9,99,999 கிமீ... இன்னும் புதுசு போல் ஓடும் டொயோட்டா கரொல்லா பற்றிய தகவல்கள்!

Written By:

சில ஆயிரம் கிலோமீட்டர்கள் ஓடிய கார்களே தடதடத்துவிடும் நிலையில், ஓமனை சேர்ந்த டாக்சி நிறுவன உரிமையாளரின் டொயோட்டா கரொல்லா கார் 9,99,999 கிமீ தூரத்தை ஓடோமீட்டரில் பதிவு செய்துள்ளது. அது, இன்னமும் புதுசு போல் ஓடிக் கொண்டிருப்பதுதான் ஹைலைட்.

டொயோட்டா காரை எடுத்துக் கொண்டு நிலவுக்கு கூட சென்று வந்துவிடலாம் என்று கார் பிரியர்கள் கூறுவதுண்டு. அந்தளவு நம்பகத்தன்மையும், நீடித்த உழைப்பையும் கொண்டதாக டொயோட்டா கார்களை வாடிக்கையாளர்கள் கருதுகின்றனர்.

இதனை மெய்ப்பிக்கும் விதத்தில், அந்த டொயோட்டா கரொல்லா கார் ஒன்று ஒரு மில்லியன் கிமீ., ஓடி மெய்சிலிர்க்க வைக்கிறது. இந்த கார் பற்றி, அதன் உரிமையாளர் கூறும் தகவல்கள், நம்மையும் டொயோட்டா பிராண்டு பக்கம் திருப்பிவிடும் என்றே தோன்றுகிறது.

 டாக்சி உரிமையாளர்

டாக்சி உரிமையாளர்

ஓமன் நாட்டை சேர்ந்த அப்துல்லா அல் ஹினய் என்பவர் 1998ல் ஒரு டொயோட்டா கரொல்லா காரை வாங்கியிருக்கிறார். அவரது எதிர்பார்ப்புகளை அனைத்தையும் அந்த கார் பூர்த்தி செய்திருக்கிறது. மேலும், டாக்சி சேவையை துவங்குவதற்காக அடுத்து ஒரு காரை வாங்க திட்டமிட்டிருக்கிறார். அப்போது, ஒரு டொயோட்டா காரின் இடத்தை இன்னொரு டொயோட்டா காரால் மட்டுமே பூர்த்தி செய்ய முடியும் என்ற முடிவுக்கு வந்து மற்றொரு கரொல்லா காரை வாங்கியுள்ளார்.

டாக்சி பிசினஸ்

டாக்சி பிசினஸ்

2002ல் இரண்டாவது டொயோட்டா கரொல்லா காரை வாங்கி டாக்சி தொழிலை ஆரம்பித்தாராம். புதிய டொயோட்டா கரொல்லா காரின் செயல்திறன், நம்பகத்தன்மை உள்ளிட்ட அனைத்து அம்சங்களும் தனது டாக்சி தொழிலே மேலும் ஒரு புதிய பாதைக்கு கொண்டு செல்ல உதவியதாக அவர் கரொல்லா காரை பற்றி சிலாகித்து கூறுகிறார். மேலும், டொயோட்டா கரொல்லா காரை அங்குள்ள சவுத் பவான் ஆட்டோமோட்டிவ் ஷோரூமில் உள்ள ஒரு சேல்ஸ் எக்ஸ்கியூட்டிவ்தான் பரிந்துரை செய்தாராம். அவரையும் இப்போது நினைவு கூர்கிறார் அல் ஹினய்.

9,99,999 கிமீ...

9,99,999 கிமீ...

அல் ஹினானியின் டாக்சி சேவைக்கு நல்ல வரவேற்பு கிடைத்ததால், அவரது கரொல்லா கார் 9,99,999 கிமீ என்ற காரின் ஓடோமீட்டரில் கொடுக்கப்படும் உச்சபட்ச அளவை தொட்டிருக்கிறது. ஓயாது ஓடினாலும், அந்த கார் இப்போதும் புதுசுபோல் இருக்கிறதாம். எனது கார் போன்றே பல டொயோட்டா கார்கள் இங்கே பல லட்சம் கிலோமீட்டர்களுக்கு சிறப்பாக ஓடுவதாகவும், இந்த கார்களை வடிவமைக்கும் டொயோட்டா எஞ்சினியர்கள் குறித்தும் பெருமைபட கூறுகிறார் அல் ஹினய்.

 சர்வீஸ் சூப்பர்

சர்வீஸ் சூப்பர்

டொயோட்டா கரொல்லா கார் இந்தளவு நீடித்த உழைப்பையும், நம்பகத்தன்மையுடன் இருப்பதற்கு, டொயோட்டாவின் அங்கீகரிக்கப்பட்ட சர்வீஸ் மையமான சவுத் பவான் ஆட்டோமோட்டிவ் [Saud Bhawan Automotive] நிறுவனத்தின் மிகச்சிறப்பான சர்வீஸும், அங்கு பணியாற்றும் திறமையான சர்வீஸ் எஞ்சினியர்களின் சிறப்பான சர்வீஸ் மூலமாக தனது கரொல்லா கார் இன்னமும் புதுசுபோல் இருப்பதாக குறிப்பிடுகிறார். மேலும், அதிகமாக அந்த கார் ஓடிய நேரங்களில் தமது காருக்கு சவுத் பவான் சர்வீஸ் மைய பணியாளர்கள் சிறப்பு கவனம் செலுத்தியதாகவும், பக்க பலமாக இருந்ததாகவும் பெருமையுடன் நினைவுகூர்கிறார்.

இன்னொரு டொயோட்டா...

இன்னொரு டொயோட்டா...

அல் ஹினானியிடம் இன்னொரு டொயோட்டா காரும் உள்ளது. அது டொயோட்டா லேண்ட் க்ரூஸர். சக்திவாய்ந்த, சொகுசு எஸ்யூவியான டொயோட்டா லேண்ட் க்ரூஸரும் அவரது எதிர்பார்ப்பை விஞ்சி சிறப்பாக இருப்பதாக கூறுகிறார். அடுத்த கார் வாங்கினாலும், அது டொயோட்டாவாகத்தான் இருக்கும் எனும் ரேஞ்சிற்கு டொயோட்டா குறித்து புகழ்கிறார்.

சர்வீஸ் மையம் பெருமிதம்

சர்வீஸ் மையம் பெருமிதம்

"எங்கள் மீது அதிக நம்பிக்கை வைத்திருக்கும் இதுபோன்ற வாடிக்கையாளர்களை பெரிதும் மதிக்கிறோம். வாடிக்கையாளர்களுக்கு மிகச்சிறப்பான சேவை அளிப்பதையே குறிக்கோளாக கொண்டு செயல்படுகிறோம். இதுபோன்ற வாடிக்கையாளர்களுடன் நீண்ட கால உறவை பேணுவதற்கு எண்ணுகிறோம்,' என்று சவுத் பவான் ஆட்டோமோட்டிவ் நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளார்.

 
மேலும்... #ஆஃப் பீட் #offbeat
English summary
999999 Kms: An Toyota Corolla still running strongly.
Story first published: Monday, June 1, 2015, 14:41 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark