கிளட்ச் இல்ல, உறுமல் சத்தம் இல்லை... 82 வயது முதியவருக்கு இது கார் தானா என்கிற சந்தேகம்!
இந்தியா உள்பட உலகளவில் ஆட்டோமொபைல் துறை ஆனது கடந்த 100 ஆண்டுகளில் பல விஷயங்களில் முன்னேற்றம் கண்டுள்ளது. அந்த சமயத்தில் பயன்பாட்டில் இருந்த கார்களுக்கும், இப்போதும் இருக்கும் எலக்ட்ரிக் கார்களுக்கும் மிக பெரிய வித்தியாசம் உள்ளது. 1950ஆம் காலக்கட்டத்தில் கார்களை ஓட்டியவர்களுக்கு இப்போதைய மாடர்ன் கார்கள் வித்தியாசமாகவும், விசித்திரமாகவும் இருக்கும். அதனை வெளிக்காட்டும் வகையில், 82 வயதான முதியவர் ஒருவர் டெஸ்லா சைபர்டிரக் (Tesla Cybertruck) வாகனத்தை ஓட்டி பார்க்கும் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது. அதனை பற்றி இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம், வாங்க.
சைபர்டிரக் ஆனது டெஸ்லாவின் லேட்டஸ்ட் அறிமுகம் ஆகும். இதனை வழக்கமான டெஸ்லா எலக்ட்ரிக் கார் என்று சாதாரணமாக கடந்து சென்றுவிட முடியாது. ஏனெனில், அந்த அளவிற்கு மாறுப்பட்ட தோற்றத்தை கொண்டதாக சைபர்டிரக் விளங்குகிறது. முக்கோண வடிவிலான இந்த டெஸ்லா வாகனம் எதிர்காலத்தில் வேண்டுமாயின் சாதாரணமாக இருக்காலாமே தவிர்த்து, இப்போதைய காலக்கட்டத்திற்கு மிகவும் அட்வான்ஸானது என்றுதான் சொல்ல வேண்டும்.

இத்தகைய எலக்ட்ரிக் வாகனத்தை 82 வயதான முதியவர் ஓட்டி பார்த்துள்ளர் எனும்போது முற்றிலும் நேர்மறையானதாக இருந்திருக்கும். இன்னும் சொல்லப்போனால், இந்த முதியவர் ஃபோர்டு மோட்டார் (Ford Motor) நிறுவனத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர் ஆவார். அவரது காலத்தில் பல தனித்துவமான ஃபோர்டு கார்களை உருவாக்கி இருக்கலாம்; அவற்றை பயன்படுத்தி இருக்கலாம். ஆனால், டெஸ்லா சைபர்டிரக் ஆனது முற்றிலும் வித்தியாசமானது ஆகும்.
இந்த சைபர்டிரக் ஆனது இந்த 82 வயதான முதியவர் உடையது இல்லை. தனது வழக்கமான ரோபோட்டிக் வாகனத்தில் சாலையின் ஓரத்தில் இவர் சென்றுக் கொண்டிருந்த போது, அவ்வழியாக சென்ற டெஸ்லா சைபர்டிரக் வாகனத்தை ஆச்சிரியமாக பார்த்துள்ளார். உடனே அந்த சைபர்டிரக் வாகன ஓட்டி என்ன நினைத்தாரோ தெரியவில்லை, காரை முதியவரின் அருகில் சென்று நிறுத்தி அவரை டிரைவர் இருக்கைக்கு அழைத்துள்ளார்.

ஆனால், இந்த வாகனத்தை எவ்வாறு ஓட்டுவது என்பது முதியவருக்கு சுத்தமாக புலப்படவில்லை. இன்னும் சொல்லப்போனால், காரின் கதவை திறந்து எவ்வாறு உள்ளே நுழைவது என்பதுகூட அவரால் யூகிக்க முடியவில்லை. அருகில் இருந்தவர்கள் உதவியதன் மூலமாக காருக்குள் நுழைந்தவருக்கு, ஸ்டேரிங் சக்கரத்திற்கும் டிரைவர் இருக்கைக்கும் இடையேயான சிறிய இடைவெளி சிரமத்தை ஏற்படுத்தி உள்ளது.
காருக்குள் நுழைவது கஷ்டமாக உள்ளதாக முதியவர் கூறுவதை இதுதொடர்பாக இன்ஸ்டாகிராம் (Instagram)-இல் வெளியிடப்பட்டுள்ள வீடியோவில் கேட்க முடிகிறது. எப்படியோ சிரமப்பட்டு டிரைவர் இருக்கையில் அமர்ந்த முதியவருக்கு, வாகனத்தின் பின்பக்க படுக்கை பகுதியை எவ்வாறு இன்ஃபோடெயின்மெண்ட் திரையின் திறந்து மூடுவது என்பதை அருகில் இருந்தவர்கள் சொல்லிக் கொடுத்துள்ளனர்.

டெஸ்லா சைபர்டிரக் ஆனது எலக்ட்ரிக் கார் கிடையாது; இது ஒரு எலக்ட்ரிக் பிக்-அப் டிரக் வாகனம் ஆகும். அதாவது, இதன் பின்பகுதியில் பொருட்களை வைத்து எடுத்து செல்லலாம். டிரைவர் இருக்கை மிகவும் சவுகரியமாக இருப்பதாகவும், அங்கிருந்து சாலையை பார்ப்பதும் எளிதாக இருப்பதாகவும் இந்த முதியவர் கூறினாலும், செண்டர் கன்சோல் பகுதி ஆனது சவுகரியமானதாக இல்லை என தெரிவித்துள்ளார். வாகனத்திற்கு பின்னால் இருப்பவற்றை காண்பதற்கு கேமரா இந்த வாகனத்தில் இருப்பதாக கூறியதும், முதியவர் மிகவும் ஆச்சிரியப்படுவதையும் வீடியோவில் காண முடிகிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: 1950, 60 சமயங்களில் பெரிய பெரிய என்ஜினை கொண்ட கார்களை பயன்படுத்தியவருக்கு, டெஸ்லா சைபர்டிரக் நிச்சயமாக வித்தியாசமாக இருக்கும். அதிலிலும், இவர் பணியாற்றிய ஃபோர்டு மோட்டார் ஆனது பழமையை மிகவும் விரும்பக்கூடிய ஆட்டோமொபைல் நிறுவனமாகும். ஃபோர்டு நிறுவனத்தை போன்று, டெஸ்லாவும் அமெரிக்க கார் நிறுவனம் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications









