புதிய ஆடி ஏ8எல் சொகுசு கார் வாங்கிய நடிகர் அபிஷேக் பச்சன்
தனது மகள் ஆராத்யாவுக்காக புக்கிங் செய்த ஆடி ஏ8 எல் காரை சமீபத்தில் டெலிவிரி பெற்றுள்ளார் நடிகர் அபிஷேக் பச்சன். புதிய காருடன் அபிஷேக் சென்ற புகைப்படங்களை ஆடி நிறுவனம் தற்போது பேஸ்புக்கில் வெளியிட்டுள்ளது.
பாலிவுட் நடிகர் அபிஷேக் பச்சன், நடிகை ஐஸ்வர்யா ராய் தம்பதிக்கு கடந்த சில மாதங்களுக்கு முன் பெண்குழந்தை பிறந்தது. தங்களது குழந்தைக்கு ஆராத்யா என்று பெயர் சூட்டினர். பெயர் சூட்டிய கையோடு குழந்தைக்காக புதிய ஆடியின் ஆடம்பர கார் ஒன்றை அபிஷேக் பச்சன் புக்கிங் செய்தார்.

இந்த நிலையில், புக்கிங் செய்யப்பட்ட அந்த ஆடி ஏ8எல் காரை சமீபத்தில் டெலிவிரி பெற்றுக்கொண்டுள்ளார் அபிஷேக் பச்சன்.அபிஷேக் பச்சன் தனது ஆடி ஏ8எல் காருடன் வந்த புகைப்படங்களை ஆடி இந்தியா நிறுவனம் ஃபேஸ்புக் ஃபேன் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.
ஆடி ஏ8எல் கார் பல எஞ்சின் மாடல்களில் கிடைக்கிறது. இதில், 4.2 லிட்டர் வி8 எஞ்சின் அதிகபட்சமாக 372 பிஎச்பி பவரை வெளிப்படுத்தும் அசுர ஆற்றல் வாய்ந்தது. இதுதவிர, ஆடி சொகுசு கப்பல் என்று கூறும் அளவுக்கு ஏராளமான சொகுசு வசதிகளை இந்த கார் பெற்றிருக்கிறது.


Click it and Unblock the Notifications








