புதிய ரக ஜாகுவார் காரை அசால்ட்டாக ஓட்டி ஆச்சர்யம் அளித்த இங்கிலாந்து ராணி 2ம் எலிசபெத்

Written By:

இங்கிலாந்து ராணியான இரண்டாம் எலிசபெத் பாதுகாவலரை அருகில் வைத்துக்கொண்டு ஜாகுவார் எக்ஸ்-டைப் காரை ஓட்டி உலகை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளார்.

91 வயதிலும் ஜம்மென ஜாகுவார் காரை ஒட்டிய இங்கிலாந்து ராணி

91 வயதிலும் ராணி எலிசபெத்தின் கார் ஓட்டும் திறன் திருத்தமாக இருந்ததாக இங்கிலாந்து பத்திரிக்கைகள் பல அவருக்கு புகழாரம் சுட்டி வருகின்றன.

91 வயதிலும் ஜம்மென ஜாகுவார் காரை ஒட்டிய இங்கிலாந்து ராணி

கடந்த 4ம் தேதி இங்கிலாந்து இளவரசரும், ராணி எலிசபெத்தின் கணவருமான ஃபிலிப் அரச கடமைகளிலிருந்து ஆகஸ்டு மாதத்துடன் ஓய்வு பெறப்போவதாக அறிவித்து பரபரப்பை ஏற்படுத்தினார்.

91 வயதிலும் ஜம்மென ஜாகுவார் காரை ஒட்டிய இங்கிலாந்து ராணி

இந்த அறிவிப்பிற்கான காரணத்தை இங்கிலாந்து பத்திரிக்கைகள் பல ஆராய்ந்து கொண்டுயிருக்க, விண்டஸர் பூங்கா அருகில் ராணி எலிசபெத் கார் ஒட்டி சென்றது ஃபிலிப்பின் ஓய்வு அறிவிப்பை ஓரங்கட்டி விட்டது.

91 வயதிலும் ஜம்மென ஜாகுவார் காரை ஒட்டிய இங்கிலாந்து ராணி

சமூகம் மற்றும் அரசுக் கடமைகளில் சிறந்து விளங்கும் ராணி எலிசபெத்தை குறித்து பலரும் அறிந்திராத ஒன்று என்ன என்றால்? அவர் ஒரு கார் பிரியர்.

91 வயதிலும் ஜம்மென ஜாகுவார் காரை ஒட்டிய இங்கிலாந்து ராணி

எந்த ஒரு உயர் ரக கார்கள் அறிமுகமானாலும், அதை உடனே ஓட்டி பார்க்க வேண்டும் என்ற அளவிற்கு கார்கள் மேல் ராணி எலிசபெத்திற்கு மிகப்பெரிய ஆர்வமுண்டு.

91 வயதிலும் ஜம்மென ஜாகுவார் காரை ஒட்டிய இங்கிலாந்து ராணி

இரண்டாம் உலகப் போரின் போது, பெண்கள் துணை பிராந்திய சேவையில் மெக்கானிக்காக பணியாற்றியவர். அதனால் கார் ஓட்டுவதிலும், பழுது பார்ப்பதிலும் ராணி எலிசபெத்திற்கு நிபுணத்துவமுண்டு.

91 வயதிலும் ஜம்மென ஜாகுவார் காரை ஒட்டிய இங்கிலாந்து ராணி

இரண்டாம் உலகப் போரின் சமயத்தில் (1945) ராணி எலிசபெத் போர் களங்களில் வாகனங்களில் பயணிப்பது போன்று பல படங்கள் வெளியாகியுள்ளன.

போர் நடைபெற்ற சமயங்களில் காயம்பட்ட இராணுவ வீரர்களை காப்பாற்ற அவசர ஊர்திகளை கூட அவர் இயக்கியுள்ளார்.

91 வயதிலும் ஜம்மென ஜாகுவார் காரை ஒட்டிய இங்கிலாந்து ராணி

மேலும் அரசு சார்ந்த பல முக்கிய நிகழ்வுகளுக்கு தனது குடும்பத்தினருடன் பல முறை கார்களை ஓட்டு சென்றுள்ளார். அதுதவிர தன் கணவர் இளவரசர் ஃபிலிப் உடன் ராணி எலிசபெத் காரில் செல்லும் புகைப்படங்கள் எப்போது வெளிவந்தாலும், அது மிகப்பெரிய வைரலாக தவறியதே இல்லை.

91 வயதிலும் ஜம்மென ஜாகுவார் காரை ஒட்டிய இங்கிலாந்து ராணி

கார் பயணங்களுக்கான குதூகலம் ராணி எலிசபெத்திற்கு வந்துவிட்டால் உடனே தனது சாந்ரிங்கம் எஸ்டேட்டிற்கு காரை எடுத்துக்கொண்டு விருட்டென கிளம்பிவிடுவார். அந்த பகுதியில் தனக்கு பிடித்த இடங்களுக்கு எல்லாம் அவராகவே காரை ஒட்டி செல்வார்.

91 வயதிலும் ஜம்மென ஜாகுவார் காரை ஒட்டிய இங்கிலாந்து ராணி

இவ்வாறு சாந்ரிங்கம் எஸ்டேட் பகுதியில் ராணி எலிசபெத் காரில் ஓட்டி செல்வது போன்ற புகைப்படங்கள் அதிகளவில் வெளியாகியுள்ளன. அதே போல தனிமையான பயணங்களுக்கு பெரும்பாலும் ராணி லேண்ட் ரோவர் எஸ்.யூ.வி காரையே பயன்படுத்துவார்.

