இஸ்ரோ இல்லாமல் பள்ளி மாணவர்களே விண்ணில் ஏவிய ராக்கெட் ! 150 சாட்டிலைட்களுடன் சீறிப் பாய்ந்தது!

இந்தியாவில் பள்ளி மாணவர்கள் சேர்ந்து 150 சாட்டிலைட்களுடன் ஒரு சிறிய ராக்கெட் ஒன்றை நேற்று செங்கல்பட்டிலிருந்து விண்ணில் ஏவி சாதனை படைத்துள்ளனர். பள்ளி மாணவர்கள் மட்டுமே செய்துள்ள இந்த சாதனை குறித்த விரிவான விபரங்களைக் காணலாம் வாருங்கள்.

இந்தியா விண்வெளி ஆராய்ச்சியில் மிகப்பெரிய வளர்ச்சியைப் பெற்றுள்ளது. இந்தியாவின் இந்த வளர்ச்சிக்கு மிக முக்கியமான காரணம் மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல் காலம் தான் அவர் தான் இந்தியாவின் விண்வெளி ஆராய்ச்சிக்கு மிக முக்கியமான பங்கை வகித்தவர். இன்று அவர் மறைந்த பின்பு அவரது கனவாக மாணவர்களுக்குப் பல அறிவியல் போட்டிகள் மற்றும் மாணவர்கள் மத்தியில் அறிவியல் ஆர்வத்தை வளர்க்கும் முயற்சியில் பலர் இறங்கியுள்ளனர்.

இஸ்ரோ இல்லாமல் பள்ளி மாணவர்களே விண்ணில் ஏவிய ராக்கெட் ! 150 சாட்டிலைட்களுடன் சீறிப் பாய்ந்தது!

இந்நிலையில் டாக்டர் ஏபிஜே அப்துல்கலாம் சர்வதேச ஃபவுண்டேஷன் மற்றும் ஸ்பேஸ் சோன் இந்தியா ஆகிய அமைப்புகள் சேர்ந்து இந்தியாவில் உள்ள பள்ளி மாணவ மாணவிகள் சேர்ந்து ராக்கெட் விடும் புராஜெக்ட்டை துவங்கியது. இதற்கு ஏபிஜே அப்துல்கலாம் சேட்டிலைட் லாஞ்ச் வெஹிகில் மிஷன் 2023 எனப் பெயரிட்டனர்.இந்த புராஜெட்டிற்கு மார்டின் ஃபவுண்டேஷன் என்ற அமைப்பு நிதி உதவி வழங்கியது.

இந்த புராஜெக்டிற்கு இந்தியா முழுவதும் பள்ளிகளில் பயிலும் 6 முதல் 12ம் வகுப்பு வரையில் படிக்கும் 5000 மாணவ மாணவிகளைத் தேர்வு செய்து அவர்களே இந்த புரோஜெக்டை செய்ய ஏற்பாடு நடத்தப்பட்டது. இந்த புராஜெக்ட்டில் ஒரு சிறிய ராக்கெட் ஒன்றைத் தயார் செய்து அதில் மாணர்வகளே செய்த 150 பிக்கோ சாட்டிலைட்களை விண்ணில் ஏவ திட்டமிட்டனர். பிக்கோ சாட்டிலைட் என்பது ஒரு கிலோவிற்கும் குறைவான சிறிய ரக சாட்டிலைட் ஆகும்.

இஸ்ரோ இல்லாமல் பள்ளி மாணவர்களே விண்ணில் ஏவிய ராக்கெட் ! 150 சாட்டிலைட்களுடன் சீறிப் பாய்ந்தது!

இந்த சாட்டிலைட்களை சிறிய ராக்கெட்டில் வைத்து விண்ணில் ஏவும் முயற்சிக்காக இது திட்டமிடப்பட்டது. இதன் மூலம் தேர்வு செய்யப்பட்ட மாணவர்களுக்கு அறிவியல், தொழிற்நுட்பம், இன்ஜினியரிங், மற்றும் கணிதம் ஆகியவற்றின் மீது ஆர்வமும் திறனும், அனுபவமும் கிடைக்கும் என்பதால் இதை திட்டமிட்டனர். இந்நிலையில் இந்த திட்டத்தின் பலனாக விண்ணில் சிறிய ராக்கெட்டை ஏவும் நிகழ்ச்சியும் வெற்றி கரமாக நடந்து முடிந்தது.

செங்கல்பட்டை அடுத்த பட்டிபோலம் என்கிற பகுதியில் வைத்து விண்ணில் ராக்கெட் ஏவும் முயற்சி நேற்று (19ம்தேதி) வெற்றி கரமாக நடந்தது. டாக்டர் ஏபிஜே அப்துல்கலாம் சாட்டிலைட் வெஹிகில் மிஷன் 2023 வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. இது இஸ்ரோ அனுப்பும் பெரிய ராக்கெட் போல இல்லாமல் சிறிய ரக ராக்கெட்டாக உருவாக்கப்பட்டு விண்ணில் ஏவப்பட்டுள்ளது.

இஸ்ரோ இல்லாமல் பள்ளி மாணவர்களே விண்ணில் ஏவிய ராக்கெட் ! 150 சாட்டிலைட்களுடன் சீறிப் பாய்ந்தது!

இந்த புராஜெக்டில் பணியாற்றிய 5 ஆயிரம் மாணவர்களில் 2 ஆயிரம் மாணவர்கள் அரசுப் பள்ளி மாணவர்களாக இருக்கின்றனர். சுமார் 100 அரசுப் பள்ளிகளைச் சேர்ந்த இந்த 2 ஆயிரம் மாணவர்களுக்கு இந்த ராக்கெட் புராஜெக்டில் இடம் பிடித்த வாய்ப்பு கிடைத்துள்ளது. இந்த புராஜெக்டில் ஈடுபட்ட மாணவர்கள் இதற்காக ஆன்லைன் மூலம் கற்பிக்கப்பட்டு இந்த புராஜெக்ட்டற்கு தயாரானார்கள். இது குறித்த உங்கள் கருத்துக்களை கமெண்டில் சொல்லுங்கள்.

More from DriveSpark

Article Published On: Monday, February 20, 2023, 12:40 [IST]
English summary
Abdul Kalam Satellite Mission 2023 Vehicle Launched from Tamilnadu
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X