அடுத்தடுத்து வந்து நின்ன சொகுசு கார்கள்... பெரிய ஆட்களின் குழந்தைங்க எல்லாம் இந்த ஸ்கூல்லதான் படிக்கறாங்களா!

இந்தியாவை சேர்ந்த பெரும் கோடீஸ்வரர்களில் ஒருவரான முகேஷ் அம்பானி (Mukesh Ambani), கால் பதிக்காத தொழில்களே இல்லை என்று கூறலாம். அந்த அளவிற்கு பல்வேறு தொழில்களை அவர் வெற்றிகரமாக மேற்கொண்டு வருகிறார். முகேஷ் அம்பானி கால் பதித்த தொழில்களில், கல்வி துறையும் ஒன்றாகும். மும்பை (Mumbai) நகரில் உள்ள திருபாய் அம்பானி சர்வதேச பள்ளியை (Dhirubhai Ambani International School) முகேஷ் அம்பானி குடும்பத்தினர்தான் நடத்தி கொண்டுள்ளனர். முகேஷ் அம்பானியின் மனைவி நீதா அம்பானிதான் (Nita Ambani), இந்த பள்ளியை தொடங்கியவர் ஆவார்.

உலக புகழ்பெற்ற திருபாய் அம்பானி சர்வதேச பள்ளியின் ஆண்டு விழா (Annual Day), நேற்று இரவு (டிசம்பர் 19) நடைபெற்றது. திருபாய் அம்பானி சர்வதேச பள்ளியில்தான், பாலிவுட் நடிகர், நடிகைகள் பலரின் குழந்தைகளும் படித்து வருகின்றனர். எனவே நேற்று நடைபெற்ற ஆண்டு விழாவில், பாலிவுட் பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டனர்.

Shah Rukh Khan - Aishwarya Rai

இது தொடர்பான வைரல் வீடியோ (Viral Video) ஒன்று யூடியூப் (YouTube) தளத்தில் தற்போது பதிவிடப்பட்டுள்ளது. இந்த வைரல் வீடியோவில், பாலிவுட் பிரபலங்கள் பலரும், மிகவும் விலை உயர்ந்த சொகுசு கார்களில், திருபாய் அம்பானி சர்வதேச பள்ளியின் ஆண்டு விழாவிற்கு வந்ததை நம்மால் காண முடிகிறது.

இந்த வைரல் வீடியோவின்படி, பாலிவுட் நடிகர் ஷாருக்கான் (Shah Rukh Khan) தனது குடும்பத்தினருடன் ரோல்ஸ் ராய்ஸ் கல்லினன் பிளாக் பேட்ஜ் (Rolls Royce Cullinan Black Badge) காரில் வந்துள்ளார். இந்த காரின் விலை (Price) 10 கோடி ரூபாய் ஆகும்.

Shahid Kapoor

அதே நேரத்தில் ஷாருக்கானின் மேனேஜராக (Manager) உள்ள பூஜா டட்லானி (Pooja Dadlani), 95.99 லட்ச ரூபாய் மதிப்புடைய மெர்சிடிஸ் பென்ஸ் இ-க்ளாஸ் (Mercedes Benz E-Class) காரில் வந்துள்ளார். அதே சமயம் பாலிவுட் நடிகரான ஷாகித் கபூர் (Shahid Kapoor), 3.76 கோடி ரூபாய் மதிப்புடைய மெர்சிடிஸ் மேபெக் ஜிஎல்எஸ் 600 (Mercedes Maybach GLS 600) காரில் வருகை புரிந்துள்ளார்.

மறுபக்கம் திரைப்பட இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் என பல முகங்களை கொண்டுள்ள கரண் ஜோஹர் (Karan Johar), 3.05 கோடி ரூபாய் மதிப்புள்ள மெர்சிடிஸ் மேபெக் எஸ் 580 (Mercedes Maybach S 580) காரில் வந்துள்ளார். அதே நேரத்தில் பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் (Amitabh Bachchan) ரேஞ்ச் ரோவர் எஸ்வி ஆட்டோபயோகிராபி (Range Rover SV Autobiography) காரில் வந்துள்ளார்.

இதன் விலை 5.76 கோடி ரூபாய் ஆகும். அமிதாப் பச்சனின் மகனும், பாலிவுட் நடிகருமான அபிஷேக் பச்சன் (Abhishek Bachchan), டொயோட்டா வெல்ஃபையர் (Toyota Vellfire) சொகுசு காரில் வந்துள்ளார். இங்கே குறிப்பிட வேண்டிய விஷயம் என்னவென்றால், இந்த நிகழ்ச்சியில் அபிஷேக் பச்சனுடன், அவரது மனைவி ஐஸ்வர்யா ராய் பச்சனும் (Aishwarya Rai Bachchan) கலந்து கொண்டார்.

இவர்கள் இருவரும் விவாகரத்து பெறவுள்ளதாக தகவல்கள் வெளியாகி வந்த நிலையில், பொது நிகழ்ச்சியில் ஒன்றில் ஒன்றாக தோன்றியிருப்பது இங்கே குறிப்பிடப்பட வேண்டிய விஷயம் ஆகும். அதே நேரத்தில் மிகவும் பிரபலமான தென் இந்திய நடிகரான பிருத்விராஜ் (Prithviraj), 4.80 கோடி ரூபாய் மதிப்புள்ள லம்போர்கினி உருஸ் (Lamborghini Urus) காரில் வந்து நிகழ்ச்சியில் பங்கேற்றார்.

மறுபக்கம் பாலிவுட் நடிகரான சயீஃப் அலி கான் 1.24 கோடி ரூபாய் மதிப்புள்ள மெர்சிடிஸ் ஜிஎல்இ 450 (Mercedes GLE 450) காரில் வந்து நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். சயீஃப் அலி கானுடன், அவரது மனைவி கரீனா கபூரும் (Kareena Kapoor) வந்திருந்தார் என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும்.

அதே நேரத்தில் நடிகை ஜெனிலியா (Genelia) மற்றும் அவரது கணவர் ரித்தேஷ் தேஷ்முக் (Riteish Deshmukh) ஆகிய இருவரும், தனி தனி கார்களில் வந்துள்ளனர். இதில் ஜெனிலியா வந்தது 1.46 கோடி ரூபாய் மதிப்புடைய பிஎம்டபிள்யூ ஐஎக்ஸ் (BMW iX) ஆகும். மறுபக்கம் ரித்தேஷ் தேஷ்முக் 56.77 லட்ச ரூபாய் மதிப்புடைய டொயோட்டா ஃபார்ச்சூனர் லெஜெண்டர் (Toyota Fortuner Legender) காரில் வந்தார்.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: ஷாருக்கான், அமிதாப் பச்சன், அபிஷேன் பச்சன், ஐஸ்வர்யா ராய் மற்றும் சயீஃப் அலி கான் உள்ளிட்ட பாலிவுட் திரையுலக பிரபலங்களின் வருகையால், திருபாய் அம்பானி சர்வதேச பள்ளியின் ஆண்டு விழா, நட்சத்திர கலை விழாவாக மாறியது என்று சொல்லலாம்.

More from DriveSpark

Article Published On: Friday, December 20, 2024, 13:54 [IST]
English summary
Abhishek bachchan aishwarya rai shah rukh khan arrive in luxury cars at ambani school video
மேலும்... #celebrity cars #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+