செம... மகன் பிறந்த நாளுக்காக பெற்றோர் செய்த காரியம்... மூக்கு மேல் விரல் வைத்த புதுக்கோட்டை மக்கள்

மகன் பிறந்த நாளுக்காக பெற்றோர் செய்த காரியம், புதுக்கோட்டை பகுதி மக்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

செம... மகன் பிறந்த நாளுக்காக பெற்றோர் செய்த காரியம்... மூக்கு மேல் விரல் வைத்த புதுக்கோட்டை மக்கள்

இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்காக ஊரடங்கு அமலுக்கு வந்த உடனேயே ஆட்டோ, டாக்ஸி, பேருந்து, ரயில் மற்றும் விமானம் என அனைத்து பொது போக்குவரத்து வாகனங்களின் சேவைக்கும் உடனடியாக தடை விதிக்கப்பட்டு விட்டது. எனவே அவசர தேவைக்காக வெளியூர்களுக்கு சென்றாக வேண்டியவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.

செம... மகன் பிறந்த நாளுக்காக பெற்றோர் செய்த காரியம்... மூக்கு மேல் விரல் வைத்த புதுக்கோட்டை மக்கள்

குறிப்பாக ஊரடங்கால் வேலையிழந்த வெளிமாநில தொழிலாளர்கள்தான் ஆங்காங்கே சிக்கி கொண்டு, பெரும் சிரமத்திற்கு ஆளாக நேரிட்டது. அவர்களில் பலர் சைக்கிள் மூலமாக ஆயிரக்கணக்கான கிலோ மீட்டர்கள் பயணம் செய்து தங்கள் சொந்த ஊர்களுக்கு திரும்பினர். இன்னும் சிலரோ நடந்தே தங்கள் ஊர்களுக்கு வந்து சேர்ந்தனர்.

ராயல் என்பீல்டு ஹிமாலயன் பிஎஸ்6 - இப்படி ஒரு ரிவியூ வீடியோ இதுக்கு முன்னாடி பாத்திருக்க மாட்டீங்க!!!

செம... மகன் பிறந்த நாளுக்காக பெற்றோர் செய்த காரியம்... மூக்கு மேல் விரல் வைத்த புதுக்கோட்டை மக்கள்

எனினும் ஊரடங்கு தளர்வுகளின் ஒரு பகுதியாக தற்போது பொது போக்குவரத்து வாகனங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. ஆனால் அவற்றின் சேவை, இன்னும் முழுமையாக இயல்பு நிலைக்கு திரும்பவில்லை. மாநிலம் விட்டு மாநிலம் பயணிப்பது போன்ற தொலைதூர பயணங்களை மேற்கொள்வதில் இன்னமும் பல்வேறு சிக்கல்கள் இருந்து வருகின்றன.

செம... மகன் பிறந்த நாளுக்காக பெற்றோர் செய்த காரியம்... மூக்கு மேல் விரல் வைத்த புதுக்கோட்டை மக்கள்

அப்படிப்பட்ட சிக்கல்களை எல்லாம் வெற்றிகரமாக கடந்து, மஹாராஷ்டிரா மாநில தலைநகர் மும்பையில் இருந்து புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கறம்பகுடிக்கு கணவனும், மனைவியும் தற்போது வந்திருப்பது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. இரு சக்கர வாகனம் மூலம் அவர்கள் இவ்வளவு தொலைவை கடந்து வந்ததற்கான காரணமும் அனைவரையும் நெகிழ வைத்துள்ளது.

செம... மகன் பிறந்த நாளுக்காக பெற்றோர் செய்த காரியம்... மூக்கு மேல் விரல் வைத்த புதுக்கோட்டை மக்கள்

புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் பகுதியை சேர்ந்தவர் செல்வம். இவருக்கு 41 வயதாகிறது. இவரது மனைவி சங்கீதா. இவருக்கு 36 வயதாகிறது. இவர்கள் இரண்டு பேரும் மும்பையில் வசித்து வருகின்றனர். அங்கு பெட்டிக்கடை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. 13 வயதில் ஒரு மகள், 6 வயதில் ஒரு மகன் என செல்வம்-சங்கீதா தம்பதியினருக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.

