Just In
- 4 hrs ago
பிரம்மாண்ட சாதனை... இந்தியாவில் வெறும் 17 மாதங்களில் 2 லட்சம் கார்களை விற்பனை செய்தது கியா...
- 5 hrs ago
இமயமலை பகுதியில் சோதனையில் 2021 மஹிந்திரா ஸ்கார்பியோ!! அட... அறிமுகம் எப்போ தாங்க?
- 6 hrs ago
சுஸுகி மோட்டார்சைக்கிள்களின் விலைகள் அதிகரித்தன!! ஆனா பெரிய அளவில் இல்லைங்க...
- 7 hrs ago
விலை மிகவும் குறைவு என்பதால் வாடிக்கையாளர்களிடம் செம ரெஸ்பான்ஸ்... நிஸான் மேக்னைட் டெலிவரி பணிகள் தீவிரம்!
Don't Miss!
- News
சாலமன் பாப்பையா முதல் 2 ரூபாய் டாக்டர், சாந்தி கியர்ஸ் சுப்பிரமணியன் ஆகியோருக்கு பத்ம ஸ்ரீ விருது
- Movies
வெங்கட் பிரபுவின் ‘லைவ் டெலிகாஸ்ட் ‘ வெப் சீரிஸ்…ரிலீஸ் தேதியை அறிவித்த படக்குழு !
- Finance
5% சரிவில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்குகள்.. காலாண்டு முடிவின் எதிரொலி..!
- Sports
ஐபிஎல் ஏலம் சென்னையில நடக்குதாம்... பிப். 18 அல்லது 19ல் நடத்த பிசிசிஐ திட்டமிட்டிருக்கு!
- Lifestyle
மைதா போண்டா
- Education
ரூ.1.77 லட்சம் ஊதியத்தில் சென்னை உயர்நீதிமன்ற அலுவலகத்தில் வேலை!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
தினமும் ஒரு காரில் ஜாலி ரைடு! 80 வயதில் 80வது போர்ஷே காரை வாங்கிய முதியவர்! பார்க்கிங் செய்ய தனி கட்டிடம் வேற!
ஆஸ்திரியாவை சேர்ந்த 80 வயதான நபர் ஒருவர் 80வது போர்ஷே காரை வாங்கியுள்ளார். இதுகுறித்த சுவாரஸ்யமான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

ஜெர்மனியை சேர்ந்த போர்ஷே நிறுவனம் அதிக செயல்திறன் கொண்ட ஸ்போர்ட்ஸ் கார்களை தயாரிப்பதில் நிபுணத்துவம் பெற்றது. போர்ஷே கார் நிறுவனம் கடந்த 1931ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இடைப்பட்ட 89 ஆண்டுகளில் உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்களை போர்ஷே நிறுவனம் சம்பாதித்துள்ளது.

இதில், ஒரு தீவிர ரசிகர் பற்றிய சுவாரஸ்யமான தகவல்கள் தற்போது கிடைத்துள்ளன. 80 வயதாகும் இந்த தீவிர ரசிகர் சமீபத்தில் தனது 80வது போர்ஷே காரை வாங்கியுள்ளார்! அவரது பிரம்மாண்ட கார் கராஜை போர்ஷே கார்கள் அலங்கரிக்கின்றன. போர்ஷே நிறுவனத்தின் தீவிர ரசிகர்கள் பட்டியலை யாரேனும் தயாரித்தால், அதில் இவருக்கு சிறப்பு இடத்தை நிச்சயமாக வழங்கியே ஆக வேண்டும்.

ஓட்டோகார் ஜே (Ottocar J) என்பவரை பற்றிதான் நாம் இங்கே பேசி கொண்டுள்ளோம். இவர் ஆஸ்திரியாவின் வியன்னா நகரை சேர்ந்தவர். இவர் கடந்த 50 ஆண்டுகளாக போர்ஷே கார்களை வாங்கி கொண்டும், ஓட்டி கொண்டும் உள்ளார். போர்ஷே கார்களை நிறுத்துவதற்கு என தனியாக கட்டிடம் ஒன்றையும் அவர் கட்டியுள்ளார் என்றால் பார்த்து கொள்ளுங்கள்.

சாய்வு நாற்காலியில் அமர்ந்து கொண்டு, பழைய நினைவுகளை அசைபோடும் ஒரு வயதில், போர்ஷே கார்களை வாங்குவது, அவற்றை ஓட்டுவது என ஓட்டோகார் ஜே இன்னமும் பரபரப்பாக இயங்கி கொண்டுள்ளார். தற்போதைய நிலையில் ஓட்டோகார் ஜே-யின் கலெக்ஸனில் 38 கார்கள் உள்ளன. எஞ்சிய கார்களை அவர் விற்பனை செய்து விட்டாரா? என்பது பற்றி சரியாக தெரியவில்லை.

ஆனால் ஒரு மாதத்தின் ஒவ்வொரு நாளும் வெவ்வேறு போர்ஷே கார்களில் அவர் வலம் வருகிறார். போர்ஷே கார்கள் மீதான காதல் சுமார் 50 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கியதாக ஓட்டோகார் ஜே கூறியுள்ளார். போர்ஷே கார் ஒன்று அவரை வேகமாக கடந்து சென்றபோது அதன் செயல்திறனில் அவர் ஈர்க்கப்பட்டார். அதன்பின் பணத்தை சேமித்து போர்ஷே கார்களை வாங்க தொடங்கியுள்ளார்.

இடைப்பட்ட ஆண்டுகளில் ஒட்டுமொத்தமாக 80 போர்ஷே கார்களை ஓட்டோகார் ஜே வாங்கி விட்டார். இதில், 38 கார்களை அவர் தற்போது வைத்துள்ளார். போர்ஷே கார்களை வாங்குவதை மட்டும் பேரார்வம் என கூற முடியாது. அவற்றை ஓட்ட வேண்டும். இயக்கப்படாத சமயங்களில் அவற்றை நிறுத்துவதற்கு முறையான கராஜ் வேண்டும். இவை அனைத்தையும் ஓட்டோகார் ஜே மிக சரியாக செய்துள்ளார்.

போர்ஷே கார்களை நிறுத்துவதற்கு என கட்டப்பட்டுள்ள தனி கட்டிடத்தை தனது 'வாழும் அறை' என ஓட்டோகார் ஜே குறிப்பிடுகிறார். இங்கே ஓட்டோகார் ஜே-வின் அனைத்து போர்ஷே கார்களும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. கலைநயமிக்க பழமையான பொருட்களும் இங்கே இருக்கின்றன. இதுதவிர சினிமா திரையும் உள்ளது.

மேலும் ஓட்டோ கார் ஜோ இங்கே ஓவியங்களையும் வைத்துள்ளார். கார் பந்தயங்களின் போஸ்டர்கள், டிராபிக்கள் மற்றும் நினைவு சின்னங்களையும் அவர் இங்கே இடம்பெற செய்துள்ளார். சொல்லப்போனால் ஒரு கார் மியூசியம் போல அவரது கராஜ் உள்ளது. ஓட்டோகார் ஜே சமீபத்தில் போர்ஷே பாக்ஸ்டர் ஸ்பைடர் (Porsche Boxster Spyder) காரை வாங்கியுள்ளார்.

இதன் மூலம் 80 போர்ஷே கார்களை வாங்கிய பிரம்மாண்ட சாதனையை அவர் நிறைவு செய்துள்ளார். அவர் சமீபத்தில் வாங்கியுள்ள போர்ஷே பாக்ஸ்டர் ஸ்பைடர் கார் நீல நிறத்தில் பெயிண்ட் செய்யப்பட்டுள்ளது. வரும் காலங்களில் இன்னும் நிறைய போர்ஷே கார்களை ஓட்டோகார் ஜே சொந்தமாக்குவார் என நாம் நம்பலாம்.
Image Courtesy: Porsche Cars North America