ஏர்பஸ் விமானங்களுக்கு எப்படி பெயர் வைக்கப்படும் தெரியுமா? A360 மற்றும் A370 இல்லாமல் போனதற்கு காரணம் இதுதான்!

ஏர்பஸ் நிறுவனத்தின் விமானங்களுக்கு எப்படி பெயர் சூட்டப்படுகிறது? என்பது குறித்த சுவாரஸ்யமான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

ஏர்பஸ் விமானங்களுக்கு எப்படி பெயர் வைக்கப்படும் தெரியுமா? A360 மற்றும் A370 இல்லாமல் போனதற்கு காரணம் இதுதான்!

உலகின் மிகப்பெரிய விமான உற்பத்தி நிறுவனங்களில் ஒன்று ஏர்பஸ். போயிங் நிறுவனத்திற்கு சரி நிகர் போட்டியாளராக ஏர்பஸ் திகழ்ந்து வருகிறது. உலக அளவில் வர்த்தக ரீதியில் பயன்படுத்தப்படும் விமான உற்பத்தியில், ஏர்பஸ் மற்றும் போயிங் ஆகிய இரண்டு நிறுவனங்களும்தான் தனி சாம்ராஜ்யம் நடத்தி வருகின்றன.

ஏர்பஸ் விமானங்களுக்கு எப்படி பெயர் வைக்கப்படும் தெரியுமா? A360 மற்றும் A370 இல்லாமல் போனதற்கு காரணம் இதுதான்!

சரி, ஏர்பஸ் விமானங்களில் நீங்கள் பயணம் செய்துள்ளீர்களா? இதற்கு உங்கள் பதில் ஆம் என்றால், ஏர்பஸ் விமானங்களின் பெயர்கள் ஏன் இப்படி உள்ளது? என்ற சந்தேகம் உங்களுக்கு இருக்கும். ஆம், ஏர்பஸ் விமானங்களின் பெயர்கள் பொதுவாக A310, A320, A330 என இருக்கும். ஏர்பஸ் நிறுவனத்தின் விமானங்களுக்கு ஏன் இப்படி பெயர் சூட்டப்படுகிறது? என்பதை இந்த செய்தியில் பார்க்கலாம்.

ஏர்பஸ் விமானங்களுக்கு எப்படி பெயர் வைக்கப்படும் தெரியுமா? A360 மற்றும் A370 இல்லாமல் போனதற்கு காரணம் இதுதான்!

ஏர்பஸ் நிறுவனம் முதன் முதலில் உற்பத்தி செய்த விமானம் ஏர்பஸ் A300 ஆகும். இதில், முதல் எழுத்தான A என்பது Airbus நிறுவனத்தின் முதல் எழுத்தை குறிக்கிறது. அதே சமயம் 300 என்பது அந்த விமானத்தின் திறனை குறிக்கும் எண் ஆகும். இதன்பின்னர் இந்த முறையையே பின்பற்றி விமானங்களுக்கு பெயரிட ஏர்பஸ் நிறுவனம் முடிவு செய்தது.

ஏர்பஸ் விமானங்களுக்கு எப்படி பெயர் வைக்கப்படும் தெரியுமா? A360 மற்றும் A370 இல்லாமல் போனதற்கு காரணம் இதுதான்!

அதாவது பத்து பத்தாக அதிகரித்து விமானங்களுக்கு பெயரிடும் முறையை ஏர்பஸ் நிறுவனம் தொடங்கியது. இதன்படி A310, A320, A330, A340, A350 மற்றும் A380 என விமானங்களுக்கு பெயர் சூட்டப்பட்டது. இங்கே நீங்கள் ஒரு விஷயத்தை கவனித்தீர்களா? A360 மற்றும் A370 ஆகிய பெயர்களில் விமானங்கள் இருக்காது.

ஏர்பஸ் விமானங்களுக்கு எப்படி பெயர் வைக்கப்படும் தெரியுமா? A360 மற்றும் A370 இல்லாமல் போனதற்கு காரணம் இதுதான்!

ஆம், A360 மற்றும் A370 ஆகிய பெயர்களில் ஏர்பஸ் நிறுவனம் விமானங்களை தவிர்த்து விட்டது. இதற்கு பின்னால் ஒரு காரணம் உள்ளது. ஏர்பஸ் நிறுவனம் உற்பத்தி செய்த மிகப்பெரிய விமானம் A380 ஆகும். ஒருவேளை எதிர்காலத்தில் சிறிய விமானங்களை தயாரிப்பது என முடிவெடுத்தால் என்ன செய்வது? என்பதற்காக, A350 மற்றும் A380 ஆகியவற்றுக்கு இடைப்பட்ட பெயர்களை ஏர்பஸ் ஒதுக்கி விட்டது.

ஏர்பஸ் விமானங்களுக்கு எப்படி பெயர் வைக்கப்படும் தெரியுமா? A360 மற்றும் A370 இல்லாமல் போனதற்கு காரணம் இதுதான்!

வரும் காலங்களில் ஏர்பஸ் நிறுவனம் சிறிய விமானங்களை தயாரிக்கும் பட்சத்தில், A350 மற்றும் A380 ஆகியவற்றுக்கு இடையேயான பெயர்கள் சூட்டப்படலாம். எனவே தற்போதைய நிலையில், A360 மற்றும் A370 ஆகிய பெயர்களில் ஏர்பஸ் விமானங்கள் இல்லை. ஆனால் நீங்கள் கூகுளில் தேடினால், A360 என்ற பெயரில் விமானங்களின் புகைப்படங்கள் கிடைக்கலாம்.

ஏர்பஸ் விமானங்களுக்கு எப்படி பெயர் வைக்கப்படும் தெரியுமா? A360 மற்றும் A370 இல்லாமல் போனதற்கு காரணம் இதுதான்!

அது விமான ஆர்வலர்கள் கற்பனையாக உருவாக்கிய புகைப்படங்களாக இருப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன. அதே நேரத்தில் ஏர்பஸ் நிறுவனத்தில் A318 மற்றும் A319 ஆகிய பெயர்களில் விமானங்கள் இருக்கின்றன. அப்படியானால் இந்த விமானங்களுக்கு எப்படி பெயர் சூட்டப்பட்டது? என்ற கேள்வி உங்களுக்கு வரலாம்.

ஏர்பஸ் விமானங்களுக்கு எப்படி பெயர் வைக்கப்படும் தெரியுமா? A360 மற்றும் A370 இல்லாமல் போனதற்கு காரணம் இதுதான்!

320 என்பதற்கு நெருக்கமான இந்த எண்கள் A320 விமானத்தில் மாற்றங்கள் செய்யப்பட்டு உருவாக்கப்பட்ட விமானங்கள் என்பதை காட்டுகிறது. ஏர்பஸ் A318 மற்றும் A319 ஆகிய 2 விமானங்களும், ஏர்பஸ் A320 குடும்பத்தின் உறுப்பினர்கள் ஆகும். இதேபோல் ஒவ்வொரு நிறுவனமும் தங்களது விமானங்களுக்கு பெயரிடுவதற்கு குறிப்பிட்ட ஒரு நடைமுறையை பின்பற்றி வருகின்றன.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
A310, A320, A330, A340, A350, A380: How Are Airbus Airplanes Named - We Explain. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X