சாதாரண மாருதி வண்டியை வாங்கனது இவ்ளோ பெரிய ஆளா! காரை பாக்கறதா இல்ல அவங்கள பாக்கறதானே தெரியல!

திரையுலகை சேர்ந்த பிரபலங்கள் பலரும் மிகவும் விலை உயர்ந்த கார்களை வாங்குவதைதான் வழக்கமாக வைத்துள்ளனர். குறிப்பாக ஆடி (Audi), பிஎம்டபிள்யூ (BMW) மற்றும் மெர்சிடிஸ் பென்ஸ் (Mercedes Benz) போன்ற நிறுவனங்களின் கார்கள்தான் பலரின் தேர்வாக உள்ளன. திரையுலகினரை பொறுத்தவரையில், பெரும்பாலும் மாருதி சுஸுகி (Maruti Suzuki) நிறுவனத்தின் கார்களை யாரும் வாங்குவதில்லை. ஆனால் இதற்கு விதிவிலக்காக திரையுலகை சேர்ந்த ஒருவர் தற்போது மாருதி சுஸுகி நிறுவனத்தின் காரை வாங்கியுள்ளார். அவர் அபிராமி சுரேஷ் (Abhirami Suresh) ஆவார்.

நடிகை, பாடகி, இசையமைப்பாளர் என இவருக்கு பல்வேறு முகங்கள் உள்ளன. கேரளாவை சேர்ந்த இவர், மலையாள திரைப்படங்கள் மட்டுமின்றி, ஒரு சில தமிழ் திரைப்படங்களிலும் நடித்துள்ளார். இவர் தற்போது வாங்கியிருப்பது மாருதி சுஸுகி ஜிம்னி (Maruti Suzuki Jimny). இது எஸ்யூவி (SUV) ரகத்தை சேர்ந்த கார் ஆகும்.

Abhirami Suresh Buys Maruti Suzuki Jimny

இந்திய சந்தையில் மஹிந்திரா தார் (Mahindra Thar) உள்ளிட்ட கார்களுடன், மாருதி சுஸுகி ஜிம்னி போட்டியிட்டு வருகிறது. தற்போதைய நிலையில் மாருதி சுஸுகி ஜிம்னி காரின் ஆரம்ப விலை 12.74 லட்ச ரூபாயாக இருக்கிறது. அதே நேரத்தில் இதன் டாப் வேரியண்ட்டின் விலை 14.79 லட்ச ரூபாயாக உள்ளது.

இவை எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-showroom Price) ஆகும். மாருதி சுஸுகி நிறுவனத்தின் தயாரிப்புகளில் இது பிரீமியமானது என்பதால், நெக்ஸா (NEXA) ஷோரூம்கள் மூலமாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 9 இன்ச் டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் உள்ளிட்ட வசதிகள் (Features) எல்லாம் இந்த காரில் வழங்கப்படுகின்றன.

Maruti Suzuki Jimny

அத்துடன் வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்பிளே, ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கண்ட்ரோல் மற்றும் க்ரூஸ் கண்ட்ரோல் உள்ளிட்ட வசதிகளும், மாருதி சுஸுகி ஜிம்னி காரில் கொடுக்கப்படுகின்றன. பாதுகாப்பை (Safety) பொறுத்தவரையில், இந்த காரின் அனைத்து வேரியண்ட்களிலும் ஸ்டாண்டர்டாக 6 ஏர்பேக்குகள் வழங்கப்படுகின்றன.

மேலும் எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி ப்ரோக்ராம், ஹில் ஹோல்டு அஸிஸ்ட் மற்றும் ரியர் வியூ கேமரா போன்ற வசதிகளையும் மாருதி சுஸுகி ஜிம்னி பெற்றுள்ளது. செயல்திறனை பொறுத்தவரையில், 1.5 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் (Petrol Engine) ஆப்ஷன் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் உடன் 2 கியர் பாக்ஸ் ஆப்ஷன்கள் வழங்கப்படுகின்றன.

அவை 5 ஸ்பீடு மேனுவல் மற்றும் 4 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் ஆகியவை ஆகும். இந்த இன்ஜினின் பவர் அவுட்புட் 105 பிஎஸ் மற்றும் 134 என்எம் டார்க்-ஆக உள்ளது. நாங்கள் ஏற்கனவே குறிப்பிட்ட மஹிந்திரா தார் உடன் மட்டுமல்லாது, விற்பனையில் ஃபோர்ஸ் கூர்கா (Force Gurkha) உடனும், மாருதி சுஸுகி ஜிம்னி போட்டியிட்டு வருகிறது.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: மாருதி சுஸுகி ஜிம்னி காரில், 4 வீல் டிரைவ் சிஸ்டமும் வழங்கப்படுகிறது. இது ஆஃப்-ரோடு சாகச பயணங்களை மேற்கொள்பவர்களுக்கு ஏற்றதாகும். இந்த வசதி கொண்ட மாருதி சுஸுகி ஜிம்னி காரை வாங்கியிருப்பதால், அபிராமி சுரேஷ் ஆஃப்ரோடு சாகச பயணங்களால் ஆர்வம் கொண்டவராக இருக்கலாம் என நாங்கள் கருதுகிறோம்.

More from DriveSpark

Article Published On: Monday, August 19, 2024, 14:38 [IST]
English summary
Abhirami suresh buys maruti suzuki jimny
மேலும்... #off beat #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+