பைக் குழுவினரின் இமாலய பயணத்திற்காக சிறப்பு பிரார்த்தனை!
வரும் 14ந் தேதி டிரைவ்ஸ்பார்க் எடிட்டர் ஜோபோ குருவில்லா உள்ளிட்ட குழுவினர் இமயமலை பைக் பயணம் செல்வதற்கு தயாராகியுள்ளனர்.
இந்தநிலையில், இமயமலை செல்லும் குழுவினரின் பைக் பயணம் சிறப்பாக அமைவதற்காக, பெங்களூர், ஹென்னூரில் உள்ள ஆதரவற்ற முதியோர்கள் பராமரிப்பு இல்லத்தில் சிறப்பு பிரார்த்தனை கூட்டம் நேற்று நடந்தது.

லே, லடாக் பயணம்
பைக் பிரியர்களின் கனவு பயணங்களில் ஒன்றான இமயமலை பயணத்திற்கு டிரைவ்ஸ்பார்க் எடிட்டர் ஜோபோ குருவில்லா உள்ளிட்ட குழுவினர் கடந்த 15 நாட்களாக தயாராகி வருகின்றனர். பைக்குகளில் விசேஷ ஆக்சஸெரீகள் மற்றும் இதர திட்டங்களுடன் தற்போது இறுதிக்கட்ட ஆயத்தப் பணிகளில் உள்ளனர்.

பைக் பயண குழு விபரம்
கத்தாரில் பணிபுரிந்து வரும் ஜார்ஜி மேத்யூ, வினோத் ஈசவ் ஆகியோரும், பெங்களூரை சேர்ந்த மனூஜ், வினோத் மற்றும் ஜோபோ குருவில்லா ஆகியோர் கேடிஎம் டியூக் 390, ராயல் என்ஃபீல்டு மற்றும் யமஹா ஃபேஸர் பைக்குகளில் பயணிக்க திட்டமிட்டுள்ளனர். இந்த குழுவினருக்கு தேவைப்படும் உதவிகளை செய்வதற்காக, எழில் வசந்தன் மற்றும் ரோஹின் பிரவுனி ஆகியோர் செல்கின்றனர்.

பிரார்த்தனை
கடுமையான சீதோஷ்ண நிலை மற்றும் மோசமான சாலைநிலைகளை எதிர்கொண்டு தங்களது பயணத் திட்டத்தை நிறைவேற்ற தயாராகி வரும், இந்த குழுவினரின் பைக் பயணம் சிறப்பாக அமைவதற்காக, பெங்களூர், ஹென்னூரில் உள்ள Sisters of the poor என்ற முதியோர் இல்லத்தில் நேற்று பிரார்த்தனை கூட்டம் நடந்தது.

உதவி
பைக் குழுவினர் சார்பில் அந்த முதியோர் இல்லத்தில் இருக்கும் 80 பேருக்கு காலை உணவு வழங்கப்பட்டது.

தயார்
இந்த நிகழ்வில் பைக் குழுவினர் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டர். மேலும், பைக் குழுவினரும் அங்குள்ள முதியோரிடம் அளவளாவினர்.

முதியோர் இல்லம் பற்றி...
பெங்களூர், ஹென்னூரில் செயல்பட்டு வரும் சிஸ்டர்ஸ் ஆஃப் தி புவர் முதியோர் இல்லத்தில் 65 வயதுக்கு மேற்பட்ட முதியோர்கள் பராமரிக்கப்படுகின்றனர். சாதி, மதம் மற்றும் பாலின பாகுபாடு இல்லாமல் இங்கு பலர் பராமரிக்கப்பட்டு வருகின்றனர்.
உதவும் நல் உள்ளங்கள் இந்த தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு விபரங்கள் அறிந்து கொள்ளலாம்.

பைக் பயண குழுவினருடன்...
இன்று பைக் பயண குழுவினரை நேரில் சந்தித்து பயணம் சிறக்க டிரைவ்ஸ்பார்க் தளம் சார்பில் எமது வாழ்த்துகளை தெரிவித்தோம்.


Click it and Unblock the Notifications