செம... மகன் பிறந்த நாளுக்காக பெற்றோர் செய்த காரியம்... மூக்கு மேல் விரல் வைத்த புதுக்கோட்டை மக்கள்

செல்வம்-சங்கீதா தம்பதியினரின் மகளும், மகனும் தற்போது கறம்பக்குடி அருகே உள்ள பில்லக்குறிச்சியில் பாட்டி வீட்டில் உள்ளனர். இது சங்கீதாவின் பெற்றோர் வீடாகும். பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டதை தொடர்ந்து மகள், மகன் இருவரையும் பில்லக்குறிச்சியில் விட்டு விட்டு, செல்வமும், சங்கீதாவும் மும்பையில் இருந்தனர்.

செம... மகன் பிறந்த நாளுக்காக பெற்றோர் செய்த காரியம்... மூக்கு மேல் விரல் வைத்த புதுக்கோட்டை மக்கள்

ஆனால் ஊரடங்கு தீவிரமாக கடைபிடிக்கப்பட்டதையடுத்து, மகள், மகனை பார்க்க முடியால், செல்வமும், சங்கீதாவும் நீண்ட நாட்களாக கவலைப்பட்டு கொண்டிருந்தனர். இதற்கிடையே ஊரடங்கில் தளர்வுகள் வழங்கப்பட்டது. ஆனால் பேருந்து, ரயில் சேவைகள் சீரடையாத காரணத்தால், அவர்களால் பில்லக்குறிச்சிக்கு வர முடியவில்லை.

செம... மகன் பிறந்த நாளுக்காக பெற்றோர் செய்த காரியம்... மூக்கு மேல் விரல் வைத்த புதுக்கோட்டை மக்கள்

ஆனால் இன்று (அக்டோபர் 28) அவர்களுடைய மகனின் பிறந்த நாள் ஆகும். இதுவரை ஒவ்வொரு ஆண்டும் மகனின் பிறந்தநாளை அவர்கள் குடும்பத்துடன் உற்சாகமாக கொண்டாடியுள்ளனர். ஆனால் இம்முறை என்ன செய்வது? என தெரியாமல் செல்வமும், சங்கீதாவும் வருத்தப்பட்டு கொண்டிருந்தனர். எனினும் மகனின் பிறந்த நாளை அனைவரும் ஒன்றாக கொண்டாடியே தீருவது என முடிவு செய்தனர்.

செம... மகன் பிறந்த நாளுக்காக பெற்றோர் செய்த காரியம்... மூக்கு மேல் விரல் வைத்த புதுக்கோட்டை மக்கள்

இந்தியாவில் தற்போது ரயில் சேவைகள் இன்னும் சீரடையவில்லை. பேருந்துகளில் மாநிலம் விட்டு மாநிலம் பயணிப்பதும் சவாலான விஷயம்தான். ஆனால் விமானம் மூலம் வர முடியும். எனினும் விமானத்தில் வரும் அளவிற்கு செல்வத்திற்கு வசதியில்லை என கூறப்படுகிறது. எனவே செல்வமும், சங்கீதாவும் இரு சக்கர வாகனத்திலேயே மும்பையில் இருந்து புறப்பட்டு விட்டனர்.

செம... மகன் பிறந்த நாளுக்காக பெற்றோர் செய்த காரியம்... மூக்கு மேல் விரல் வைத்த புதுக்கோட்டை மக்கள்

கடந்த அக்டோபர் 20ம் தேதி நள்ளிரவு, அவர்கள் இரண்டு பேரும் மும்பையில் இருந்து இரு சக்கர வாகனத்தில் தங்கள் பயணத்தை தொடங்கினர். மும்பையில் இருந்து கறம்பக்குடி 1,400 கிலோ மீட்டர்கள் தொலைவில் அமைந்துள்ளது. இவ்வளவு கிலோ மீட்டர்களை கடந்து அவர்கள் இருவரும் கடந்த அக்டோபர் 23ம் தேதி கறம்பக்குடியை வந்தடைந்தனர்.

செம... மகன் பிறந்த நாளுக்காக பெற்றோர் செய்த காரியம்... மூக்கு மேல் விரல் வைத்த புதுக்கோட்டை மக்கள்

அதன்பின்னர் அவர்கள் இருவரும் கொரோனா வைரஸ் பரிசோதனை செய்து கொண்டுள்ளனர். அத்துடன் 2 நாட்கள் தங்களை தாங்களே தனிமையும் படுத்தி கொண்டுள்ளனர். குழந்தைகளுக்காக பெற்றோர் செய்த இந்த காரியம், புதுக்கோட்டை மக்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
A 1,400-km Two Wheeler Ride To Surprise Birthday Boy. Read in Tamil
Story first published: Wednesday, October 28, 2020, 14:50 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X