லண்டன் சாலைகளில் கலக்கலாக வலம் வந்த 'மேட் இன் இந்தியா' டிசி அவந்தி கார்!
இந்தியாவின் முதல் ஸ்போர்ட்ஸ் கார் என்ற பெருமைக்குரிய டிசி அவந்தி கார், லண்டன் சாலைகளில் உலா வந்து ஆச்சரியத்தை அளித்துள்ளது. லம்போர்கினியும், அஸ்டன் மார்ட்டிகன்களும் வலம் வந்து பெருமை பெற்ற லண்டன் சாலைகளில், இந்திய தயாரிப்பு மாடலான அவந்தியும் வலம் வந்தது அனைவரையும் கவர்ந்தது.
மஹாராஷ்டிர மாநிலம், புனேயில் உற்பத்தி செய்யப்படுவதால், அம்மாநிலத்தின் தற்காலிக பதிவு எண் கொண்ட அந்த கார், டிசி டிசைன் நிறுவனத்தால் உருவாக்கப்பட்டுள்ளது. டிசி டிசைன் நிறுவனம் கார் கஸ்டமைஸ் செய்வதில் புகழ்பெற்று விளங்குகிறது.

வெளிநாட்டு ஆர்டர்
ரூ.35.93 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் சமீபத்தில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. இந்த டிசி அவந்தி காரின் அறிமுகத்தின் போது, இதற்கு வெளிநாடுகளில் இருந்து ஏராளமான ஆர்டர்களில் குவிவதாக டிசி டிசைன் நிறுவனம் தெரிவித்திருந்தது.

எஞ்சின்
டிசி அவந்தி காரில் இருக்கும் டர்போ சார்ஜருடன் கூடிய (யூரோ-5 மாசு தரம்) 2.0 லிட்டர் இஞ்ஜின், அதிகபட்சமாக 250 ஹார்ஸ்பவரையும், 365 என் எம் டார்க்கையும் வெளிப்படுத்தும் திறன் உள்ளது. 6 - ஸ்பீட் டிரான்ஸ்மிஷன் வசதி கொண்டது.

டாப் ஸ்பீடு
இந்த காரின் உச்சபட்ச வேகமாக மணிக்கு 200 கிலோமிட்டர் அல்லது அதற்கும் கூடுதலான வேகத்தில் செல்லும். எனினும், எலக்ட்ரானிக்கல் முறையில் இதனை இயக்கும் போது, அதிகப்படியாக மணிக்கு 200 கிலோமிட்டர் வரையிலான வேகத்தில் மட்டுமே செலுத்தும் வகையில் கட்டுப்படுத்தப்பட்டிருக்கிறது.
Recommended Video


ஏர்பேக் இல்லை
இந்த டிசி அவந்தி காரில் பாதுகாப்பு அம்சங்களில் சில குறைபாடுகள் உள்ளது. இந்த ஸ்போர்ட்ஸ் காரில் ஏர்பேக் போன்ற அடிப்படையான பாதுகாப்பு சாதனங்கள் கூட இல்லை. எப்படி ஆகினும், லண்டனில் மஹாராஷ்திராவின் பதிவு எண் கொண்ட காரை காண்பது நினைவைவிட்டு அகலா அனுபவம் என்றே கூற வேண்டும்.
வீடியோவை இங்கே காணலாம்;
யூ-ட்யூப் வீடியோ : லண்டனில் காணப்பட்ட இந்திய ஸ்போர்ட்ஸ் கார் டிசி அவந்தி கார்!


Click it and Unblock the Notifications








