சான்ட்ரோ காரை பயன்படுத்தி வந்த பெண் தொழிலதிபர்.. போர்ஷே மசான் சொகுசு காரை வாங்கி அசத்திட்டாங்க!

இந்தியாவில் வளர்ந்து வரும் தொழிலதிபர்களில் கேராளாவைச் சேர்ந்த பார்வதி எஸ் பிள்ளையும் ஒருவர் டாக்டர் ஸ்கின் நிறுவனத்தின் டைரக்டர் இவரே ஆவார். விரைவில் 40 வயதை தொட இருக்கும் இவரே போர்ஷே மசான் (Porsche Macan) காரை வாங்கி அசத்தி இருக்கின்றார்.

ஆமாங்க, 40 வயதை தொடும் முன்னரே இந்த சொகுசு காரை பார்வதி வாங்கி இருக்கின்றார். இவர் கடந்த காலங்களில் ஹூண்டாய் சான்ட்ரோ (Hyundai Santro) கார் மாடலை பயன்படுத்தி வந்த என்பது குறிப்பிடத்தகுந்தது. இந்த நிலையிலேயே தன்னுடைய பயணங்களுக்காக புதிதாக போர்ஷே மசான் சொகுசு காரை வாங்கி இருக்கின்றார், பார்வதி.

Female entrepreneur porsche macan

இவரின் இந்த கொள்முதல் ஜெனரேஷன் ஸ்பீடு எனும் இன்ஸ்டாகிராம் பக்கத்தின் வாயிலாகவே தெரிய வந்திருக்கின்றது. மேலும், இந்த இன்ஸ்டா பதிவின் வாயிலாகவே பார்வதி முதலில் ஹூண்டாய் சான்ட்ரோ காரை பயன்படுத்தி வந்தார் என்பது தெரிய வந்திருக்கின்றது. இந்த நிலையிலேயே கொச்சியில் உள்ள ஓர் போர்ஷே விற்பனையாளர் வாயிலாகவே பார்வதி இந்த காரை வாங்கி இருக்கின்றார்.

இதுதவிர இன்னும் சில சொகுசு கார்களும் பார்வதியின் வீட்டில் உள்ளன என்பது இன்ஸ்டா பதிவின் வாயிலாக தெரிய வந்திருக்கின்றது. குறிப்பாக, அவருடைய கணவர் போர்ஷே பாக்ஸ்டர் போன்ற ஸ்போர்ட்ஸ் காரை பயன்படுத்தி வருவது தெரிய வந்திருக்கின்றது. இதுதவிர, இந்த குடும்பத்திடம் ஆடி க்யூ7 சொகுசு எஸ்யூவி போன்ற கார் மாடல்களும் பயன்பாட்டில் உள்ளன.

Female entrepreneur

போர்ஷே மசான் ஓர் எஸ்யூவி ரக கார் மாடல் ஆகும். போர்ஷே நிறுவனத்தின் ஆரம்ப நிலை எஸ்யூவி ரக கார் மாடல் இது என்பது குறிப்பிடத்தகுந்தது. 2021 ஆம் ஆண்டிலேயே இந்த காரை புதுப்பித்து போர்ஷே விற்பனைக்குக் கொண்டு வந்தது. இந்த அப்டேட்டால் ஏற்கனவே அழகாக தெரிந்த இந்த கார் மாடல் இன்னும் அழகானதாக மாறியது.

வெளி மற்றும் உட்பக்கத்திலேயே மாற்றம் செய்யப்பட்டு இருக்கின்றது. 10.9 அங்குல அளவிலான தொடுதிரை சிஸ்டமே போர்ஷே மசான் காரில் வழங்கப்பட்டு இருக்கின்றது. ஆப்பிள் கார் ப்ளே இணைப்பு வசதிக் கொண்ட திரை இதுவாகும். இந்த அம்த்துடன் சேர்த்து, போர்ஷே டைனமிக் லைட் சிஸ்டம், ஸ்போர்ட் க்ரோனோ பேக்கேஜ் மற்றும் ஏர் சஸ்பென்ஷன் என ஏகப்பட்ட அம்சங்கள் வழங்கப்பட்டு இருக்கின்றன.

இதுதவிர, பிரதிபலிக்கும் திறன் கொண்ட ஐகோன்கள், சன்ரூஃப் போன்ற அம்சங்களும் இந்த காரில் வழங்கப்பட்டு இருக்கின்றன. எஞ்சினைப் பொருத்தவரை போர்ஷே மசான் கார் மாடலில் 2.0 லிட்டர் டர்போசார்ஜட் பெட்ரோல் மோட்டாரே பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. இது அதிகபட்சமாக 261 பிஎச்பி பவரையும், 400 என்எம் டார்க்கயைும் வெளியேற்றும்.

ஸ்டாண்டர்டு தேர்விலேயே இந்த மோட்டார் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. இதன் எஸ் வேரியண்ட்டில் 2.9 லிட்டர் வி6 எஞ்சினே வழங்கப்பட்டு இருக்கின்றது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 375 பிஎச்பி பவரையும், 520 என்எம் டார்க்கையும் வெளியேற்றும் என்பது குறிப்பிடத்தகுந்தது. இத்தகைய அதீத திறனை வெளியேற்றும் மற்றும் நம்ப முடியாத ஆடம்பர அம்சங்களைத் தாங்கியிருக்கும் போர்ஷே மாசன் காரையே கேரளாவைச் சேர்ந்த பெண் தொழிலதிபர் தற்போது வாங்கி இருக்கின்றார்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் இந்த கார் மாடலை ஒரு சிலர் மட்டுமே பயன்படுத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தகுந்தது. இந்தியாவில் சொகுசு கார்களுக்கு மிகச் சிறப்பான வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. குறிப்பாக, இளம் தொழிலதிபர்களின் எண்ணிக்கை இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருக்கின்றது. இவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்பவே சொகுசு கார்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் புதிய வளர்ச்சியைக் கண்டுக் கொண்டிருக்கின்றது என்பது குறிப்பிடத்தகுந்தது.

More from DriveSpark

Article Published On: Tuesday, May 14, 2024, 18:06 [IST]
English summary
A female entrepreneur who bought a porsche macan car
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+