ஆம் ஆத்மி அமைச்சர்களுக்கு டொயோட்டா இன்னோவா கார்!!
ஊழற்ற எளிமையான அரசியல் என்ற கொள்கையுடன் ஆட்சியை பிடித்த ஆம் ஆத்மி கட்சி, ஆட்சியமைத்து ஒரு வாரத்திற்குள் பல்வேறு சர்ச்சைகளிலும், சிக்கல்களிலும் சிக்கித் தவித்து வருகிறது.
அரசு சார்பில் ஒதுக்கப்பட்ட ஆடம்பர இல்லத்தை ஆம் ஆத்மியின் தலைவரும், டெல்லி முதல்வருமான அர்விந்த் கேஜ்ரிவால் ஏற்ககூடாது என அவரது ஆதரவாளர்களே எதிர்ப்புக் காட்டியுள்ளனர். இதனால், அந்த வீட்டில் குடியேறும் முடிவை கேஜ்ரிவால் தற்போது கைவிட்டுள்ளதாக தெரிகிறது.
இந்த நிலையில், ஆம் ஆத்மியின் அமைச்சர்களுக்கு அரசு சார்பில் டொயோட்டா இன்னோவா கார்கள் வழங்கப்பட்டுள்ளன. பதவியேற்பு விழாவிற்கும், அதைத்தொடர்ந்து, அலுவலகத்துக்கும் ஆட்டோ ரிக்ஷாவிலும், மெட்ரோ ரயிலிலும் வந்து பரபரப்பை கிளப்பிய ஆம் ஆத்மி அமைச்சர்கள் நேற்று அரசு சார்பில் வழங்கப்பட்ட டொயோட்டா இன்னோவா காரில் ஜம்மென்று வந்து இறங்கினர்.
இதுபோன்ற கார்களை பயன்படுத்துவது ஆம் ஆத்மியின் சிக்கன கொள்கைகளுக்கு எதிராக தெரியவில்லையா என்று அர்விந்த் கேஜ்ரிவாலிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு" அரசு சார்பில் வழங்கப்பட்ட காரை பயன்படுத்தமாட்டோம் என்று கூறவில்லை. விஐபி கலாச்சாரத்தை மட்டுமே எதிர்க்கிறோம். கார்களில் சிவப்பு சுழல் விளக்கு பொருத்துவதை தவிர்ப்போம்," என்று கூறியுள்ளார்.
இதே கருத்தை ஆம் ஆத்மியின் முக்கிய தலைவர்களில் ஒருவரும், டெல்லியின் நகர்ப்புற அமைச்சராக பதவியேற்றிருக்கும் மணிஷ் சிசோடியாவும் தெரிவித்துள்ளார். ஆனால், முதல்வர் கேஜ்ரிவால் மட்டும் தனது மாருதி வேகன் ஆர் காரிலேயே தொடர்ந்து அலுவலகம் வருகிறார்.
இந்திய மார்க்கெட்டின் சூப்பர் டூப்பர் ஹிட் எம்பிவி காரான டொயோட்டா இன்னோவா பற்றிய முக்கிய தகவல்களையும், இந்த காரின் A to Z தகவல்களை தெரிந்து கொள்வதற்க்கான லிங்க் கடைசி ஸ்லைடில் இணைக்கப்பட்டுள்ளது.

இன்பமய இன்னோவா
கடந்த 2005ல் அறிமுகம் செய்யப்பட்ட இன்னோவா கார் கடந்த 2009, 2011 மற்றும் 2013 என மூன்று முறை மேம்படுத்தப்பட்டு விற்பனைக்கு விடப்பட்டது. இதுவரை இந்தியாவில் 4.5 லட்சம் இன்னோவா கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

தலைசுற்றும்...
பெட்ரோல் மற்றும் டீசல் மாடல்களில் விற்பனைக்கு கிடைக்கிறது. இன்னோவாவை வாங்க செல்பவர்கள் டீசல் வேரியண்ட்டுகளின் லிஸ்ட்டை பார்த்து தலைசுற்றல் வந்துவிடும். மாசுக்கட்டுப்பாட்டு அம்சம், இருக்கை அமைப்பு மற்றும் வசதிகளை பொறுத்து பெட்ரோல் மாடல் 3 வேரியண்ட்டுகளிலும், டீசல் மாடல் 22 வேரியண்ட்டுகளிலும் விற்பனை செய்யப்படுகிறது.

விலை
பெட்ரோல் மாடல் ரூ.10.20 லட்சம் முதல் ரூ.13.69 லட்சம் வரையிலும், டீசல் மாடல் ரூ.9.51 லட்சம் முதல் ரூ.15.06 லட்சம் வரையிலான விலையில் கிடைக்கிறது.

எஞ்சின்
பெட்ரோல் மாடலில் 131 பிஎச்பி சக்தியையும், 181 என்எம் டார்க்கையும் அளிக்கும் 2.0 லிட்டர் எஞ்சினும், டீசல் மாடலில் 101 பிஎச்பி ஆற்றலையும், 200 என்எம் டார்க்கையும் அளிக்கம் 2.5 லிட்டர் எஞ்சினும் கிடைக்கிறது.

இது பத்தலை...
இதெல்லாம் பத்தலை, பத்தலை என்று கூறி இன்னோவா பற்றி முழுமையாக அறிந்து கொள்ள ஆவலா? இங்கே கிளிக் செய்யுங்கள். அனைத்தும் கிடைக்கும்.

ஒரே நம்பிக்கை
ஊழலால் ஊனப்பட்டு கிடக்கும் சமுதாயத்தின் ஒரே நம்பிக்கை ஒளியாய் தங்களை கைகளில் ஏந்தி, கண்களில் நம்பிக்கை ஒளி ததும்ப உங்களின் பின்னால் நிற்கும் இந்த இளைஞர்களின் கனவை பொய்யாக்கிவிடாதீர்கள்.


Click it and Unblock the Notifications








