80 வயதில் கோல்டுவிங் சூப்பர்பைக்கில் 10 லட்ச கிமீகளை நிறைவு செய்துள்ள ‘ஹீரோ’- இந்த பைக்கை தூக்குறதே கஷ்டமாச்சே

இதற்கு முன்னர் உலகம் முழுவதிலும் பல கிமீ தூரத்திற்கு சுற்றிய டொயோட்டா கார்களை பற்றி பார்த்துள்ளோம். ஆனால் இம்முறை முற்றிலும் வித்தியாசமாக, தனது ஹோண்டா கோல்டு விங் மோட்டார்சைக்கிளில் சுமார் 10 லட்ச கிமீ தூரத்திற்கு மேல் பயணித்துள்ள 80 வயது நிரம்பியவரை பற்றி தான் இந்த செய்தியில் பார்க்கவுள்ளோம்.

80 வயதில் கோல்டுவிங் சூப்பர்பைக்கில் 10 லட்ச கிமீகளை நிறைவு செய்துள்ள ‘ஹீரோ’- இந்த பைக்கை தூக்குறதே கஷ்டமாச்சே

80 வயது நிரம்பியவர் என கூறப்பட்டாலும், இவரை பார்த்தால் சத்தியமாக 80 வயது நிரம்பியவர் போல் இல்லை. இவரை பற்றியும், இவரது ஹோண்டா கோல்டு விங் பைக்கை பற்றியும் கெண்டன் குளூஸ் என்ற யுடியூப் சேனலில் வெளியிடப்பட்டுள்ள வீடியோவினை கீழே காணலாம்.

Image Source

பில் ஸ்டெய்னர், இவர் தான் நாம் இந்த செய்தியில் பார்க்க போகும் ஹீரோ. இவரது 2015 ஹோண்டா கோல்டு விங் மோட்டார்சைக்கிளின் ஓடோமீட்டரை காட்டுவதில் இருந்து மேலுள்ள வீடியோ ஆரம்பிக்கிறது. இந்த பைக் இதுவரையில் மட்டுமே 10,59,363 கிமீ தூரத்திற்கு இயங்கி உள்ளதாக அதன் ஓடோமீட்டர் காட்டுகிறது. இதில் இன்னமும் ஒரிஜினல் என்ஜினே பொருத்தபட்டுள்ளது.

80 வயதில் கோல்டுவிங் சூப்பர்பைக்கில் 10 லட்ச கிமீகளை நிறைவு செய்துள்ள ‘ஹீரோ’- இந்த பைக்கை தூக்குறதே கஷ்டமாச்சே

இதனால் இந்த பைக்கில் இப்போதும் அதிகப்பட்ச மைலேஜ் கிடைக்கிறது. மில்லியன் கிமீ-களை தங்களது பைக்கில் நிறைவு செய்துள்ளவர்கள் ஏகப்பட்ட பேர் இருக்கலாம். ஆனால் அவர்கள் அனைவருமே மூன்றாம் அல்லது நான்காம் என்ஜின்களுடனே தங்களது பைக்கை இயக்கி வருகிறார்கள். ஆனால் பில் இன்னமும் தொழிற்சாலையில் பொருத்தப்பட்ட என்ஜினை கொண்ட கோல்டுவிங் மோட்டார்சைக்கிளையே கொண்டுள்ளார்.

80 வயதில் கோல்டுவிங் சூப்பர்பைக்கில் 10 லட்ச கிமீகளை நிறைவு செய்துள்ள ‘ஹீரோ’- இந்த பைக்கை தூக்குறதே கஷ்டமாச்சே

பில் அவரது பைக்கின் க்ளட்ச்சை மாற்றியமைக்க மெக்கானிக் கடை ஒன்றிற்கு செல்லும்போது இந்த வீடியோ பதிவு செய்யப்பட்டுள்ளது. 2014 டிசம்பர் 17ஆம் தேதி இந்த கோல்டு விங் பைக்கை பில் வாங்கியுள்ளார். இந்த வகையில் பார்த்தோமேயானால், இந்த பைக் கிட்டத்தட்ட 7 வருடங்கள் பழையது. முதல் வருடத்தில் 1.60 லட்ச கிமீ தொலைவிற்கு இந்த பைக்கை ஓட்டியுள்ள பில், அதற்கடுத்த அடுத்த வருடங்களிலும் கிட்டத்தட்ட 1.50 லட்ச கிமீ தொலைவிற்கு பைக்கை ஓட்டியுள்ளார்.

80 வயதில் கோல்டுவிங் சூப்பர்பைக்கில் 10 லட்ச கிமீகளை நிறைவு செய்துள்ள ‘ஹீரோ’- இந்த பைக்கை தூக்குறதே கஷ்டமாச்சே

மொத்தமாக முதல் 5 வருடங்களில் 8 லட்ச கிமீ பூர்த்தியாகியுள்ளன. ஹோண்டா நிறுவனம் பில்லின் 2015 கோல்டு விங் பைக்கிற்கு 7 லட்ச மைல்கள் (11.26 லட்ச கிமீ) உத்தரவாதத்தை வழங்குகிறது. இதனை முழுவதுமாக நிறைவு செய்த பிறகு இந்த கோல்டு விங் பைக்கை விற்பது என்ற முடிவில் பில் உள்ளார். இதனை விற்ற பின்னரும் 6-ஸ்பீடு கியர்பாக்ஸ் உடன் வழங்கப்படும் தற்போதைய மாடர்ன் கோல்டு விங் பைக்கை வாங்குவதுதான் இவரது திட்டமாம்.

