ஒரு காலத்துல மொத்த ஸ்டேட்டையும் அடக்கி ஆண்டவர் பையனா இது! மூனே கால் கோடி ரூபா கார்ல ஹீரோ மாரி வந்து இறங்கறாரு!
இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் சொகுசு கார்களில் ஒன்று ரேஞ்ச் ரோவர் ஆட்டோபயோகிராபி (Range Rover Autobiography). திரையுலக நட்சத்திரங்கள் பலரிடமும் ரேஞ்ச் ரோவர் ஆட்டோபயோகிராபி கார் உள்ளது. ஆலியா பட்-ரன்பீர் கபூர் தம்பதி (Alia Bhatt-Ranbir Kapoor), பூஜா ஹெக்டே (Pooja Hegde) மற்றும் சோனம் கபூர் (Sonam Kapoor) உள்ளிட்ட திரை நட்சத்திரங்களிடம் எல்லாம், ரேஞ்ச் ரோவர் ஆட்டோபயோகிராபி கார் உள்ளது. இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் ரேஞ்ச் ரோவர் ஆட்டோபயோகிராபி காரின் விலை 2.70 கோடி ரூபாயாக உள்ளது.
கொஞ்சம் பொறுங்கள். இது எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-Showroom Price) மட்டுமே. ஆன்-ரோடு விலை (On-Road Price) 3.25 கோடி ரூபாய்க்கு நெருக்கமாக வரும். இவ்வளவு விலை உயர்ந்த காரில், பிரபல அரசியல்வாதி ஒருவர் வந்து இறங்கும் வைரல் வீடியோ (Viral Video) ஒன்று யூடியூப் (YouTube) தளத்தில் தற்போது பதிவிடப்பட்டுள்ளது.

இந்த வைரல் வீடியோவில் நாம் பார்ப்பது, ஆதித்யா தாக்கரே (Aaditya Thackeray) இவர். இவரை பற்றிய அறிமுகமே யாருக்கும் தேவையில்லை. இருப்பினும் தெரியாதவர்களுக்காக இங்கே ஒரு சிறிய விளக்கம். மஹாராஷ்டிரா முன்னாள் முதலமைச்சர் உத்தவ் தாக்கரேவின் (Uddhav Thackeray) மகன்தான் ஆதித்யா தாக்கரே.
இவர் மஹாராஷ்டிரா மாநிலத்தில் கேபினட் அமைச்சராக பணியாற்றியவர். இதன் மூலம் ஒரு சமயத்தில் மஹாராஷ்டிரா மாநிலத்தில் சர்வ வல்லமை பொருந்தியவர்களாக அவர்கள் விளங்கினர். ஆனால் இவர்கள் சார்ந்த சிவசேனா (Shiv Sena) கட்சிக்குள் புயல் வீசி, நிலைமை தலைகீழாக மாறியது தனிக்கதை.

இந்த சூழலில்தான் ரேஞ்ச் ரோவர் ஆட்டோபயோகிராபி காரில் ஆதித்யா தாக்கரே வந்து இறங்கும் வைரல் வீடியோ சமூக வலை தளங்களில் தற்போது வைரலாக பரவி வருகிறது. இந்த வீடியோவை காணும் நெட்டிசன்கள் பலரும் ஆதித்யா தாக்கரே சினிமா நடிகர்களை போல் தோற்றமளிப்பதாக கமெண்ட் செய்து வருகின்றனர்.
இந்த வீடியோ எங்கு எடுக்கப்பட்டது? எந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக ஆதித்யா தாக்கரே வந்தபோது எடுக்கப்பட்டது? என்ற விபரங்கள் எல்லாம் தெரியவரவில்லை. இருப்பினும் அவர் பயன்படுத்தியது ரேஞ்ச் ரோவர் ஆட்டோபயோகிராபி கார் ஆகும். இந்த விலை உயர்ந்த காரில், 3.0 லிட்டர் 6 சிலிண்டர் பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷன் வழங்கப்பட்டுள்ளது.
அதிகபட்சமாக 5,500 ஆர்பிஎம்மில் 394 பிஹெச்பி பவரையும், 2,000 ஆர்பிஎம்மில் 550 என்எம் டார்க் திறனையும் உருவாக்கி, சாலைகளில் சீறிப்பாய்ந்து செல்லக்கூடிய வகையில் இந்த இன்ஜின் ட்யூனிங் செய்யப்பட்டுள்ளது. இது ஆல் வீல் டிரைவ் சிஸ்டம் (AWD - All Wheel Drive) கொண்ட கார்களில் ஒன்றாகும்.
எனவே இன்ஜின் உருவாக்கும் சக்தியானது, காரின் 4 சக்கரங்களுக்கும் செலுத்தப்படும். எனவே மோசமான காலநிலைகளில் வலுவலுப்பான சாலைகளிலும் இந்த கார் சிறப்பாக செயல்படும். அத்துடன் சவால் நிறைந்த நிலப்பரப்புகளையும் இந்த கார் வெற்றிகரமாக கடக்கும். இதன் காரணமாகவே ரேஞ்ச் ரோவர் ஆட்டோபயோகிராபி காரை பலரும் விரும்பி வாங்குகின்றனர்.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: விலை உயர்ந்த கார்களில் ஆதித்யா தாக்கரே தென்படுவது இது முதல் முறையல்ல. கடந்த காலங்களில் பிஎம்டபிள்யூ 5-சீரிஸ் ஜிடி (BMW 5-Series GT) காருடன் அவரை பார்க்க முடிந்துள்ளது. அத்துடன் ரேஞ்ச் ரோவர் வோக் (Range Rover Vogue) காரிலும் அவரை கடந்த காலங்களில் காண முடிந்துள்ளது. இதன் மூலம் விலை உயர்ந்த கார்களில் பயணிப்பதை ஆதித்யா தாக்கரே விரும்ப கூடியவர் என்பது தெரிய வருகிறது.


Click it and Unblock the Notifications








