இசை புயலுக்கு இந்த காரை இவ்ளோ புடிச்சு போச்சா! டெஸ்ட் டிரைவ் பண்ணதுக்கு அப்புறம் புகழ்ந்து தள்ளிட்டாரு!

மஹிந்திரா (Mahindra) நிறுவனம் இந்தியாவின் மின்சார வாகன பிரிவை அலங்கரிக்கும் விதமாக இரண்டு எலெக்ட்ரிக் கார் (Electric Car) மாடல்களை சமீபத்தில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது. எக்ஸ்இவி 9இ (XEV 9e) மற்றும் பிஇ 6 (BE 6) இந்த கார் மாடல்களையே அது நாட்டில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தி இருக்கின்றது. இதற்கு இந்தியர்கள் மத்தியில் நல்ல வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. குறிப்பாக, தொழிலதிபர்கள் மற்றும் பிரபலங்கள் மத்தியிலும் இந்த எலெக்ட்ரிக் கார்களுக்கு மிக சிறப்பான டிமாண்ட் கிடைக்கத் தொடங்கி இருக்கின்றது.

இசைப் புயல் ஏஆர் ரஹ்மான் கூட இந்த காரை புக் செய்திருப்பதாக சமீபத்தில் தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த மாதிரியான சூழலிலேயே இசையால் மற்றவர்களை மயக்கிய ஏஆர் ரஹ்மான் இந்த காரை மெய்மறந்து இயக்கும் வீடியோ இணையத்தில் வெளியாகி உள்ளது. மஹிந்திரா நிறுவனமே அதன் அதிகாரப்பூர்வ யுட்யூப் சேனலில் இந்த வீடியோவை வெளியிட்டு இருக்கின்றது.

Ar rahman drives mahindra xev 9e

ஏஆர் ரஹ்மான் இந்த காரை ஓட்டியபோது என்ன மாதிரியான அனுபவம் கிடைத்தது என்கிற விபரங்களையே இந்த வீடியோவில் பகிர்ந்திருக்கின்றார். அவர் ஓர் கார் ரிவியூ செய்பவராகவே மாறியிருப்பது இந்த வீடியோவில் தெரிகின்றது. மேலும், ஏஆர் ரஹ்மான் உடன் மஹிந்திரா எலக்ட்ரிக் ஆட்டோமொபைல் லிமிடெட்டின் இணை நிர்வாக இயக்குநர் வேலுசாமி-யுன் உடன் இருந்தார்.

மேலும், இதில் ஓர் சிறப்பு என்னவென்றால் ஏஆர் ரஹ்மானே இந்த எலெக்ட்ரிக் கார்களுக்கு இசை அமைத்திருக்கின்றார் என்பது குறிப்பிடத்தகுந்தது. சிறப்பான கார்களுக்கு இசையால் பெருமிதம் சேர்த்த புகழ் அவருக்கு உண்டு. எனவே, எலெக்ட்ரிக் காரில் பயணிக்கும்போது ஏஆர் ரஹ்மானின் கை வண்ணத்தில் உருவான ஒலிகளை கேட்க முடியும்.

சீட் பெல்ட் அலர்ட் மற்றும் இன்டிகேட்டர்கள் ஆகியவற்றிற்கான ஒலியை இவரே இந்த கார்களுக்காக உருவாக்கி இருக்கின்றார் என்பது கவனிக்கத்தகுந்தது. இதன் வாயிலாக ஏஆர் ரஹ்மான் படங்களுக்கு மட்டுமல்ல கார்களுக்காகவும் இசையை தயார் செய்வார் என்பது தெரிய வந்திருக்கின்றது. ஏஆர் ரஹ்மான் எக்ஸ்இவி 9இ மற்றும் பிஇ 6 இரண்டில் எந்த எலெக்ட்ரிக் காரை புக் செய்திருக்கின்றார் என்பது தெரியவில்லை.

இருப்பினும், அவர் எக்ஸ்இவி 9இ கார் மாடலையே புக் செய்திருப்பார் என நம்பப்படுகின்றது. அதிக கவர்ச்சியான மற்றும் ஆடம்பர அம்சங்கள் நிறைந்த மின்சார கார் மாடலாக இது காட்சியளிக்கின்றது. இரண்டு இ-கார்களின் டெலிவரி பணிகளும் இந்த மார்ச் மாத மத்தியிலேயே தொடங்கப்பட இருக்கின்றன என்பது கவனிக்கத்தகுந்தது.

இந்த எலெக்ட்ரிக் கார்களில் 59 kWh மற்றும் 79 kWh ஆகிய இரண்டு பேட்டரி பேக் தேர்வுகளே வழங்கப்படுகின்றன. முதல் ஒன்றில் ஓர் முழு சார்ஜில் 542 கிமீ தூரமும், இரண்டாவது ஒன்றில் 656 கிமீ வரையிலும் பயணித்துக் கொள்ள முடியும் என்பது கவனிக்கத்தகுந்தது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: மஹிந்திரா நிறுவனத்தின் இந்த இரண்டு எலெக்ட்ரிக் கார் மாடல்களுக்கும் நல்ல வரவேற்புக் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. அதேவேளையில், இதற்கு போட்டியும் விரைவில் அதிகரிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது. டாடா மோட்டார்ஸ் தன்னுடைய அட்வான்ஸ்டு அம்சங்கள் தாங்கிய அவின்யா எலெக்ட்ரிக் காரை இவற்றிற்கு போட்டி அளிக்கும் விதமாக விரைவில் விற்பனைக்குக் கொண்டு வர இருக்கின்றது என்பது குறிப்பிடத்தகுந்தது.

More from DriveSpark

Article Published On: Saturday, March 1, 2025, 5:00 [IST]
English summary
A r rahman test drives mahindra xev 9e electric suv amidst high demand
மேலும்... #mahindra #electric car #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+