2 மனைவிகளை விவாகரத்து பண்ணிட்டு 3வது காதலியுடன் காஸ்ட்லியான காரில் டேட்டிங் சென்ற 60 வயது நடிகர்! கார் சூப்பர்
பாலிவுட் நடிகர் அமீர்கான் சமீத்தில் தனது புதிய காதலியை வெளி உலகிற்கு அறிமுகப்படுத்தினார். அவரது தயாரிப்பு நிறுவனத்திலேயே பணியாற்றி வந்த கெளரி என்ற பெண்ணுடன் அவர் டேட்டிங் செய்து வருவதாக அவர்கூறினார். இந்நிலையில் இவர்கள் இருவரும் சமீபத்தில் காஸ்ட்லியான சொகுசு காரில் ஏறிச் செல்லும் வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இந்த கார் குறித்த விபரங்களை முழுமையாக காணலாம் வாருங்கள்.
இந்தி சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக இருப்பவர் அமீர்கான் இவர் ஏற்கனவே 2 முறை திருமணமாகி விவாகரத்தானவர். இவர் சமீபத்தில் ஒரு பெண்ணுடன் தொடர்பில் இருப்பதாக சமூகவலைதளங்களில் தகவல் பரவிய நிலையில் சமீபத்தில் இவர் தனது புதிய காதலியை வெளி உலகிற்கு அறிமுகப்படுத்தினர்.

தனது தயாரிப்பு நிறுவனத்தின் பணியாற்றும் கெளரி என்ற பெண்ணை இவர் தற்போது காதலித்து வருவதாகவும், இருவரும் டேட்டிங்கில் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். கெளரி அமீர் கானுக்கு 25 ஆண்டு கால நண்பராக இருந்தவர். இவர்கள் நீண்ட நாட்களாக தொடர்பில்லாமல் இருந்த நிலையில் மீண்டும் சமீபத்தில் தான் தொடர்பு கொண்டதாகவும். அதன் பின்னர் அமீர் கான் தயாரிப்பு நிறுவனத்திலேயே கெளரி பணியில் சேர்ந்ததாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் வெளி உலகிற்கு இவர்கள் காதலர்கள் என அறிவித்த பிறகு இருவரும் சமீபத்தில் கஸ்ட்லி காரில் ஒன்றாக ஏறிச்சென்ற வீடியோ வைரலாக பரவி வருகிறது. இந்த வீடியோவின்படி வீட்டின் வாசலில் டொயோட்டா நிறுவனத்தின் வில் ஃபயர் கார் நிற்கிறது. அப்பொழுது அமீர்கான் வீட்டின் உள்ளே இருந்து வெளியே வருகிறார்.காரின் கதவுகள் திறந்திருக்கிறது. வீட்டிற்குள் இருந்து யாரையோ வந்து காரில் ஏறும்படி கூறுகிறார்.

அப்பொழுது வீட்டிற்குள் இருந்து அவரது புதிய காதலி வெள்ளை நிற டாப்ஸ் மற்றும் நீல நிற பேன்ட் அணிந்து காருக்குள் ஏறுகிறார். இந்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இவர்கள் ஏறிச்சென்ற கார் பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. இது அதிக காஸ்ட்லியான டொயோட்டா நிறுவனத்தின் வில் ஃபயர் ரக கார் ஆகும்.
டொயோட்டா நிறுவனத்தின் வில் ஃபயர் காரை பொருத்தவரை ரூ1.39 கோடி முதல் ரூ1.50 கோடி என்ற விலையில் விற்பனையாகி வருகிறது. இந்த கார் எச்ஐ மற்றும் விஐபி எக்ஸிக்யூட்டிவ் லாஞ்ச் ஆகிய இரண்டு விதமான வேரியன்டகளில் விற்பனையாகி வருகிறது.இந்த கார் ஒரே நேரத்தில் பெட்ரோல் மற்றும் எலெக்ட்ரிக்கில் இயங்கும் ஹைபிரிட் இன்ஜின் மூலம் இயங்குகிறது.

இந்த காரில் 7 சீட்டர்கள் இருக்கும். இதனால் அதிக நபர்கள் பயணிக்க ஏற்ற கார். அதே நேரத்தில் இந்த கார் 19.28 கி.மீ மைலேஜை தரும் திறன் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த காரின் வடிவமைப்பில் ஆங்காங்கே உள்ள குரோம் ஹைலைட்கள் காரின் வடிவமைப்பை டாப் குவாலிட்டியாக மாற்றுகிறது. காரின் உட் புறமும் அதிக இடவசதியுடன் இருக்கிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: நடிகர் அமீர்கான் இப்படியான காஸ்ட்லியான காரை வைத்திருப்பது ஒன்றும் புதிதல்ல. இந்த காரை அவர் கடந்த 2021ம் ஆண்டு வாங்கியுள்ளார். இந்த கார் தற்போது பலரை ஈர்த்துள்ளது. பிரபலங்கள் மத்தியில் இந்த கார் பிரலபமாகி வருவதால் பலர் இந்த காரை விரும்பி வாங்கி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications









