காரமிட்டு கொண்டிருக்கும். அவ்வாறான சில கார் மாடல்களை இந்த செய்தியில் காணலாம்.

01. ஹூண்டாய் சான்ட்ரோ

01. ஹூண்டாய் சான்ட்ரோ

முதல் தலைமுறை ஹூண்டாய் சான்ட்ரோ கார் இந்தியர்களை அவ்வளவாக கவரவில்லை என்றாலும், அடுத்து வந்த சான்ட்ரோ கார்கள் இந்தியர்களை வசியம் செய்து விட்டன. பட்ஜெட் கார்களில் மிகவும் பிரிமியமான அம்சங்களுடன் வாடிக்கையாளர்களை வசீகரித்தது.

இந்தியர்களின் மனதில் நீங்கா இடம்பிடித்த 8 சிறந்த கார்கள்!

மாருதி வேகன் ஆர் காருக்கு நேர் போட்டியாக இருந்த இந்த கார் மார்க்கெட்டில் மிக நீண்ட காலமாக இருந்ததால், புதிய கார்களின் உற்பத்திக்கு வழி விடும் வகையில் ஹூண்டாய் நிறுவனம் இந்த காரை விலக்கிக் கொண்டது. பழைய கார் மார்க்கெட்டில் அதிக ரீசேல் மதிப்புமிக்க கார் மாடலாகவும் இருந்தது. இந்த கார் மீண்டும் வருமா என்று பலரிடம் எதிர்பார்ப்பு இருக்கிறது.

இந்தியர்களின் மனதில் நீங்கா இடம்பிடித்த 8 சிறந்த கார்கள்!

இந்தியாவிலேயே உருவாக்கப்பட்ட எஸ்யூவி ரக கார் இது. இந்த காரின் டிசைன் மிகவும் தனித்துவமானது. கம்பீரமான இந்த கார் பல இந்தியர்களின் வீடுகளை அலங்கரித்தது. நகைச்சுவை புயல் வடிவேலுவின் முதல் கார் என்பதும் கூடுதல் தகவல்.

இந்தியர்களின் மனதில் நீங்கா இடம்பிடித்த 8 சிறந்த கார்கள்!

இந்த காரில் 90 எச்பி பவரை அளிக்க வல்ல 2.0 லிட்டர் டர்போ டீசல் எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. மேலும், 4 வீல் டிரைவ் சிஸ்டம் கொண்ட மாடலும் இருந்தது. அட்ஜெஸ்ட்டபிள் ஸ்டீயரிங், பவர் விண்டோஸ், பவர் ஸ்டீயரிங் மற்றும் டாக்கோமீட்டர் உள்ளிட்ட வசதிகளை அக்காலத்திலேயே பெற்றிருந்தது. எஸ்யூவி கார்களுக்கான வரவேற்பு மிக உச்சத்தில் இருக்கும் இவ்வேளையில் பல எஸ்யூவி பிரியர்கள் இந்த காரை மேம்படுத்தி அறிமுகம் செய்தால் வாங்க தயாராக இருக்கின்றனர்.

Recommended Video

New Maruti Swift Launch: Price; Mileage; Specifications; Features; Changes
 03. அம்பாசடர்

03. அம்பாசடர்

இந்தியாவின் பட்டி தொட்டிகளை அலங்கரித்த மாடல் அம்பாசடர். இங்கிலாந்தை சேர்ந்த மோரிஸ் ஆக்ஸ்போர்டு சீரிஸ்- III காரின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட மாடல். 1958ம் ஆண்டு முதல் 2014ம் ஆண்டு வரை இந்தியாவில் உற்பத்தியில் இருந்தது.

இந்தியர்களின் மனதில் நீங்கா இடம்பிடித்த 8 சிறந்த கார்கள்!

இந்த காரில் 1.5 லிட்டர் டீசல் எஞ்சின், 2.0 லிட்டர் டர்போ டீசல் எஞ்சின் மற்றும் 1.8 லிட்டர்ர இஸுகி பெட்ரோல் எஞ்சின் ஆப்ஷன்களில் கிடைத்தது. கால மாற்றத்துக்கு தக்கவாறு இந்த காரை மேம்படுத்த தவறியதே, அம்பாசடர் சந்தைப் போட்டியை தாக்குப் பிடிக்க முடியாமல் விலகியது. எனினும், அம்பாசடரை மேம்படுத்தி அறிமுகம் செய்தால், வாங்குவதற்கு பலர் காத்துக் கிடக்கின்றனர் என்பதே உண்மை.

04. மிட்சுபிஷி பஜேரோ

04. மிட்சுபிஷி பஜேரோ

இந்திய ஆஃப்ரோடு பிரியர்கள் மத்தியில் பெரும் ஈர்ப்பை பெற்றிருந்த மாடல் மிட்சுபிஷி பஜேரோ எஸ்யூவி. நாம் இங்கே குறிப்பிட்டு பேசிக் கொண்டிருப்பது இரண்டாம் தலைமுறை மாடல். இந்தியாவில் பஜேரோ எஸ்எஃப்எக்ஸ் என்ற பெயரில் விற்பனையில் இருந்தது.

இந்தியர்களின் மனதில் நீங்கா இடம்பிடித்த 8 சிறந்த கார்கள்!

முரட்டுத்தனமான தோற்றம், வசதியான உள்பக்க அமைப்பு, 4 வீல் டிரைவ் சிஸ்டம் போன்ற அம்சங்களுடன் கவர்ந்து இழுத்தது. இந்த எஸ்யூவியின் தலைமுறை மாற்றமாக சில ஆண்டுகளுக்கு முன் மிட்சுபிஷி பஜேரோ ஸ்போர்ட் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது. ஆனால், பழைய பஜேரோவில் இருந்த அந்த உண்மையான ஈர்ப்பு இந்த மாடலில் இல்லை என்றே கூறலாம்.

 05. கான்டெஸ்ஸா

05. கான்டெஸ்ஸா

அந்த காலத்தில் இந்தியாவின் மஸில் ரக கார் மாடலாக கான்டெஸ்ஸாவை கார் பிரியர்கள் வர்ணிப்பதுண்டு. வாக்ஸ்ஹால் விக்டர் காரின் ரீ-பேட்ஜ் செய்யப்பட்ட மாடல்தான் கான்டெஸ்ஸா.

இந்தியர்களின் மனதில் நீங்கா இடம்பிடித்த 8 சிறந்த கார்கள்!

இந்த காரின் கேபின் மிக சொகுசான அனுபவத்தை வழங்க வல்லது. அந்த காலத்தில் டாக்டர்களின் சொகுசு கார் மாடலாக வலம் வந்தது. இந்த காரும் இந்தியர்களின் மனதில் சிம்மாசனம் போட்டு அமர்ந்துள்ளது. மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா விரும்பி பயன்படுத்திய கார்களில் ஒன்று.

 06. மாருதி 800

06. மாருதி 800

அம்பாசடர் என்ற பிம்பத்திலிருந்து இந்தியர்களுக்கு புது சுவையூட்டிய முதல் கார் மாடல் மாருதி 800. இன்றைக்கும் பலரின் முதல் கார் மாடல் எது என்று கேட்டவுடன் சட்டென மாருத 800 கார்தான் வரும்.

இந்தியர்களின் மனதில் நீங்கா இடம்பிடித்த 8 சிறந்த கார்கள்!

அடக்கமான வடிவமைப்பு, சிறப்பான மைலேஜ், அம்பாசடரை சொகுசான பயணம் என்று நவீன யுகத்திற்கு பிள்ளையார் சுழி போட்ட மாடல் மாருதி 800. சில ஆண்டுகளுக்கு முன் அம்பாசடர் காரை போலவே விற்பனையில் இருந்து விலக்கப்பட்டது.

07. ஃபோர்டு ஐகான்

07. ஃபோர்டு ஐகான்

அமெரிக்காவை சேர்ந்த ஃபோர்டு நிறுவனத்திற்கு இந்தியாவில் அடையாளத்தை தந்த மாடல். ஃபோர்டு ஐகான் வைத்திருப்பது அந்தஸ்தின் அடையாளமாகவே பார்க்கப்பட்டது. 2001 முதல் 2011ம் ஆண்டு வரை இந்தியாவில் உற்பத்தி செய்யப்பட்டது. இந்த காரின் மிக முக்கிய விஷயம், இதன் சிறப்பான கையாளுமைதான்.

இந்தியர்களின் மனதில் நீங்கா இடம்பிடித்த 8 சிறந்த கார்கள்!

இந்த காரில் 74 பிஎச்பி பவரை அளிக்க வல்ல 1.3 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மற்றும் 94 பிஎச்பி பவரை அளிக்க வல்ல 1.6 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மற்றும் 94 பிஎச்பி பவரை அளிக்க வல்ல 1.8 லிட்டர் டீசல் எஞ்சின் மாடல்களில் விற்பனை செய்யப்பட்டது. இந்த காரின் சிறப்புகள் வாடிக்கையாளர் மனதில் ஏற்படுத்திய வடு அவ்வளவு சீக்கிரத்தில் அழியாது.

08. டொயோட்டா குவாலிஸ்

08. டொயோட்டா குவாலிஸ்

நடிகை ஜோதிகாவுக்கு மட்டுமல்ல, அனைவரின் நெஞ்சில் ஆழப்பதிந்த கார் மாடல். நம்பகமான எஞ்சின், இடவசதி, சொகுசு என பல விதத்திலும் நிறைவை தந்த மாடல். லட்சக்கணக்கான கிலோமீட்டர்களை தாண்டி ஓடிய குவாலிஸ் கார்களின் கதைகள் ஏராளம்.

2000ம் ஆண்டு இந்தியாவில் டொயோட்டாவின் முதல் கார் மாடலாக வெளியிடப்பட்டது. அதிலிருந்து 2005ம் ஆண்டு இந்தியாவில் விற்பனை இருந்த குவாலிஸ் காரின் விற்பனைக்கு திடீரென முற்றுப்புள்ளி வைத்தது டொயோட்டா. இது குவாலிஸ் ரசிகர்கள் மத்தியில் பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியது.

இந்தியர்களின் மனதில் நீங்கா இடம்பிடித்த 8 சிறந்த கார்கள்!

குவாலிஸ் காருக்கு மாற்றாக வந்த இன்னோவாவை உடனடியாக இந்தியர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. ஆனால், காலப்போக்கில் இந்தியர்களின் மனதை இன்னோவா மாற்றியது வேறு விஷயம். இந்த கார் இந்தோனேஷியா உள்ளிட்ட நாடுகளில் பல ஆண்டுகளாக விற்பனையில் இருந்ததையடுத்து, அதற்கு மாற்றாக இன்னோவாவை அறிமுகம் செய்தது டொயோட்டா.

டொயோட்டாவின் கிஜாங் பிக்கப் டிரக்கின் அடிப்படையில் வடிவமைக்கப்பட்ட மாடல்தான் குவாலிஸ். இதன் வழியில்தான் இன்னோவா கார் அறிமுகம் செய்யப்பட்டது. மீண்டும் வருமா என ஏங்க வைத்த மாடலில் குவாலிஸ் காருக்கு முக்கிய இடமுண்டு.

மீண்டும் வெடித்தது மாசு உமிழ்வு மோசடி சர்ச்சை; அமெரிக்காவின் கைகளில் வசமாக சிக்கிய மெர்சிடிஸ்..!!

மீண்டும் வெடித்தது மாசு உமிழ்வு மோசடி சர்ச்சை; அமெரிக்காவின் கைகளில் வசமாக சிக்கிய மெர்சிடிஸ்..!!

அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் மாசு உமிழ்வு மோசடி புகார்கள் இன்னும் குறைந்தபாடில்லை. ஃபோக்ஸ்வேகன், ஆடி நிறுவனங்களை தொடர்ந்து தற்போது மெர்சிடிஸ் மீது டீசல்கேட் புகார் எழுந்துள்ளது.

மீண்டும் வெடித்தது மாசு உமிழ்வு மோசடி சர்ச்சை; அமெரிக்காவின் கைகளில் வசமாக சிக்கிய மெர்சிடிஸ்..!!

டெய்ம்லர், இதுதான் மெர்சிடிஸ்-பென்ஸின் தாய் வீடு. காற்று மாசு தொடர்பாக அமெரிக்க நடத்திய ஆய்வில் மெர்சிடிஸின் டீசல் கார்கள் அதிக மாசு உமிழ்வை வெளிப்படுத்தும் விதத்தில் தயாராகியிருப்பது தெரியவந்துள்ளது.

மீண்டும் வெடித்தது மாசு உமிழ்வு மோசடி சர்ச்சை; அமெரிக்காவின் கைகளில் வசமாக சிக்கிய மெர்சிடிஸ்..!!

ஜெர்மனை சேர்ந்த நாளிதழ் ஒன்று இந்த மோசடி தொடர்பான புகார்களை ஆதாரங்களோடு வெளியிட்டுள்ளது. ஏற்கனவே அமெரிக்காவின் காற்று மாசு ஆய்வில் டெய்ம்லர் குற்றம்சாட்டப்பட்டு விசாரிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

மீண்டும் வெடித்தது மாசு உமிழ்வு மோசடி சர்ச்சை; அமெரிக்காவின் கைகளில் வசமாக சிக்கிய மெர்சிடிஸ்..!!

அமெரிக்காவில் மட்டுமில்லாமல் டெய்ம்லர் மீதான மாசு உமிழ்வு மோசடி தொடர்பான புகார்கள் அந்நிறுவனத்தின் தாய் நாடான ஜெர்மனியிலும் நடைபெற்று வருகிறது.

மீண்டும் வெடித்தது மாசு உமிழ்வு மோசடி சர்ச்சை; அமெரிக்காவின் கைகளில் வசமாக சிக்கிய மெர்சிடிஸ்..!!

அமெரிக்கா நடத்தும் மாசு உமிழ்வு சோதனையில் இருந்து தப்புவதற்கு உதவும் மென்பொருளை டெய்ம்லர் தயாரித்த மெர்சிடிஸின் டீசல் கார்களில் பொருத்தப்பட்டு உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

மீண்டும் வெடித்தது மாசு உமிழ்வு மோசடி சர்ச்சை; அமெரிக்காவின் கைகளில் வசமாக சிக்கிய மெர்சிடிஸ்..!!

2015ம் ஆண்டில் ஃபோக்ஸ்வேகன் மாசு உமிழ்வு மோசடியில் சிக்கிய போது அதனுடன் சேர்ந்து குற்றம்சாட்டப்பட்ட மற்றொரு நிறுவனம் தான் டெய்ம்லர்.

மீண்டும் வெடித்தது மாசு உமிழ்வு மோசடி சர்ச்சை; அமெரிக்காவின் கைகளில் வசமாக சிக்கிய மெர்சிடிஸ்..!!

அதிகமான நைட்ரஸ் ஆக்சைடு நச்சு வாயுவை கக்கும் டீசல் கார்களை ஃபோக்ஸ்வேகன் தயாரித்ததை ஒத்துக்கொண்டதோடு, அதற்கான அபராதத்தையும் அமெரிக்காவிற்கு செலுத்தியது.

மீண்டும் வெடித்தது மாசு உமிழ்வு மோசடி சர்ச்சை; அமெரிக்காவின் கைகளில் வசமாக சிக்கிய மெர்சிடிஸ்..!!

தற்போது டெய்ம்லர் தயாரித்த மெர்சிடிஸ் டீசல் கார்கள் மீது இந்த குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில், அந்த கார்களை தயாரித்த தொழிலாளர்கள் மற்றும் ஊழியர்களும் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

மீண்டும் வெடித்தது மாசு உமிழ்வு மோசடி சர்ச்சை; அமெரிக்காவின் கைகளில் வசமாக சிக்கிய மெர்சிடிஸ்..!!

மாசு உமிழ்வு மோசடியில் இருந்து தப்பிக்க உதவுவதாக கூறப்படும் மென்பொருளில் 'ஸ்லிப்கார்ட்' என்ற ஒரு செயல்பாடு உள்ளது. இது காரை பரிசோதனைக்கு உட்படுத்தம்போது, எமிஷன் குறித்த விவரங்களை மாற்றி வழங்கும்.

மீண்டும் வெடித்தது மாசு உமிழ்வு மோசடி சர்ச்சை; அமெரிக்காவின் கைகளில் வசமாக சிக்கிய மெர்சிடிஸ்..!!

மேலும் பிட்-15 என்ற செயல்பாடு இந்த மென்பொருளில் உள்ளது. இது காரை இயக்கி சோதனை செய்யும் போது சுமார் 26 கி.மீ வரை எமிஷன் தொடர்பான விவரங்களை மாற்றி வழங்கும்.

மீண்டும் வெடித்தது மாசு உமிழ்வு மோசடி சர்ச்சை; அமெரிக்காவின் கைகளில் வசமாக சிக்கிய மெர்சிடிஸ்..!!

டெய்ம்லர் தயாரித்துள்ள கார்களில் ஏட்ப்ளூ டீசல் என்ற புகைப்போக்கி குழாய்க்கான திரவம் பயன்படுத்தப்பட்டுள்ளது. இது காரிலிருந்து உருவாகும் நைட்ரஸ் ஆக்சைடு நச்சு வாயுவை சோதனையின் போது குறைத்து வெளியேறச்செய்யும்.

மீண்டும் வெடித்தது மாசு உமிழ்வு மோசடி சர்ச்சை; அமெரிக்காவின் கைகளில் வசமாக சிக்கிய மெர்சிடிஸ்..!!

டெய்ம்லர் தயாரித்துள்ள மெர்சிடிஸ் டீசல் கார்களில் இதுபோன்ற மோசடிகள் நடத்தப்பட்டுள்ளதை ஜெர்மனியை சேர்ந்த நாளிதழ் ஆதாரங்களுடன் வெளியிட்டுள்ளது.

மீண்டும் வெடித்தது மாசு உமிழ்வு மோசடி சர்ச்சை; அமெரிக்காவின் கைகளில் வசமாக சிக்கிய மெர்சிடிஸ்..!!

அதோடு சட்டப்பூர்வமாக அமெரிக்கா அரசு அனுமதிப்பதை விட 10 மடங்கு நைட்ரஸ் ஆக்சைடு நச்சுவாயுவை மெர்சிடிஸ் டீசல் மாடல் கார்கள் வெளியேற்றுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மீண்டும் வெடித்தது மாசு உமிழ்வு மோசடி சர்ச்சை; அமெரிக்காவின் கைகளில் வசமாக சிக்கிய மெர்சிடிஸ்..!!

ஆனால் அமெரிக்காவின் மாசு உமிழ்வு சோதனையில் எழுந்துள்ள குற்றச்சாட்டுகளை டெய்ம்லர் முற்றிலுமாக மறுத்துள்ளது. இதுப்பற்றி ராய்டர்ஸிடம் பேசிய அந்நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர், "டெய்ம்லர் மற்றும் அதில் பணியாற்றும் 290,000 ஊழியர்களின் பெயரை கலங்கப்படுத்தவும் தான் இந்த புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது" என்று அவர் கூறியுள்ளார்.

மீண்டும் வெடித்தது மாசு உமிழ்வு மோசடி சர்ச்சை; அமெரிக்காவின் கைகளில் வசமாக சிக்கிய மெர்சிடிஸ்..!!

2015ம் ஆண்டு முதன்முறையாக மாசு உமிழ்வு மோசடி குறித்த விவரங்கள் இந்த உலகிற்கு தெரியவந்தது. அப்போது அனைத்து ஊடகங்கள் மற்றும் பத்திரிக்கைகளிலும் இந்த மோசடி தலைப்புச்செய்தி ஆனது.

மீண்டும் வெடித்தது மாசு உமிழ்வு மோசடி சர்ச்சை; அமெரிக்காவின் கைகளில் வசமாக சிக்கிய மெர்சிடிஸ்..!!

டெய்ம்லர் தயாரித்த பல கார்கள் இன்று உலகின் பல முன்னணி நிறுவனங்களால் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. பல நாடுகளில் டெய்ம்லர் கார்கள் தான் பெரியளவில் விற்பனையாகி வருகின்றன.

மீண்டும் வெடித்தது மாசு உமிழ்வு மோசடி சர்ச்சை; அமெரிக்காவின் கைகளில் வசமாக சிக்கிய மெர்சிடிஸ்..!!

இந்நிலையில் அமெரிக்கா மாசு உமிழ்வு மோசடி குற்றச்சாட்டை டெய்ம்லர் மீது எழுப்பியுள்ளது, அதன் வாடிக்கையாளர்களையும் கவலையடைய செய்துள்ளது. இதனால் அவர்கள் எங்கே தங்களது கார்கள் திருப்பப்பெறப்பட்டு விடுமோ என அச்சம் தெரிவித்துள்ளனர்.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #offbeat
English summary
8 Indian Big Hearted Cars.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X