10 கோடி ரூபா காரை டெலிவரி எடுக்க அணிவகுத்து வந்த சொகுசு கார்கள்! உள்ளே இருந்தது அவரா! ஊரே ஸ்தம்பிச்சிருச்சு!
இந்தியா உள்பட உலகின் பல்வேறு நாடுகளிலும் மிகவும் பிரபலமாக உள்ள கார்களில் ஒன்று லம்போர்கினி ரெவல்டோ (Lamborghini Revuelto). இந்த காரின் எக்ஸ்-ஷோரூம் விலையே (Ex-Showroom Price) 9 கோடி ரூபாய் ஆகும். ஆன்-ரோடு விலை (On-Road Price) 10 கோடி ரூபாய்க்கும் அதிகமாக வரும்.
இந்த விலை உயர்ந்த காரில், 6.5 லிட்டர் நேச்சுரலி அஸ்பிரேட்டட் வி12 இன்ஜின் வழங்கப்பட்டுள்ளது. மேலும் 3 எலெக்ட்ரிக் மோட்டார்கள் மற்றும் 3.8 kWh லித்தியம் அயான் பேட்டரி தொகுப்பும் கொடுக்கப்பட்டுள்ளது. இதன் ஒருங்கிணைந்த பவர் அவுட்புட் 1,015 பிஎஸ் பவர் மற்றும் 807 என்எம் டார்க் ஆகும். இந்த இன்ஜின் உடன், 8 ஸ்பீடு ட்யூயல் க்ளட்ச் ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது.

லம்போர்கினி ரெவல்டோ சூப்பர் கார், பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 100 கிலோ மீட்டர்கள் என்ற வேகத்தை, வெறும் 2.5 வினாடிகளில் எட்டி விடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் இதன் டாப் ஸ்பீடு மணிக்கு 350 கிலோ மீட்டர்களாக உள்ளது. இந்த வேகத்தில் பயணம் செய்ய முடிந்தால், சென்னையில் இருந்து வெறும் 1 மணி நேரத்தில் பெங்களூர் சென்று விடலாம்!
இவ்வளவு விலை உயர்ந்த மற்றும் சக்தி வாய்ந்த காரை, பிரபல தொழில் அதிபர் ஒருவர் தற்போது வாங்கியுள்ளார். அவர் 35 வயதேயான அபிஷேக் அகர்வால் (Abhishek Agarwal) ஆவார். இவர் பர்ப்பிள் ஸ்டைல் லேப்ஸ் (Purple Style Labs) நிறுவனத்தின் நிறுவனர் (Founder) ஆவார். பாம்பே ஐஐடி-யில் (IIT Bombay) படித்தவரான அபிஷேக் அகர்வால், எம்.டெக் ஏரோநாட்டிகல் இன்ஜினியரிங் முடித்த பின்னர், பர்ப்பிள் ஸ்டைல் லேப்ஸ் நிறுவனத்தை தொடங்கினார்.

இவரிடம் ஏற்கனவே ஏராளமான விலை உயர்ந்த கார்கள் உள்ளன. இந்த வரிசையில் தற்போது லம்போர்கினி ரெவல்டோ சூப்பர் காரையும், அபிஷேக் அகர்வால் வாங்கியுள்ளார். இந்த காரை டெலிவரி எடுக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக ஏராளமான விலை உயர்ந்த கார்கள், லம்போர்கினி ஷோரூமிற்கு அணிவகுத்து வந்துள்ளன.
மும்பையில் (Mumbai) எடுக்கப்பட்ட இந்த வைரல் வீடியோ (Viral Video), தற்போது யூடியூப் (YouTube) தளத்தில் பதிவிடப்பட்டுள்ளது. மஸராட்டி லாவென்டே (Maserati Levante), போர்ஷே பனமெரா ஜிடிஎஸ் (Porsche Panamera GTS), ஃபெராரி எஸ்எஃப்90 (Ferrari SF90) மற்றும் லேண்ட் ரோவர் டிஃபெண்டர் 110 (Land Rover Defender 110) உள்ளிட்ட கார்களை எல்லாம், இந்த வைரல் வீடியோவில் நம்மால் பார்க்க முடிகிறது.
இவை அனைத்துமே அபிஷேக் அகர்வாலின் கார்கள் என தகவல்கள் தெரிவிக்கின்றன. அத்துடன் மிகவும் விலை உயர்ந்த மெர்சிடிஸ் மேபெக் எஸ்680 (Mercedes Maybach S680) கார் ஒன்றையும் இந்த வீடியோவில் காண முடிகிறது. இந்த காரில்தான், அபிஷேக் அகர்வால் வந்ததாக கூறப்படுகிறது.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: அபிஷேக் அகர்வால் வாங்கியுள்ள ரெவல்டோதான், லம்போர்கினி நிறுவனத்தின் முதல் ப்ளக்-இன் ஹைப்ரிட் சூப்பர் கார் (Plug-in Hybrid Super Car) ஆகும். எனவே லம்போர்கினி நிறுவனத்திற்கு இந்த கார் ஸ்பெஷலானது. இனி அபிஷேக் அகர்வாலுக்கும் இந்த கார் ஸ்பெஷலானதாக இருக்கும் என நாம் நம்பலாம்.
அபிஷேக் அகர்வால், லம்போர்கினி ரெவல்டோ சூப்பர் காரை, கருப்பு நிறத்தில் வாங்கியுள்ளார். கருப்பு நிறம், அவருக்கு மிகவும் பிடித்தமான ஒன்றாக கருதப்படுகிறது. இதன் காரணமாகவே அவர் தனது விலை உயர்ந்த சூப்பர் காரை கருப்பு நிறத்தில் தேர்வு செய்துள்ளார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.


Click it and Unblock the Notifications








