92 வயதில் இது நடக்கும்னு இருந்திருக்கு! தாத்தாவை பல லட்ச ரூபாய் செலவு செய்து ஆச்சிரியப்படுத்திய பேரன்!!
மஹிந்திரா (Mahindra), கார்களை உருவாக்குவதில் பலரது நம்பிக்கைக்குரிய நிறுவனமாக விளங்குகிறது. அதாவது, மஹிந்திரா கார்களை கடந்த காலங்களில் இருந்து இப்போது வரையில் பல்வேறு தலைமுறையினர் வாங்கியுள்ளனர்/ தொடர்ந்து வாங்கியும் வருகின்றனர். அவ்வாறு, ஒரு காலத்தில் மஹிந்திரா அர்மாடா (Armada) காரை பயன்படுத்திய 92 வயதான முதியவர் ஒருவர், இன்றைய காலத்தில் உற்பத்தி செய்யப்பட்ட மஹிந்திரா ஸ்கார்பியோ-என் (Scorpio-N) காரை ஆச்சிரியமாக பார்க்கும் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி உள்ளது. அதனை பற்றி இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
தற்சமயம் இந்தியாவின் முன்னணி கார் நிறுவனங்களுள் ஒன்றாக விளங்கும் மஹிந்திராவில் இருந்து அறிமுகம் செய்யப்பட்ட தரமான கார்களுள் ஒன்று அர்மாடா ஆகும். பெட்டகம் வடிவில், கம்பீரமான தோற்றத்தினால் மஹிந்திரா அர்மாடா அந்த சமயத்தில் மார்க்கெட்டில் பிரபலமாக விளங்கியது. நன்கு நீளமான காராக உருவாக்கப்பட்டதினால் காருக்குள் நிறைய இடவசதி கிடைத்தது.

இதனால், காருக்குள் அதிக இருக்கைகள் வழங்கப்பட்டன. மேலும், பொருட்களை வைத்து எடுத்து செல்லவும் அர்மாடா ஏற்ற காராக விளங்கியது. ஒரு சிலர் அர்மாடா காரில் பின் இருக்கை வரிசையை நீக்கி, அந்த இடத்தில் அகற்றக்கூடிய மேற்கூரையை பொருத்தி, காரின் பின்பக்கத்தை லோடு ஏற்றிச் செல்லும் பகுதியாக பயன்படுத்தினர். அந்த அளவிற்கு நன்கு நீளமான காராக மஹிந்திரா அர்மாடா உருவாக்கப்பட்டது.
அர்மாடாவின் பிரபலத்திற்கு அதன் இந்த பண்புகள் தான் முக்கிய காரணமாகும். இத்தகைய மஹிந்திரா காரை வாங்கியவர்களுள் மேற்கு வங்காளத்தில் வசிக்கும் இந்த 92 வயது முதியவரும் ஒருவர் ஆவார். வாகனங்கள் ஓட்டுவதை எல்லாம் நிறுத்திவிட்டு தற்சமயம் நடப்பதற்கே ஒருவரது உதவி வேண்டும் என்கிற நிலையில் கோலூன்றி நடக்கும் இந்த 92 வயது முதியவரின் பேரன் புதியதாக மஹிந்திரா ஸ்கார்பியோ-என் காரை வாங்கியுள்ளார்.

தனது தாத்தா அந்த காலத்திலேயே மஹிந்திரா அர்மாடா போன்ற காரை ஓட்டியவராயிற்றே என்கிற எண்ணத்தில் தான் புதியதாக வாங்கிய ஸ்கார்பியோ காரை தாத்தாவிடம் காட்டி ஆசி பெற்றுள்ளார் அவரது பேரன். இன்னும் சொல்லப்போனால், இவர்களது குடும்பத்தில் கார்கள் மற்றும் அவற்றின் இயக்கம் குறித்த அதிக புரிதல் கொண்ட நபர் இந்த 92 வயது தாத்தா ஆவார்.
ஆதலால், தான் வாங்கிய மஹிந்திரா ஸ்கார்பியோ-என் காரை பார்த்துவிட்டு தாத்தா என்ன சொல்ல போகிறாரோ என்கிற ஆர்வத்தில் தான் அவரது பேரன் தனது புதிய காரை காட்டியுள்ளார். தனது தாத்தாவின் அங்கீகரிப்பு தனக்கு முக்கியமானது என அவரது பேரன் தெரிவித்துள்ளார். பேரன் தனது புதிய காரை தாத்தாவிடம் காட்டிய சமயத்தில் அவரது முழு குடும்பமும் அந்த இடத்தில் இருந்தது.

ஸ்கார்பியோ-என் காரை பற்றி சொல்ல வேண்டுமென்றால், நீண்ட வருடங்களாக விற்பனையில் இருக்கும் ஸ்கார்பியோ காரின் நியூ ஜெனரேஷன் காராக கடந்த 2022ஆம் ஆண்டில் அறிமுகம் செய்யப்பட்டது. சதுரமான பெட்டகம் வடிவிற்கு மாற்றாக, செவ்வகம் வடிவில் ஸ்கார்பியோ-என் வடிவமைக்கப்பட்டது. ஸ்கார்பியோ காரின் இத்தகைய தோற்றம் ஒரு சில வாடிக்கையாளர்களை வெகுவாக கவர்ந்து இழுக்கிறது. குறிப்பாக, இன்றைய கால மாடர்ன் கஸ்டமர்கள் அதிகளவில் ஸ்கார்பியோ-என் காரை வாங்குகின்றனர்.
ஸ்கார்பியோ-என் காரில் 2.0 லிட்டர் 4-சிலிண்டர் எம் ஸ்டாலியோன் டர்போ பெட்ரோல் மற்றும் 2.2 லிட்டர் 4-சிலிண்டர் எம் ஹாவ்க் டர்போ டீசல் என்ஜின் பொருத்தப்படுகிறது. இந்த என்ஜின்கள் உடன் 6-ஸ்பீடு மேனுவல் அல்லது 6-ஸ்பீடு டார்க் கன்வெர்டர் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸை பெறலாம். வழக்கமான ஸ்கார்பியோ கார்களுக்கே உண்டான பெட்டகம் வடிவில் எதிர்பார்ப்பவர்களுக்காக ஸ்கார்பியோ கிளாசிக் காரும் விற்பனை செய்யப்படுகிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் தற்சமயம் அதிக எண்ணிக்கையில் விற்பனை செய்யப்படும் கார்களுள் ஒன்றாக ஸ்கார்பியோ-என் விளங்குகிறது. இத்தகைய காரை தான் இந்த 92 வயது முதியவரின் பேரன் வாங்கியுள்ளார். அந்த காலத்து அர்மாடாவுக்கு எந்த விதத்திலும் ஸ்கார்பியோ-என் சளைத்தது இல்லை. இன்னும் சொல்லப்போனால், இந்த மாடர்ன் காரில் பல்வேறு அட்வான்ஸ்டு வசதிகள் வழங்கப்படுகின்றன.
Image Courtesy: Arkajyoti Nag


Click it and Unblock the Notifications









