காபி ஷாப், திறந்தவெளி உணவகங்கள் வசதிகள் கொண்ட ஆடம்பர மிதக்கும் ஹோட்டல்

Written By: Azhagar

இந்தியாவின் தொழில்நகரமாக இருக்கும் மும்மைக்கு மேலும் ஒரு மகுடமாக கப்பலில் ஹோட்டல் ஒன்று அமையவுள்ளது. பாந்தராவின் கடல் இணைப்பு பகுதியில் அமையும் இந்த மிதக்கும் ஹோட்டல் ஆடம்பரமான வசதிகளுடன் பிரம்மாண்டமாக தயாராகவுள்ளது.

பிரம்மாண்ட கப்பலில் மும்பையின் முதல் மிதக்கும் ஹோட்டல்

ஏ.பி செலஸ்டியல் என்ற கப்பலில் அமைக்கப்படும் இந்த மிதக்கும் ஹோட்டலை நிறுவதற்கு கிட்டத்தட்ட மூன்று ஆண்டு காலமாக ஹோட்டல் நிர்வாகம் மஹாராஷ்டிரா அரசுடன் பேச்சு வார்த்தையை மேற்கொண்டது.

பிரம்மாண்ட கப்பலில் மும்பையின் முதல் மிதக்கும் ஹோட்டல்

விரைவில் பாந்தரா பகுதியில் கம்பீரமான ஹோட்டலை தாங்கி எழுந்து நிறகவுள்ள ஏ.பி செலஸ்டியல் கப்பலில் உள்ள வசதிகளை பற்றி பார்க்கலாம்...

  • கப்பலின் மையப்பகுதியில் உயர் ரக டைனிங் ஹால் கொண்ட உணவகம்.
  • பழங்கால போர் கப்பல்களின் வடிவில் வடிவமைக்கப்பட்ட காபி ஷாப்புகள் (24 மணிநேரம் சேவை)
  • கப்பலின் திறந்தவெளியில் இயங்கும் மூன்று அடுக்குகொண்ட ஆடம்பர உணவகங்கள்.
  • கப்பலின் மேல் அடுக்கில் இருந்தாவாறே 360 டிகிரி சுற்றளவில் மும்பை நகரத்தையும், அரபி கடலையையும் நாம் பார்க்கும் வசதி.

இவ்வாறு பல ஆடம்பர உயர்தரமான வசதிகளை கொண்டு ஏ.பி. செலடியஸ் விரைவில் அமையவுள்ளது.

பிரம்மாண்ட கப்பலில் மும்பையின் முதல் மிதக்கும் ஹோட்டல்

பணப்படத்தோர் மட்டுமின்றி அனைத்து தரப்பின மக்களும் ஏ.பி. செலடியஸ் கப்பலுக்கு வரும் வகையில் , முதல்தளத்தில் காபி ஷாப் அமைக்கப்படுகிறது.

ஒரே நேரத்தில் நூறுபேர் உட்காரும் வகையில் வடிவகப்பட்டுள்ள இந்த காபி ஷாப்பில் காபியோடு சேர்ந்து, ஐரோப்பிய, காண்டினெண்டல் உணவுகள், பீட்சா, ஃபிளாட் பெரட்ஸ் ஆகியவை பரிமாறப்படும்.

பிரம்மாண்ட கப்பலில் மும்பையின் முதல் மிதக்கும் ஹோட்டல்

இந்த மிதக்கும் ஹோட்டலில் உள்ள ஆடம்பரமான உணவகங்கள் ரோமெண்டிக் டின்னருக்கான பிரத்யேக இடமாக இருக்கும். அழகான அந்த சூழ்நிலையில் ருசிகரமான உணவுகள், மனதை வருடம் இசை, காக்டெய்ல்கள் ஆகியவற்றோடு கப்பலோடு கப்பலாக நாமும் மிதக்கலாம்.

பிரம்மாண்ட கப்பலில் மும்பையின் முதல் மிதக்கும் ஹோட்டல்

ஏ.பி செலஸ்டியல் கப்பபில் காபி ஷாப், ஆடம்பர உணவுகளை தொடர்ந்து ரூஃப் டாப் பாரும் இடம்பெறுகிறது. ஒருவேளை நேரம் கருதி விருந்தினர்கள் தங்க விரும்பினால் காஃபேவிற்கு அருகிலேயே அவர்கள், அறைகளில் தங்கிக்கொள்ள வசதி செய்துதரப்படும்.

பிரம்மாண்ட கப்பலில் மும்பையின் முதல் மிதக்கும் ஹோட்டல்

கப்பலின் இண்டீரியர்கள் அனைத்தும் நீலம் மற்றும் வெள்ளை ஆகிய நிறங்களை மையமாக வைத்து வடிவமைக்கப்பட்டுள்ளன.

இந்திய கப்பல்துறை இந்த நிறங்களை மையப்படுத்தி உள்ளதால், கப்பலின் அனைத்து அலங்கார வேலைப்பாடுகளும் நீலம், வெள்ளையை கொண்டே செய்யப்பட்டுள்ளன.

பிரம்மாண்ட கப்பலில் மும்பையின் முதல் மிதக்கும் ஹோட்டல்

ஒரே நேரத்தில் 606 பேர்வரை இருக்கக்கூடிய அளவில் வடிவமைக்கப்பட்டுள்ள ஏ.பி செலஸ்டியல் மிதக்கும் கப்பல் இந்த வாரம் முதலே மக்களின் பயன்பாட்டிற்கு வரவுள்ளது.

பிரம்மாண்ட கப்பலில் மும்பையின் முதல் மிதக்கும் ஹோட்டல்

இந்தியரான ஐஸ்வர்யா பென்ந்தா என்பவருக்கு சொந்தமான ஏ.பி செலஸ்டியல் சொகுசு கப்பல் முற்றிலும் அமெரிக்காவின் ஃப்ளோரிடா மாகணத்தில் கட்டமைக்கப்பட்டது.

பிரம்மாண்ட கப்பலில் மும்பையின் முதல் மிதக்கும் ஹோட்டல்

ஆடம்பரத்திற்கான அனைத்து வசதிகளையும் பெற்றுள்ள இந்த கப்பலில் ரூசிக்கு ஏற்றவாறு ஒரு காபி குடிக்க ரூ.6000 ஆகும், அதேபோல ஒரு மத்திய சாப்பாட்டின் விலை கிட்டத்தட்ட ரூ.3000 ஆகும்.

வாசகர்கள் படித்துவரும் மேலும் சில சுவாரஸ்யமான செய்திகள்...

வாசகர்கள் படித்துவரும் மேலும் சில சுவாரஸ்யமான செய்திகள்...
  • ஆடம்பரம் - அனுபவம் - அதிரடி ; வருகிறது புதிய பி.எம்.டபுள்யூ
வாசகர்கள் படித்துவரும் மேலும் சில சுவாரஸ்யமான செய்திகள்...
  • சீற்றத்துடன் சீறிப் பாய்ந்த ரோல்ஸ்-ராய்ஸ் கோஸ்ட்
வாசகர்கள் படித்துவரும் மேலும் சில சுவாரஸ்யமான செய்திகள்...
  • செயற்கை நுண்ணறிவு திறனுடன் இயங்கும் ஹெலிகாப்டர்
வாசகர்கள் படித்துவரும் மேலும் சில சுவாரஸ்யமான செய்திகள்...
  • பேட்டரியில் இயங்கும் ஐ-பேஸ் காரை அறிமுகம் செய்த ஜாகுவார்

2017 ஆடி A3 காரின் புகைப்படங்கள்

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
A floating hotel or a ‘floatel’ has been added as the crowning jewel of Mumbai’s vibrant and dynamic dining scene, aboard a yacht that is anchored to the Bandra end of the sea link and will soon be open to the public.

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark

We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Drivespark sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Drivespark website. However, you can change your cookie settings at any time. Learn more