சேல்ஸ்மேன்லாம் குடுத்து வெச்சவங்க! கார் வாங்க ஷோரூமுக்கு வந்தது அவங்களா! எல்லார் பார்வையும் அவங்க மேலதான்!

மலையாளம் (Malayalam) மற்றும் தெலுங்கு (Telugu) மொழிகளில் மிகவும் பிரபலமான பாடகிகளில் ஒருவராக இருப்பவர் அபயா ஹிரன்மாயி (Abhaya Hiranmayi). இவர் தற்போது புத்தம் புதிய கார் ஒன்றை வாங்கியுள்ளார். அது ஃபோக்ஸ்வேகன் டைகுன் (Volkswagen Taigun) ஆகும். இது எஸ்யூவி (SUV) ரகத்தை சேர்ந்தது.

புத்தம் புதிய ஃபோக்ஸ்வேகன் டைகுன் காரை, அபயா ஹிரன்மாயி டெலிவரி எடுக்கும் வைரல் வீடியோ (Viral Video), சமூக வலை தளங்களில் தற்போது வேகமாக பரவி வருகிறது. இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் ஃபோக்ஸ்வேகன் டைகுன் காரின் ஆரம்ப விலை (Price) 11.62 லட்ச ரூபாயாக உள்ளது.

Abhaya Hiranmayi In Volkswagen Showroom

அதே நேரத்தில் இந்த காரின் டாப் வேரியண்ட்டின் விலை 19.46 லட்ச ரூபாயாக இருக்கிறது. இவை எக்ஸ் ஷோரூம் விலையாகும். ஹூண்டாய் க்ரெட்டா (Hyundai Creta), கியா செல்டோஸ் (Kia Seltos) உள்ளிட்ட எஸ்யூவி கார்களுடன் ஃபோக்ஸ்வேகன் டைகுன் கார் போட்டியிட்டு வருகிறது.

இவை தவிர, டொயோட்டா அர்பன் க்ரூஸர் ஹைரைடர் (Toyota Urban Cruiser Hyryder) மற்றும் மாருதி சுஸுகி க்ராண்ட் விட்டாரா (Maruti Suzuki Grand Vitara) ஆகிய கார்களுக்கும், ஃபோக்ஸ்வேகன் டைகுன் விற்பனையில் சவால் அளித்து வருகிறது. அத்துடன் ஸ்கோடா குஷாக் (Skoda Kushaq) காரும் கூட, ஃபோக்ஸ்வேகன் டைகுன் காருக்கு போட்டி மாடல்தான்!

Abhaya Hiranmayi Buys Volkswagen Taigun

செயல்திறனை பொறுத்தவரையில் ஃபோக்ஸ்வேகன் டைகுன் காரில் மொத்தம் 2 இன்ஜின் ஆப்ஷன்கள் வழங்கப்படுகின்றன. அவை 1.0 லிட்டர் 3 சிலிண்டர் டிஎஸ்ஐ பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் 4 சிலிண்டர் டிஎஸ்ஐ பெட்ரோல் இன்ஜின்கள் ஆகும். டிரான்ஸ்மிஷனை பொறுத்தவரையில் மொத்தம் 3 கியர் பாக்ஸ் ஆப்ஷன்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

அவை 6 ஸ்பீடு மேனுவல், 6 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் மற்றும் 7 ஸ்பீடு டிஎஸ்ஜி ஆகும். இதுதவிர ஃபோக்ஸ்வேகன் டைகுன் காரில் ஏராளமான அதிநவீன வசதிகளும் (Features) கொடுக்கப்பட்டுள்ளன. வசதிகளுக்கு பஞ்சமில்லை என்பதுடன், ஃபோக்ஸ்வேகன் டைகுன் காரில், பாதுகாப்பிற்கும் சற்றும் பஞ்சமில்லை.

ஆம், குளோபல் என்சிஏபி (Global NCAP) அமைப்பின் மோதல் சோதனைகளில், ஃபோக்ஸ்வேகன் டைகுன் கார், முழுமையாக 5 ஸ்டார் பாதுகாப்பு ரேட்டிங்கை பெற்றுள்ளது. குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் என 2 பிரிவிலும், ஃபோக்ஸ்வேகன் டைகுன் முழுமையாக 5 ஸ்டார் பாதுகாப்பு ரேட்டிங்கை பெற்றுள்ளது என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும்.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: ஃபோக்ஸ்வேகன் டைகுன் கார், பாடகி அபயா ஹிரன்மாயிக்கு சௌகரியமான மற்றும் பாதுகாப்பான பயணத்தை வழங்கும் என்பதில் துளியும் சந்தேகம் இல்லை. இந்த 2 காரணங்களுடன், செயல்திறன் மிக்க இன்ஜின் ஆப்ஷன்களும் வழங்கப்படுவதால்தான், ஃபோக்ஸ்வேகன் டைகுன் கார் வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக இருந்து வருகிறது.

More from DriveSpark

Article Published On: Tuesday, December 12, 2023, 14:12 [IST]
English summary
Abhaya hiranmayi buys volkswagen taigun viral video all details
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+