700 கோடி சொத்து வைத்துள்ள நடிகரின் மருமகனா இது! மிடில் க்ளாஸ் மக்கள் பயன்படுத்தும் கார்ல வந்து எறங்கராரு!

சினிமா நடிகர்களை பொறுத்தவரையில், விலை உயர்ந்த சொகுசு கார்கள் (Luxury Cars) எல்லாம், அவர்களின் அந்தஸ்தின் அடையாளமாக கருதப்படுகின்றன. எனவே சினிமா நடிகர்களை சாதாரண கார்களில் காண்பது என்பதெல்லாம் மிகவும் அரிதான ஒரு விஷயமாக உள்ளது. வளர்ந்து வரும் இளம் நடிகர்களும் கூட இதற்கு விதிவிலக்கு கிடையாது. யூஸ்டு கார் (Used Car) மார்க்கெட்டிலாவது, ஒரு சொகுசு காரை வாங்கி அவர்கள் வைத்து கொள்கின்றனர். ஆனால் வலிமையான சினிமா பின்னணி கொண்ட குடும்பத்தில் இருந்து வந்துள்ள ஒரு இளம் நடிகர் எளிமையான கார் ஒன்றில் வலம் வந்து கொண்டுள்ளார்.

பாலிவுட் திரையுலகில் வளர்ந்து வரும் இளம் நடிகர்களில் ஒருவராக அறியப்படும் அமன் தேவ்கன் (Aaman Devgan) பற்றிதான் நாங்கள் இங்கே பேசி கொண்டுள்ளோம். இவர் பிரபல பாலிவுட் நடிகரான அஜய் தேவ்கனின் (Ajay Devgan) சகோதரி மகன் ஆவார். அதாவது அஜய் தேவ்கனுக்கு, அமன் தேவ்கன் மருமகன் முறை ஆகிறார்.

Aaman Devgan Spotted In MG Hector Plus

அஜய் தேவ்கன் பாலிவுட் திரையுலகின் பிரபலமான நடிகர்களில் ஒருவர். நடிகை கஜோலின் (Kajol) கணவர் இவர்தான். இவர்கள் இருவரின் சொத்து மதிப்பு (Net Worth) சுமார் 700 கோடி ரூபாய் ஆகும். இப்படிப்பட்ட வலுவான சினிமா பின்னணி கொண்ட குடும்பத்தில் இருந்து வந்திருந்தாலும் கூட, அமன் தேவ்கன் எளிமையான காரில் பயணம் செய்து வருகிறார்.

அது எம்ஜி ஹெக்டர் ப்ளஸ் (MG Hector Plus) ஆகும். இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் எம்ஜி ஹெக்டர் ப்ளஸ் காரின் ஆரம்ப விலை வெறும் 17.50 லட்ச ரூபாயாக மட்டுமே உள்ளது. அதே நேரத்தில் இந்த காரின் டாப் வேரியண்ட்டின் விலை 23.67 லட்ச ரூபாயாக இருக்கிறது. இவை எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-showroom Price) ஆகும்.

MG Hector

இது 6 சீட்டர் மற்றும் 7 சீட்டர் ஆப்ஷன்களில் கிடைத்து கொண்டுள்ள எஸ்யூவி (SUV) ரகத்தை சேர்ந்த கார்களில் ஒன்று. 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் மற்றும் 2.0 லிட்டர் டீசல் இன்ஜின் என எம்ஜி ஹெக்டர் ப்ளஸ் காரில் மொத்தம் 2 இன்ஜின் ஆப்ஷன்கள் (Engine Options) வழங்கப்படுகின்றன. அதே நேரத்தில் இந்த காரில் அதிநவீன வசதிகளுக்கு (Features) சற்றும் பஞ்சம் இல்லை.

இதில், 14 இன்ச் டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், 7 இன்ச் முழு டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர், ஆப்பிள் கார்பிளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ, வயர்லெஸ் செல்போன் சார்ஜர், முன் பகுதியில் வென்டிலேஷன் உடன் கூடிய இருக்கைகள், ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கண்ட்ரோல் மற்றும் பெரிய பனரோமிக் சன்ரூஃப் போன்றவை எல்லாம் குறிப்பிடத்தக்கவை ஆகும்.

எம்ஜி ஹெக்டர் காரின் 5 சீட்டர் மாடல், எம்ஜி ஹெக்டர் (MG Hector ) என்ற பெயரில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும். எம்ஜி ஹெக்டர் ப்ளஸ் காரில் வழங்கப்படும் அதே இன்ஜின் ஆப்ஷன்கள்தான், எம்ஜி ஹெக்டர் காரிலும் வழங்கப்படுகின்றன.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: இந்திய சந்தையில் தற்போது டாடா சஃபாரி (Tata Safari), மஹிந்திரா எக்ஸ்யூவி700 (Mahindra XUV700) மற்றும் ஹூண்டாய் அல்கஸார் (Hyundai Alcazar) போன்ற கார்களுக்கு எல்லாம், எம்ஜி ஹெக்டர் ப்ளஸ் கார் மிகச்சிறந்த மாற்று ஆப்ஷனாக கருதப்படுகிறது.

இந்த காரை பயன்படுத்தி வரும் அமன் தேவ்கனின் ஆசாத் (Azaad) திரைப்படம் வெகு சமீபத்தில் வெளியானது. இதுதான் அமன் தேவ்கனின் முதல் திரைப்படம் ஆகும். இந்த திரைப்படத்தில் அமன் தேவ்கனுடன், அவரது மாமா அஜய் தேவ்கனும் நடித்துள்ளார் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

More from DriveSpark

Article Published On: Thursday, January 23, 2025, 16:20 [IST]
English summary
Aaman devgan spotted in mg hector plus suv viral video all details here
மேலும்... #celebrity cars #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+