91 வயதிலும் ஜம்மென ஜாகுவார் காரை ஒட்டிய இங்கிலாந்து ராணி

இதற்கு முன்னர் இறுதியாக கடந்தாண்டில் இளவரசர் வில்லியம்ஸ் மற்றும் பெயர்த்தி கேத்துடன் பெல்மோர் பகுதிக்கு பிக்னிக் சென்றிருந்தபோது கார் ஒட்டியுள்ளார் ராணி எலிசபெத்.

91 வயதிலும் ஜம்மென ஜாகுவார் காரை ஒட்டிய இங்கிலாந்து ராணி

அதற்கு பிறகு தற்போதே அவர் கார் ஓட்டும் செய்தி வெளியாகியுள்ளது. விண்ட்ஸர் பூங்கா தேவாலயத்தின் திருப்பள்ளியில் கலந்துகொண்ட பிறகு பக்கிங்ஹம் அரண்மனைக்கு செல்ல அவரே கார் ஓட்டியதாக கூறி புகைப்படங்களுடன் டெய்லி மெயில் இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது.

91 வயதிலும் ஜம்மென ஜாகுவார் காரை ஒட்டிய இங்கிலாந்து ராணி

தேவாலயத்திலிருந்து பக்கிங்ஹம் அரண்மனைக்கு உயர் ரக பச்சை நிற ஜாகுவார் எக்ஸ்-டைப் காரை, ராணி எலிசபெத் தானாகவே ஓட்டி செல்ல, அருகில் அவருடைய பாதுகாவலர் பயணிகள் இருக்கையில் அமர்ந்திருந்ததாக டெய்லி மெயில் இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது.

91 வயதிலும் ஜம்மென ஜாகுவார் காரை ஒட்டிய இங்கிலாந்து ராணி

ராணி எலிசபெத் பயன்படுத்தும் ஜாகுவார் எக்ஸ்-டைப் காரை பற்றிய சிறப்பம்சங்கள் சரியாக குறிப்பிடப்படவில்லை. எனினும் அந்த மாடல் காரை ஜாகுவார் நிறுவனம் 2.5 லிட்டர் மற்றும் 3 லிட்டர் வி6 பெட்ரோல் எஞ்சின் என இரண்டு வகையாக தயாரிக்கிறது.

91 வயதிலும் ஜம்மென ஜாகுவார் காரை ஒட்டிய இங்கிலாந்து ராணி

அனைத்து சக்கரங்களையும் இயக்ககூடிய திறன் பெற்ற ஜாகுவார் எக்ஸ்-டைப் கார் தானாக இயங்கக்கூடிய மற்றும் மேனுவாலாக இயக்கம் பெற்ற 5-ஸ்பீடு கியர் பாக்ஸ் என இரண்டு தொழில்நுடங்கள் கொண்ட மாடல்களில் வெளிவருகிறது.

91 வயதிலும் ஜம்மென ஜாகுவார் காரை ஒட்டிய இங்கிலாந்து ராணி

அரச கடமைகளிலிருந்து இளவரசர் ஃபிலிப் ஓய்வு பெறுவது தொடர்பான அறிவிப்பு வெளியான உடன், அதற்கு ராணி எலிசபெத்தின் கருத்து என்ன என்பது உலகளவில் பலரது கேள்வியாக உள்ளது.

91 வயதிலும் ஜம்மென ஜாகுவார் காரை ஒட்டிய இங்கிலாந்து ராணி

கடந்த வாரத்தில் நடைபெற்ற ஒரு அவசர கூட்டத்தின் போது தனது ஓய்வு அறிவிப்பை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டார் இளவரசர் ஃபிலிப்.

மேலும் இளவரசர் ஃபிலிபின் இந்த முடிவிற்கு அவர் மனைவியான ராணி எலிசபெத் பின்னணியாக இருப்பாரோ என்ற சந்தேகங்களும் ஊடகங்கள் மத்தியில் உலாவி வருகின்றன.

91 வயதிலும் ஜம்மென ஜாகுவார் காரை ஒட்டிய இங்கிலாந்து ராணி

இந்நிலையில் இங்கிலாந்து அரச குடும்பத்தினர் தொடர்ந்து பல்வேறு அரசு கடமைகளில் இறங்கவுள்ளதாகவும், அதில் இங்கிலாந்து அரச குடும்பத்தை சார்ந்த இளம் தலைமுறையினர் பங்கேற்க வேண்டும் என்பது ராணி எலிசபெத்தின் எண்ணமாக இருக்கிறது.

91 வயதிலும் ஜம்மென ஜாகுவார் காரை ஒட்டிய இங்கிலாந்து ராணி

அரச குடும்பத்தினர் சொந்த பணிகளை விட்டுவிட்டு பொதுப் பணிகளில் கவனம் செலுத்த வேண்டும் என்பதை ராணி எலிசபெத விரும்புவதாகவும்,

அதனாலேயே பாதுகாவலர் அருகிலிருந்தும், தானாகவே காரை இயக்கி தனது எண்ணத்தை ராணி உலகிற்கு உணர்த்திருப்பதாக பல இங்கிலாந்து ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

91 வயதிலும் ஜம்மென ஜாகுவார் காரை ஒட்டிய இங்கிலாந்து ராணி

இங்கிலாந்தில் ஓட்டுநர் உரிமம் இல்லாமல் கார் ஓட்டும் அனுமதி இங்கிலாந்து ராணி 2ம் எலிசெபத்திற்கு மட்டுமே உள்ளது. அதேபோல போக்குவரத்து சார்ந்த விஷயங்களிலும் பல்வேறு சலுகைகள் அவருக்காக பின்பற்றபடுவதும் வழக்கமாக உள்ளது.

மேலும்... #off beat #ஆஃப் பீட்
English summary
At the age of 91, England queen drives current sport model jaguar back home from church. click for details...

Latest Photos

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark

We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Drivespark sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Drivespark website. However, you can change your cookie settings at any time. Learn more