மோடி எக்ஸ்பிரஸ்... பிரதமர் மோடிக்கு இங்கிலாந்து வாழ் இந்தியர்களின் வித்தியாசமான வரவேற்பு!

By Ravichandran

இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும், இந்திய பிரதமர் மோடியை வரவேற்கும் விதத்தில் தனித்துவமான பஸ் ஏற்பாடு செய்யபட்டுள்ளது.

இந்திய பிரதமர் நரேந்திர மோடி அரசு முறை பயணமாக இங்கிலாந்து சென்றுள்ளார். அவரை வரவேற்க சிறப்பான ஏற்பாடுகள் செய்யபட்டுள்ளது. அதில், குறிப்பிடத்தக்க வகையில், பிரத்யேக பஸ் ஒன்று, அங்கு வாழும் இந்தியர்கள் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.

இங்கிலாந்தில் உற்சாகம்;

இங்கிலாந்தில் உற்சாகம்;

பிரதமர் மோடி வெளிநாடு பயணங்களுக்கு செல்லும் போது அவருக்கு விதவிதமான வரவேற்புகள் அளிக்கபடுகின்றது.

அமெரிக்கா, ஆஸ்திரேலியா, கனடா உள்ளிட்ட நாடுகளில், மக்கள் ஆயிரகணக்கில் மக்கள் குவிந்து வரவேற்பது வழக்கமாகி உள்ளது.

மோடி பதவி ஏற்றதில் இருந்து, அவர் தற்போது தான் முதன் முறையாக இங்கிலாந்து சென்றிருக்கிறார். இதனால், அங்கிருக்கும் இந்தியர்கள் மற்றும் இந்திய வம்சாவழியினர்கள் மோடியை வரவேற்க விதவிதமான ஏற்பாடுகள் செய்து வருகின்றனர்.

மோடி எக்ஸ்பிரஸ்;

மோடி எக்ஸ்பிரஸ்;

இங்கிலாந்தில் உள்ள இந்திய சமுதாய குழுக்கள் "மோடி எக்ஸ்பிரஸ்" என்ற பஸ் ஏற்பாடு செய்துள்ளனர்.

சுமார் ஒரு மாதத்திற்கு முன்பு தயாரான இந்த பஸ், இங்கிலாந்தின் பல்வேறு முக்கிய இடங்களை வலம் வந்தது.

நவம்பர் இரண்டாவது வாரத்தில், மோடி இங்கிலாந்து வருவதற்கு ஒரு மாதம் முன்னரே மக்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில், இந்த மோடி எக்ஸ்பிரஸ் பஸ் பல்வேறு இடங்களுக்கு பயணித்து வருகின்றது.

பஸ்ஸில் விவாதம்;

பஸ்ஸில் விவாதம்;

இந்தியாவில் சில சமயங்களில் "சாய் பே சர்ச்சா" (டீ குடித்து கொண்டே விவாதம்) என்ற நிகழ்ச்சி நடை பெறுவது வழக்கம்.

ஆனால், இங்கிலாந்தில் "பஸ் பே சர்ச்சா" (பஸ் மீது இருந்த படி விவாதம்) என்ற நிகழ்ச்சி நடத்தபட உள்ளதாக "யூ.கே வெல்கம்ஸ் மோடி" என்ற குழுவை சேர்ந்த மயூரி பார்மர் தெரிவித்தார்.

ஒலிம்பிக் ஸ்டைல் வரவேற்பு;

ஒலிம்பிக் ஸ்டைல் வரவேற்பு;

மோடியை வரவேற்க சுமார் 400 சமுதாய அமைப்புகள் பதிவு செய்துள்ள்தாக தெரிகிறது.

இந்த அமைப்புகள் அனைத்தும் ஒன்றினைந்து, மோடிக்கு ஒலிம்பிக் ஸ்டைல் வரவேற்பு அளிக்க திட்டமிட்டுள்ளனர். இந்த மாபெரும் வரவேற்பு நிகழ்ச்சி வெம்ப்லி ஸ்டேடியத்தில் அளிக்க பட உள்ளது.

தேங்காய் உடைக்கும் நிகழ்ச்சி;

தேங்காய் உடைக்கும் நிகழ்ச்சி;

இந்த மோடி எக்ஸ்பிரஸ் பஸ் மேற்கொண்ட பயணத்தை, லார்ட் டாலர் போபட் என்றவர், இந்திய முறைகள் படி தேங்காய் உடைத்து முறைப்படி துவங்கி வைத்தார்.

அப்போது, இந்த மோடி எக்ஸ்பிரஸ் அறிமுகம், சில நல்ல விஷயங்களுக்காக, இந்திய மற்றும் இங்கிலாந்து மக்களை இன்னும் அதிகமாக ஒருங்கிணைக்கும் முயற்சியாக அமைந்துள்ளது என போபட் தெரிவித்தார்.

“யூ.கே வெல்கம்ஸ் மோடி” வரவேற்பு;

“யூ.கே வெல்கம்ஸ் மோடி” வரவேற்பு;

"யூ.கே வெல்கம்ஸ் மோடி" வரவேற்பு நிகழ்ச்சிக்கான டிக்கெட்கள் வெம்பிலி ஸ்டேடியத்தால் வழங்கப்பட உள்ளது.

இந்த நிகழ்ச்சியில் சுமார் 60,000-ற்கும் அதிகமான மக்கள் கலந்து கொள்ள உள்ளார்கள் என எதிர்பார்க்க படுகிறது.

இங்கிலாந்தின் சுமார் 250 நகரங்கள் மற்றும் கிராமங்களில் இருந்து இந்த நிகழ்ச்சியில் பங்குபெற மக்கள் விண்ணப்பித்துள்ளனர்.

அனைத்து வயதினரிடமும் ஆர்வம்;

அனைத்து வயதினரிடமும் ஆர்வம்;

வெம்பிலியில் நடை பெற உள்ள நிகழ்ச்சியில் சுமார் 1.5 மில்லியன் ஒன்றாக சந்திக்க உள்ளனர்.

அங்கு பட்டாசு மற்றும் வானவேடிக்கைகள் நிகழ்த்த பட உள்ளதாக தெரிகிறது.

இந்நிகழ்ச்சியில் பங்கு பெற விண்ணபித்தவர்களில், மிகவும் சிறிய வயதுடைய பிறந்து 2 மாதங்களே ஆன குழந்தையாகும். மிகவும் வயது அதிகமான மனிதர் 100 வயது கொண்டவராக உள்ளார்.

இவ்வாறாக, மோடி வரவேற்பு நிகழ்ச்சியில், பங்கு பெற அனைவரிடமும் மிகுந்த அளவிலான ஆர்வம் வெளிப்படுகிறது.

இந்தியா-இங்கிலாந்து ஒருங்கிணைப்புக்கு உதாரணம்;

இந்தியா-இங்கிலாந்து ஒருங்கிணைப்புக்கு உதாரணம்;

மோடி எக்ஸ்பிரஸ் போன்ற ஏற்பாடுகள், இந்தியா-இங்கிலாந்து ஒருங்கிணைப்புக்கும், இந்திய மற்றும் இங்கிலாந்து மக்களை ஒருங்கிணைக்கும், சிறந்த உதாரணம் போல் விளங்குகிறது.

Most Read Articles
English summary
A Look at the ‘Modi Express’ launched in United Kingdom. Over 60,000 people are expected to attend the 'UK Welcomes Modi' reception. Prime Minister of India Narendra Modi is on trip to Great Britain, as part of his efforts to strengthen the ties between two nations.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X