பொய் இல்ல.. அவங்க விளம்பரத்துக்காகவும் சொல்லல.. இசை புயல் உண்மையாகவே இந்த காரை வாங்கிட்டாரு!
மஹிந்திரா (Mahindra) நிறுவனத்தின் லேட்டஸ்ட் அறிமுகமாக எக்ஸ்இவி 9இ (XEV 9e) மற்றும் பிஇ 6 (BE 6) கார் மாடல்கள் இருக்கின்றன. இரண்டுமே எஸ்யூவி ரக மின்சார கார்கள் ஆகும். இந்த கார்களுக்கு இந்தியர்கள் மத்தியில் நல்ல வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இதில் ஓர் கார் மாடலை இசைப் புயல் ஏஆர் ரஹ்மான் புக் செய்திருப்பதாக கடந்த சில தினங்களுக்கு முன்னர் தகவல்கள் வெளியாகின. இந்த தகவலை பலரும் நம்பவில்லை என்றே சொல்லலாம்.
குறிப்பாக, நிறுவனத்தின் விளம்பரத்திற்காக யாராவது புரளி கிளப்பி விட்டிருப்பார்கள் என்றும் ஒரு சிலர் நம்பினர். இந்த மாதிரியான சூழலிலேயே இது புரளியெல்லாம் கிடையாது, உண்மைதான் என தெரிய வந்திருக்கின்றது. ஏஆர் ரஹ்மானுக்கு சமீபத்தில் இந்த காரை மஹிந்திரா நிறுவனம் டெலிவரி கொடுத்திருக்கின்றது.

மஹிந்திரா எக்ஸ்இவி 9இ எலெக்ட்ரிக் காரையே ஏஆர் ரஹ்மான் டெலிவரி பெற்றிருக்கின்றார். சில தினங்களுக்கு முன்னர், அதாவது, இந்த காரை மஹிந்திரா நிறுவனம் டெலிவரி செய்த பின்னர், ஏஆர் ரஹ்மான் எக்ஸ்இவி 9இ காரை ஓட்டி பார்க்கும் வீடியோ இணையத்தில் வெளியாகியது.
அப்போதே இந்த காரை அவர் புக் செய்துவிட்டதாக பலர் தகவல் தெரிவித்தனர். இந்த தகவலே தற்போது உறுதியாகி இருக்கின்றது. இந்த காரை வாங்கியிருப்பதை உறுதிப்படுத்தும் விதமாக ஏஆர் ரஹ்மான் தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் ஓர் படத்தை பகிர்ந்திருக்கின்றார். மஹிந்திரா எக்ஸ்இவி 9இ காருடன் போஸ் கொடுக்கும் படத்தையே அவர் பதிவிட்டிருக்கின்றார்.
இந்த காரில் ஒலிக்கும் சில ஒலிகள் ரஹ்மானின் கை வண்ணத்தால் உருவாக்கப்பட்டவை என்பது கவனிக்கத்தகுந்தது. இதுமட்டுமல்ல இன்னும் பல்வேறு சிறப்புகளைத் தாங்கிய ஓர் எலெக்ட்ரிக் கார் மாடலே இதுவாகும். குறிப்பாக, இதன் தோற்றம் பலரைக் கவர கூடியதாக இருக்கின்றது. இதுவரை எந்தவொரு நிறுவனமும் தயாரித்திராத கவர்ச்சியான தோற்றத்தையே இந்த கார் மாடல்கள் கொண்டிருக்கின்றன.
மிக முக்கியமாக காரின் வெளிப்புற அழகிற்காக வழங்கப்பட்டு இருக்கும் ஒவ்வொரு அம்சமும் மனதை மயக்கக் கூடியதாகவே இருக்கின்றன. ஹெட்லைட், டிஆர்எல், பான்னெட், பம்பர், முழுமையாக அடைக்கப்பட்ட தோற்றம் கொண்ட கிரில், அலாய் வீல் மற்றும் காரின் பின் பக்கம் என அனைத்தும் அட்டகாசமானதாகவேக் காட்சியளிக்கின்றன.
லுக்கில் மட்டும் அல்ல சிறப்பம்சங்களைத் தாங்கியிருப்பதிலும் இது மனம் மயக்கும் காராகவே காட்சியளிக்கின்றது. திரையரங்கத்தை பிரதிபலிக்கின்ற மாதிரியான திரைகள் இந்த காரில் வழங்கப்பட்டு இருக்கின்றன. 12.3 அங்குல அளவில் மூன்று பெரிய திரைகளை இந்த காரில் மஹிந்திரா நிறுவனம் வழங்கி இருக்கின்றது.
இதுதவிர, பின் பக்க இருக்கை பயணிகளுக்காகவும் இந்த காரில் இரண்டு பொழுதுபோக்கு திரைகள் வழங்கப்பட்டு இருக்கும் என்பது கவனிக்கத்தகுந்தது. இதுமட்டுமல்ல கூடுதல் சிறப்பு வசதிகளாக இந்த காரில் விஷன் எக்ஸ் ஆக்மென்டட் ரியாலிட்டி ஹெட்ஸ் அப் திரை, மஹிந்திரா ஏஐ தொழில்நுட்பம் போன்ற அம்சங்களையும் இந்த காரில் வழங்கி இருக்கின்றனர்.
கூடுதல் சிறப்பாக, 24 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி ஸ்டோரேஜ் வசதிக் கொண்ட குவால்காம் ஸ்நேப்டிராகன் 8295 புராசஸரையும் இந்த காரில் மஹிந்திரா வழங்கி இருக்கின்றது என்பது கவனிக்கத்தகுந்தது. இதுமட்டுமில்லைங்க, இந்த காரில் பயணிகளின் பாதுகாப்பிற்காக 7 ஏர் பேக்குகள், லெவல் 2 வகை அடாஸ் அம்சம், 360 டிகிரி பார்வை திறன் கொண்ட கேமிரா உள்ளிட்டவற்றையும் மஹிந்திரா வழங்கியிருக்கின்றது.
இத்துடன், சொகுசான டிராவல் அனுபவத்தை வழங்கும் விதமாக லெதர் போர்த்தப்பட்ட இருக்கைகளை, வெண்டிலேட் மற்றும் எலெக்ட்ரிக்கல்லி அட்ஜெஸ்டபிள் வசதியுடன் அது வழங்கி இருக்கின்றது. இந்த மாதிரியான அம்சங்களே இந்தியர்களைக் கவரும் விதமாக உள்ளது. குறிப்பாக, பணக்காரர்களை வெகுவாக இந்த கார் மாடல் கவர்ந்துக் கொண்டிருக்கின்றது.
இதில் மட்டுமல்ல அதிக ரேஞ்ச் மற்றும் அதிக ஆற்றலை உருவாக்கும் காராகவும் இது இருக்கின்றது. 59 kWh மற்றும் 79 kWh ஆகிய பேட்டரி பேக் தேர்வுகளையே இந்த காரில் வழங்குகின்றனர். முதல் ஒன்று 542 கிமீ ரேஞ்சையும், இரண்டாவது ஒன்று 656 கிமீ ரேஞ்சையும் வழங்கும் என்பது கவனிக்கத்தகுந்தது.
இப்போதைய நிலவரப்படி ரியர் வீல் டிரைவ் வசதிக் கொண்ட இ-காராக மட்டுமே எக்ஸ்இவி 9இ விற்பனைக்குக் கிடைக்கின்றது. இருப்பினும், சிறிய பேட்டரி பேக் தேர்வு மற்றும் பெரிய பேட்டரி பேக் தேர்வு இடையே திறன் வெளிப்பாட்டில் மிகப் பெரிய வித்தியாசம் உள்ளது. அந்தவகையில், 228 பிஎச்பி மற்றும் 380 என்எம் டார்க்கையும், பெரிய பேட்டரி பேக் 282 பிஎச்பி மற்றும் 380 என்எம் டார்க்கையும் வெளியேற்றும்.
இத்தகைய பன்முக சிறப்புகளைத் தாங்கிய ஆடம்பர காரையே ஏஆர் ரஹ்மான் தற்போது வாங்கி இருக்கின்றார். இந்த கார் இந்தியாவில் ரூ. 21.90 லட்சம் தொடங்கி ரூ. 30.50 லட்சம் வரையிலான விலையில் விற்கப்படுகின்றது என்பது கவனிக்கத்தகுந்தது. இது வெறும் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும்.
ஏஆர் ரஹ்மான் மட்டுமல்ல இன்னும் பல பிரபலங்கள் இந்த காரை மிகுந்த ஆர்வத்துடன் வாங்கிக் கொண்டிருக்கின்றனர். சமீபத்தில் மகாராஜ பட வில்லன் அனுராக் காஷ்யப்கூட இந்த காரை வாங்கினார் என்பது கவனிக்கத்தகுந்தது. இவரும் எக்ஸ்இவி 9இ எலெக்ட்ரிக் காரை வாங்கினார் என்பது கவனிக்கத்தகுந்தது.
இந்த காரை மட்டுமல்ல பிஇ 6 மாடலையும் பலர் வாங்கிக் கொண்டிருக்கின்றனர். சொல்லப்போனால் எக்ஸ்இவி 9இ மாடலுக்கு இணையான டிமாண்டையே இந்த கார் மாடலும் இந்தியாவில் பெற்றுக் கொண்டிருக்கின்றது. இந்த காரும் எக்ஸ்இவி 9இ கார் மாடலைப் போலவே பேக் 3, பேக் 2 மற்றும் பேக் 1 என மூன்று விதமான வேரியண்டுகளில் விற்பனைக்குக் கிடைக்கின்றது.
இதன் ஆரம்ப விலை ரூ. 18.90 லட்சம் ஆகும். இது எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும். உருவத்தில் மட்டுமே இந்த காருக்கும் எக்ஸ்இவி 9இ மாடலுக்கும் இடையே வித்தியாசம் இருக்கும் என்பது கவனிக்கத்தகுந்தது. பேட்டரி பேக் மற்றும் எலெக்ட்ரிக் மோட்டார் உள்ளிட்டவற்றில் இரண்டும் ஒரே மாதிரியாகவே இருக்கும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு மிக சிறப்பான வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இதை உறுதிப்படுத்தும் விதமாகவே இப்போது எக்ஸ்இவி 9இ காருக்குக் கிடைத்துக் கொண்டிருக்கும் வரவேற்பு அமைந்திருக்கின்றது. இந்த காருக்கு மட்டுமல்ல நாட்டில் எம்ஜி விண்ட்ஸர் இவி மற்றும் நெக்ஸான் இவி ஆகியவற்றிற்கும் மிக சிறப்பான வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது என்பது கவனிக்கத்தகுந்தது.


Click it and Unblock the Notifications








