பெண்ணா இருந்துகிட்டு இப்படி ஒரு பைக்கை வாங்கியிருக்காங்களா!.. அதுவும் இந்த பைக்கை வாங்கிய முதல் பெண் இவங்கதானா
பெண்ணா இருந்துகிட்டு இப்படி ஒரு பைக்கை வாங்கியிருக்காங்களா.. என இணையத்தில் பலரை புலம்ப செய்திருக்கின்றார் இன்ஸ்டா புகழ் ஆக்ரிதி ராணா. பைக்கை வாங்க ஆணாகதான் இருக்க வேண்டும் என்கிற அவசியம். ஆண், பெண் யாராக இருந்தாலும் பைக்கை வாங்கலாம். பைக்கை கையாளும் திறன் இருந்தால் போதும். அந்தவகையில் ஆக்ரிதி ராணா இரண்டு சக்கர வாகனங்களின்மீது அதீத ஆர்வம் மற்றும் அவற்றை ஓட்டுவதில் கைதேர்ந்தவராகவும் காட்சியளிக்கின்றார். இந்த நிலையிலேயே அவர் இந்தியாவில் எந்தவொரு பெண்ணும் வாங்காத டூ-வீலரை வாங்கி இருக்கின்றார்.
ஆக்ரிதி ராணா தற்போது அப்ரில்லா ஆர்எஸ் 457 ஸ்போர்ட்ஸ் பைக் மாடலையே வாங்கியிருக்கின்றார். இந்தியாவில் இந்த பைக்கை வாங்கும் முதல் பெண் இவரே என கூறப்படுகின்றது. பெண்கள் மத்தியில் சூப்பர் பைக்குகளுக்கு நல்ல வரவேற்புக் கிடைக்க ஆரம்பித்திருக்கின்றது. இதை உறுதிப்படுத்தும் விதமாக ஆக்ரிதி ராணா அப்ரில்லாவின் ஆர்எஸ்457 சூப்பர் பைக்கை வாங்கி இருக்கின்றார். இந்த பைக் கொள்முதலை அவரே இன்ஸ்டாவில் வீடியோவாக பதிவிட்டு உறுதிப்படுத்தி இருக்கின்றார். பைக்கை தன்னுடைய சகோதரருடன் வந்தே அவர் வாங்கியிருக்கின்றார்.

கவர்ச்சியான தோற்றம் மற்றும் அதிக ஆற்றலை வெளியேற்றுவதற்கு பெயர்போன தயாரிப்பாக அப்ரில்லா ஆர்எஸ்457 காட்சியளிக்கின்றது. இந்த பைக்கை அப்ரில்லா நிறுவனம் ஆர்எஸ்660 மாடலை தழுவியே உருவாக்கி இருக்கின்றது என்பது கவனிக்கத்தகுந்தது. டிசைன் உள்ளிட்டவை அதை பிரதிபலிக்கும் வகையிலேயே இருக்கும். ஆனால் எஞ்சினைப் பொருத்த வரை 457 சிசி மோட்டாரே பயன்படுத்தப்பட்டு இருக்கும்.
இது ஓர் பாரல்லல் ட்வின் சிலிண்டர் மோட்டார் ஆகும். இந்த எஞ்சின் அதிகபட்சமாக 47 பிஎச்பி மற்றும் 48 என்எம் டார்க்கை வெளியேற்றும். 6 ஸ்பீடு கியர்பாக்ஸே இதில் பயன்படுத்தப்பட்டு இருக்கும் என்பது கவனிக்கத்தகுந்தது. அப்ரில்லா ஆர்எஸ்457, இந்தியாவில் விற்பனைக்குக் கிடைக்கும் காஸ்ட்லியான பைக்குகளில் ஒன்றாகும். இந்த பைக்கின் விலை ரூ. 4.10 லட்சம் ஆகும். இது எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே என்பது குறிப்பிடத்தகுந்தது.
இந்த விலைக்கு மிக அதிக பிரீமியம் தர அம்சங்களை இந்த பைக் தாங்கி இருக்கும் என்பது கவனிக்கத்தகுந்தது. மிக முக்கியமாக மூன்று விதமான ரைடிங் மோட்கள், மூன்று விதமான லெவல்களைக் கொண்ட டிராக்சன் கன்ட்ரோல், டூயல் சேனல் ஏபிஎஸ் போன்ற அம்சங்களை எல்லாம் இந்த பைக் மாடல் தனக்குள் தாங்கி இருக்கின்றது என்பது குறிப்பிடத்தகுந்தது.
தொடர்ந்து இந்த பைக்கில் மிக சிறந்த ரைடு அனுபவத்தை வழங்கும் பொருட்டே அதன் சஸ்பென்ஷன் செட்-அப் வழங்கப்பட்டு இருக்கின்றது. அந்தவகையில், முன் பக்கத்தில் 41 மிமீ யுஎஸ்டி ஃபோர்க்கும், பின் பக்கத்தில் மோனோஷாக் ஆகியவையே அப்ரில்லா ஆர்எஸ்457 பைக்கில் வழங்கப்பட்டு இருக்கின்றன.
இதேபோல், இந்த பைக்கில் மிக சிறந்த பிரேக்கிங் அனுபவத்திற்காக முன் பக்க வீலில் 320 மிமீ டிஸ்க்கும், பின் பக்கத்தில் 220 மிமீ டிஸ்க்கும் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. இந்தியாவில் அப்ரில்லா ஆர்எஸ்457 பைக் கேடிஎம் ஆர்சி 390 (KTM RC 390) மற்றும் கவாஸாகி நிஞ்சா 400 (Kawasaki Ninja 400) ஆகிய பைக் மாடல்களுக்கு போட்டியளிக்கும் விதமாகவே விற்பனைக்குக் களமிறக்கப்பட்டு இருக்கின்றது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் இந்த பைக்கிற்கு சூப்பர் பைக் விரும்பிகள் மத்தியில் கணிசமான அளவு நல்ல வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. குறிப்பாக பிரபல பாலிவுட் நடிகர் ஜான் ஆபிரகாம்கூட இந்த பைக்கை பயன்படுத்தி வருகின்றார் என்பது குறிப்பிடத்தகுந்தது. இந்த நிலையிலேயே தற்போது இன்ஸ்டா புகழ் ஆக்ரிதி ராணா அப்ரில்லா ஆர்எஸ் 457 பைக்கை வாங்கி, தானும் அந்த பைக்கின் ஃபேன் என்பதை உறுதிப்படுத்தி இருக்கின்றார்.


Click it and Unblock the Notifications