80 வயதில் கோல்டுவிங் சூப்பர்பைக்கில் 10 லட்ச கிமீகளை நிறைவு செய்துள்ள ‘ஹீரோ’- இந்த பைக்கை தூக்குறதே கஷ்டமாச்சே

2014 கோல்டு விங் பைக்கில் 5-ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது. பில் ஸ்டெய்னருக்கு கோல்டு விங் பைக்கில் கியர் மாற்றுவது மிகவும் பிடித்துள்ளது. அதுமட்டுமின்றி ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷனில் சில பிரச்சனைகள் இருப்பதாக இவர் உணர்வதாலும், 6-ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷனுக்கே பில் மீண்டும் செல்லவுள்ளார். ஹோண்டா வழங்கும் உத்தரவாதத்தில் இந்த பைக்கின் க்ளட்ச் அடங்குவதில்லை.

80 வயதில் கோல்டுவிங் சூப்பர்பைக்கில் 10 லட்ச கிமீகளை நிறைவு செய்துள்ள ‘ஹீரோ’- இந்த பைக்கை தூக்குறதே கஷ்டமாச்சே

இதனால் தான் இதனை சரிச்செய்ய நேரடியாகவே மெக்கானிக் கடைக்கு இவர் சென்றுள்ளார். இவரது பெட்ரோல் குழாயிலும் கசிவு பிரச்சனை உள்ளதால், அதனையும் மாற்ற வேண்டி இருந்துள்ளது. இந்த பைக்கில் இருப்பது இரண்டாவது நீர் பம்ப் ஆகும். என்ஜின் அமைப்பில் நீர் உறைவதை தடுக்கும் யூனிட்டை வருடந்தோறும் மாற்றிவிடும் பில், அதேபோல் வால்வுகளையும் அவ்வப்போது பரிசோதித்து கொள்வதாக கூறியுள்ளார்.

80 வயதில் கோல்டுவிங் சூப்பர்பைக்கில் 10 லட்ச கிமீகளை நிறைவு செய்துள்ள ‘ஹீரோ’- இந்த பைக்கை தூக்குறதே கஷ்டமாச்சே

அதேபோல் ஒவ்வொரு 1 லட்ச மைல்கள் பயணத்திற்கு பிறகும் பைக்கின் ஸ்பார்க் ப்ளக்குகள் மற்றும் காற்று சுத்திகரிப்பானை இவர் மாற்றி வந்துள்ளார். பில் ஸ்டெய்னரிடம் இதனை காட்டிலும் பழைய 2002 கோல்டுவிங் மோட்டார்சைக்கிளும் உள்ளது. இதில் கிட்டத்தட்ட 8.88 லட்ச கிமீ தொலைவிற்கு பில் பயணம் செய்துள்ளார். இதன் பிறகு 2014 கோல்டு விங் பைக்கை இவர் வாங்கியுள்ளார்.

இதன் மூலமாக ஆரம்பக்கால கட்டத்தில் இருந்து ஹோண்டா கோல்டு விங் மோட்டார்சைக்கிளின் மீது பில் ஸ்டெய்னர் வைத்திருக்கும் காதலினை அறியலாம். தனது கேரேஜில் எப்போதும் இரு கோல்டுவிங் மோட்டார்சைக்கிள்கள் இருப்பதை பில் விரும்புகிறார். ஏனெனில் ஒன்று பயன்பாட்டில் இருக்கும்போது ஒன்று எப்போதும் கேரேஜில் நின்றிருக்க வேண்டுமாம்.

80 வயதில் கோல்டுவிங் சூப்பர்பைக்கில் 10 லட்ச கிமீகளை நிறைவு செய்துள்ள ‘ஹீரோ’- இந்த பைக்கை தூக்குறதே கஷ்டமாச்சே

இது எல்லாம் வளர்ந்த நாடுகளில் உள்ள இத்தகைய வாடிக்கையாளர்களுக்கே எளிதாக சாத்தியமாகிறது. ஏனெனில் இந்தியாவில் இன்னமும் ஹோண்டா கோல்டு விங் போன்ற சூப்பர் பைக் பலருக்கு எட்டாக்கனியாகவே உள்ளது. பிரபல ஜப்பானிய இருசக்கர வாகன தயாரிப்பு நிறுவனமான ஹோண்டா மோட்டார்சைக்கிளின் சூப்பர் லக்சரி, தொலைத்தூர பயணத்திற்கான மோட்டார்சைக்கிளாக கோல்டுவிங் விளங்குகிறது.

80 வயதில் கோல்டுவிங் சூப்பர்பைக்கில் 10 லட்ச கிமீகளை நிறைவு செய்துள்ள ‘ஹீரோ’- இந்த பைக்கை தூக்குறதே கஷ்டமாச்சே

ஹோண்டா சமீபத்தில் 2022ஆம் ஆண்டிற்காக புதிய நிறத்தேர்வுகளை அதன் ஜிஎல்1800 கோல்டுவிங் மற்றும் ஜிஎல்1800 கோல்டுவிங் டூர் பைக்குகளுக்கு வழங்க உள்ளது. இந்தியாவில் மேனுவல் கோல்டு விங் பைக்கின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ரூ.37.75 லட்சமாகவும், இரட்டை க்ளட்ச் டிரான்ஸ்மிஷன் உடனான ஹோண்டா கோல்டு விங் மோட்டார்சைக்கிளின் விலை கிட்டத்தட்ட ரூ.40 லட்சமாகவும் உள்ளது.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
80 year old man who s covered 10 lakh kms on his honda goldwing superbike
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X