இந்தியாவை குறி வைத்த 800 வெளிநாட்டு நிறுவனங்கள்! அடுத்த வாரம் எல்லோரும் ஒரே இடத்துல கூட போறாங்க!

இந்தியாவில் வரும் ஜனவரி மாதம் 12ம் தேதி துவங்கவுள்ள ஆட்டோ எக்ஸ்போ கண்காட்சியில் உலகம் முழுவதிலுமிருந்து 15 நாடுகளைச் சேர்ந்த 800 நிறுவனங்கள் பங்கேற்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

இந்தியாவில் சுமார் 3 ஆண்டுகளுக்கு பிறகு ஆட்டோமொபைல் துறைக்கான மிகப்பெரிய நிகழ்வாக ஆட்டோ எக்ஸ்போ 2023 வரும் ஜனவரி 12ம் தேதி நொய்டா பெருநகர பகுதியில் துவங்கவுள்ளது. இந்த நிகழ்ச்சியின் போது ஆட்டோமொபைல் தயாரிப்பாளர்கள் பலர் தங்கள் தயாரிப்புகளை வெளியிட தயாராகி வருகின்றனர். இந்த நிகழ்வின் போது ஏகப்பட்ட கார் பைக்குகள் எல்லாம் களம் இறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியாவை குறி வைத்த 800 வெளிநாட்டு நிறுவனங்கள்! அடுத்த வாரம் எல்லோரும் ஒரே இடத்துல கூட போறாங்க!

ஆட்டோ எக்ஸ்போ 2023

இந்நிலையில் இந்த நிகழ்வில் ஆட்டோமொபைல் தயாரிப்பாளர்கள் மட்டுமல்ல உதிரிபாக தயாரிப்பாளர்களும் கலந்து கொள்ளவுள்ளனர். இந்த நிகழ்ச்சியை கான்ஃபிடரேஷன் ஆஃப் இந்தியன் இன்ட்ஸ்ட்ரீஸ், சொசைட்டி ஆஃப் இந்தியன் ஆட்டோமொபைல் மேனுஃபேக்சரர், ஆட்டோமோட்டிவ் காம்போனென்ட் மேனுஃபேக்சரர் அசோசியேஷன் ஆஃப் இந்தியா உள்ளிட்டோர் இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்துள்ளனர்.

இந்நிலையில் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவுள்ள ஆட்டோமொபைல் உதிரிபாக தயாரிப்பாளர்கள் குறித்த விபரங்கள் வெளியாகியுள்ளது. இந்த நிகழ்ச்சியில் 15 நாடுகளை சேர்ந்த சுமார் 800 உதிரி பாக தயாரிப்பு நிறுவனங்கள் கலந்து கொள்ளவுள்ளன. கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, இந்தியா, இஸ்ரேல், இத்தாலி, ஜப்பான், போலாந்து, சிங்கப்பூர், தென் கொரியா, சுவிட்சர்லாந்து, தைவான், தாய்லாந்து, லண்டன், அமெரிக்க உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த நிறுவனங்கள் வரவுள்ளன.

இந்தியாவை குறி வைத்த 800 வெளிநாட்டு நிறுவனங்கள்! அடுத்த வாரம் எல்லோரும் ஒரே இடத்துல கூட போறாங்க!

சீனாவிற்கு இடமில்லை

இந்த ஆட்டோ எக்ஸ்போ கடந்த 2020ம் ஆண்டு ஏற்பாடு செய்யப்பட்டு கொரோனா காரணமாக நிறுத்தப்பட்டது. அப்பொழுது இதற்காக பதிவ செய்த உதிரி பாக தயாரிப்பாளர்களை விட இந்தாண்டு 200 பேர் அதிகம் பங்கேற்கவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதில் சீனாவிலிருந்து மட்டும் எந்த நிறுவனங்களும் பங்கேற்கவில்லை. விசா பிரச்சனை காரணமாக அவர்கள் வரஇயலாததால் சீனாவிலிருந்து இந்த எக்ஸ்போவில் யாரும் கலந்து கொள்ளப்போவதில்லை.

2020ம் ஆண்டு விழா ஏற்பாடு செய்யப்பட்டபோதும் சீனாவில் கொரோனா பரவல் தீவிரமடைய துவங்கியிருந்ததால் அப்பொழுதும் சீனாவிலிருந்து யாரும் கலந்து கொள்ள திட்டமிடவில்லை. இந்த முறை இன்டர்னல் கம்பஷன் இன்ஜினை விட எலெக்ட்ரிக் இன்ஜின்களுக்கு தான் சிறப்பான வரவேற்ப்பு இருக்கும் என எதிரபார்க்கப்படுகிறது.

அதிக இடம்

2018ம் ஆண்டு இந்த ஆட்டோ எக்ஸ்போது 52 ஆயிரம் சதுர மீட்டர் இடத்தில் நடத்தப்பட்டது. 2020ம் ஆண்டு 56 ஆயிரம் சதுர மீட்டர் அளவிலான இடம் தேர்வு செய்யப்பட்டது. தற்போது சுமார் 60 ஆயிரம் சதுர மீட்டருக்கான இடத்தில் இந்த எக்ஸ்போ நடக்கவுள்ளது. அதாவது ஆண்டிற்காண்டு இந்த எக்ஸ்போ விரிவடைந்து கொண்டே செல்கிறது. இந்த ஆட்டோ எக்ஸ்போவில் நீங்கள் அதிகம் எதிர்பார்ப்பது என்ன? இது குறித்த உங்கள் கருத்துக்களை கமெண்டில் சொல்லுங்கள்.

More from DriveSpark

Article Published On: Friday, January 6, 2023, 16:53 [IST]
English summary
800 components companies are participating in auto expo 2023
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+