ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.100 ; போட்டி போட்டு வாங்கும் வாடிக்கையாளர்கள்..!

ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் (ஹெச்பி) நிறுவனமானது, பவர் 99 என்ற பெட்ரோலை, இந்தியாவின் வர்த்தக தலைநகரான மும்பையில் சமீபத்தில் அறிமுகப்படுத்தியுள்ளது.

By Arun

லம்போர்கினி, ஃபெராரி போன்ற உயர் செயல்திறன் கார்களுக்கு, அதிக ஆக்டேன் ரேட்டிங் கொண்ட பெட்ரோல்தான் பொருத்தமானதாக இருக்கும். இந்த வகையான கார்களுக்கு முன் மாதிரியான பெட்ரோல் எதுவென்றால், அது அதிக ஆக்டேன் ரேட்டிங் கொண்ட பெட்ரோல்தான். இந்தியாவின் தலைநகரான டெல்லி, கார்டன் சிட்டி பெங்களூரு, சண்டிகர், குர்கான் மற்றும் நம்ம சென்னை போன்ற நகரங்களில் உயர் செயல்திறன் கார்களின் விற்பனை கிடுகிடுவென அதிகரித்து கொண்டே வருகிறது.

ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.100 ; போட்டி போட்டு வாங்கும் வாடிக்கையாளர்கள்..!

அப்படி என்றால் அதிக ஆக்டேன் ரேட்டிங் கொண்ட தரமான பெட்ரோலுக்கான தேவையும் உயர்ந்து கொண்டே செல்கிறது என்பதே பொருள். இதனால் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் போட்டி போட்டு கொண்டு, அதிக ஆக்டேன் ரேட்டிங் கொண்ட பெட்ரோலை அறிமுகப்படுத்தி வருகின்றன.

ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.100 ; போட்டி போட்டு வாங்கும் வாடிக்கையாளர்கள்..!

லம்போர்கினிக்கும், ஃபெராரிக்கும் மட்டும்தானா?

சரி, லம்போர்கினியும், ஃபெராரியையும் வைத்திருப்பவர்கள் மட்டும்தான் அதிக ஆக்டேன் ரேட்டிங் கொண்ட பெட்ரோலை பயன்படுத்த வேண்டுமா? என்ற சந்தேகம் நிச்சயம் நமது மனதில் எழும். இந்த கேள்விக்கு 'இல்லை' என்பதுதான் பதில். உயர் செயல்திறன் கார்களில் மட்டும்தான் அதிக ஆக்டேன் ரேட்டிங் கொண்ட பெட்ரோலை பயன்படுத்த வேண்டும் என்பது இல்லை. மோட்டார் சைக்கிள்கள் உள்பட அனைத்து வாகனங்களிலும் அதிக ஆக்டேன் ரேட்டிங் கொண்ட பெட்ரோலை பயன்படுத்தலாம்.

ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.100 ; போட்டி போட்டு வாங்கும் வாடிக்கையாளர்கள்..!

எகோ ப்ரெண்ட்ஸி பாஸ்!

அதிக ஆக்டேன் ரேட்டிங் கொண்ட பெட்ரோலை உபயோகிப்பதன் மூலம் வாகனங்களினுடைய இன்ஜினின் ஆயுட்காலத்தை குறிப்பிடத்தகுந்த அளவுக்கு அதிகரிக்கலாம். எனவேதான் அதிக ஆக்டேன் ரேட்டிங் கொண்ட பெட்ரோலுக்கான தேவை அதிகரித்து கொண்டே செல்கிறது. வாகன தயாரிப்பு நிறுவனங்கள், ஒவ்வொரு வாகனத்தையும் விற்பனை செய்யும்போது, குறிப்பிட்ட ஆக்டேன் ரேட்டிங் கொண்ட பெட்ரோலை பயன்படுத்தும்படி, வாடிக்கையாளர்களிடம் அறிவுறுத்துகின்றன.

ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.100 ; போட்டி போட்டு வாங்கும் வாடிக்கையாளர்கள்..!

அந்த அறிவுரையை பின்பற்றினால், இன்ஜினின் ஆயுட்காலம் அதிகரிக்கும். மனிதர்களுக்கு இதயம் எப்படியோ, அப்படிதான் வாகனங்களுக்கு இன்ஜின். அதுமட்டுமின்றி வாகனத்தின் செயல்திறன் அதிகரிப்பதுடன், கூடுதல் மைலேஜும் கிடைப்பதாக, ஆட்டோமொபைல் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். அதிக ஆக்டேன் ரேட்டிங் கொண்ட பெட்ரோல்கள் சுற்றுச்சூழலுக்கும் உகந்தவை என்பது மற்றொரு சிறப்பம்சம்.

ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.100 ; போட்டி போட்டு வாங்கும் வாடிக்கையாளர்கள்..!

மத்திய அரசு கிடுக்கிப்பிடி

இந்தியாவில் பல்வேறு ஆக்டேன் ரேட்டிங் கொண்ட பெட்ரோல்கள் விற்பனை செய்யப்படுகின்றன. 87, 91, 97 ஆக்டேன் ரேட்டிங் கொண்ட பெட்ரோல்கள் அதற்கு சிறந்த உதாரணமாக இருக்கும். இதில், 87 ஆக்டேன் ரேட்டிங் கொண்ட பெட்ரோல்தான் வழக்கமான பெட்ரோல் ஆக பயன்படுத்தப்பட்டு வருகிறது.

ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.100 ; போட்டி போட்டு வாங்கும் வாடிக்கையாளர்கள்..!

எனினும் நாட்டில் உள்ள முக்கிய நகரங்களின் முன்னணி பெட்ரோல் விற்பனை நிலையங்கள் தற்சமயம் குறைந்தபட்சம், 91 ஆக்டேன் ரேட்டிங் கொண்ட பெட்ரோலையாவது விற்பனை செய்கின்றன. ஏனென்றால், காற்று மாசுபாட்டை தவிர்ப்பது உள்ளிட்ட விஷயங்களுக்காக மத்திய அரசு அவ்வாறான புதிய சட்ட திட்டங்களை வகுத்துள்ளது.

ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.100 ; போட்டி போட்டு வாங்கும் வாடிக்கையாளர்கள்..!

மும்பைக்கும் வந்தாச்சு!

சரி, விஷயத்திற்கு வருவோம். ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் (ஹெச்பி) நிறுவனமானது, பவர் 99 என்ற பெட்ரோலை, இந்தியாவின் வர்த்தக தலைநகரான மும்பையில் சமீபத்தில் அறிமுகப்படுத்தியுள்ளது. சரி இருக்கட்டும். இதில், என்ன சிறப்பு என்றுதானே கேட்கிறீர்கள். இதில், சிறப்பு இல்லாமல் இல்லை. பவர் 99 பெட்ரோலின் ஆக்டேன் ரேட்டிங் 99 என்பதுதான் இதன் சிறப்பம்சம். இந்தியாவில் விற்பனை செய்யப்படும் பெட்ரோல்களிலேயே அதிக ஆக்டேன் ரேட்டிங் கொண்ட பெட்ரோல் இதுதான் என்பதும் குறிப்பிடத்தகுந்த அம்சம்.

ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.100 ; போட்டி போட்டு வாங்கும் வாடிக்கையாளர்கள்..!

ஆனால் இதற்கு முன்பாகவே இந்தியாவின் ஐடி ஹப் என அழைக்கப்படும் பெங்களூரு மற்றும் புனே ஆகிய நகரங்களில் 99 ஆக்டேன் ரேட்டிங் கொண்ட பெட்ரோல்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. அங்கு எல்லாம் இந்த பெட்ரோல் விற்பனை சக்கை போடு போட்டு வருகிறது. பெங்களூரு மற்றும் புனேவை தொடர்ந்து 99 ஆக்டேன் ரேட்டிங் கொண்ட பெட்ரோல் விற்பனைக்கு வரும் 3வது இந்திய பெரு நகரம் என்ற சிறப்பை மும்பை பெறுகிறது. இத்துடன் நின்று விடாமல் எஞ்சிய மெட்ரோ சிட்டிகளுக்கும் இந்த பெட்ரோல் விற்பனையை விரிவுபடுத்த ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் விரும்புகிறது.

ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.100 ; போட்டி போட்டு வாங்கும் வாடிக்கையாளர்கள்..!

100 ரூபாயா?

சரி, ஆக்டேன் ரேட்டிங்கை பற்றி ஒரு தெளிவுக்கு வந்துவிட்டோம். இனி நாங்களும் அதிக ஆக்டேன் ரேட்டிங் கொண்ட பெட்ரோலைதான் பயன்படுத்துவோம் என்கிறீர்களா? அதற்கு முன்பாக இன்னொரு விஷயத்தையும் தெளிவுபடுத்தி கொள்ளுங்கள். ஆக்டேன் ரேட்டிங்கிற்கு ஏற்ப பெட்ரோலின் விலை மாறுபடும்.

ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.100 ; போட்டி போட்டு வாங்கும் வாடிக்கையாளர்கள்..!

இந்தியாவில் அதிக ஆக்டேன் ரேட்டிங் கொண்ட பவர் 99 பெட்ரோலின் விலை என்ன தெரியுமா? ஒரு லிட்டர் 100 ரூபாய். ஒரு லிட்டர் 75-80 ரூபாய்க்கு வாங்குவதே கட்டுபடியாகல பாஸ் என்ற உங்களின் மனக்குமுறல் கேட்கிறது. ஆனால் வாகனத்தின் ஆயுட்காலத்தை அதிகரிக்கவும், சுற்றுச்சூழலை பேணிகாக்கவும் இது அவசியமானதுதான்.

ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.100 ; போட்டி போட்டு வாங்கும் வாடிக்கையாளர்கள்..!

வாடிக்கையாளர்களின் விருப்பம் என்ன?

எவ்வளவு சதவீத வாடிக்கையாளர்கள் எந்த வகையான பெட்ரோலை விரும்புகின்றனர்? என்ற கணக்கையும் ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் வெளியிட்டுள்ளது.

ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.100 ; போட்டி போட்டு வாங்கும் வாடிக்கையாளர்கள்..!

இந்த வகையில், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் நிறுவனத்தின் வாடிக்கையாளர்களில் 93 சதவீதத்தினர் 91 ஆக்டேன் பெட்ரோலைதான் விரும்புகின்றனர். எஞ்சிய 7 சதவீதத்தினர் தங்கள் வாகனங்களுக்கு 97 ஆக்டேன் பெட்ரோலை பயன்படுத்துகின்றனர்.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #offbeat
English summary
99 Octane petrol now available in Mumbai at around Rs. 100/lt. Read in Tamil
Story first published: Monday, May 7, 2018, 17:59 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X