முன்னாள் உலக அழகியின் கணவர் வாங்கியிருக்கும் அல்ட்ரா-லக்சரி கார்! லாரி கூட இவ்வளவு நீளமா இருக்காது!!
அபிஷேக் பச்சன் (Abhishek Bachchan), இந்தியாவின் பிரபலமான நடிகர்களுள் ஒருவராக இருப்பவர். பாலிவுட்டின் சூப்பர் ஸ்டார் அமிதாப்பச்சனின் மகன் என்பதினாலேயே நாடு முழுவதும் கவனத்தை பெற்ற அபிஷேக் பச்சன், முன்னாள் உலக அழகி ஐஸ்வர்யா ராயை திருமணம் செய்துக் கொண்ட பிறகு தென்னிந்தியாவிலும் மக்களின் கவனத்தை பெற்றார். இந்த நிலையில், திரைப்படங்களில் நடிப்பதற்கு மத்தியில் நடிகர் அபிஷேக் பச்சன் புதியதாக லேண்ட் ரோவர் (Land Rover) காரை வாங்கியுள்ளார். புதிய காரில் அபிஷேக் பச்சன் வந்திறங்கும் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி உள்ளது.
இந்தியாவில் லேண்ட் ரோவர் கார்களுக்கு எப்போதுமே ஓர் டிமாண்ட் உள்ளது. அதாவது, அந்த அளவிற்கு லேண்ட் ரோவர் கார்கள் இந்தியர்களின் மனதில் நீங்கா இடத்தை பிடித்துள்ளன. இதற்கு முக்கிய காரணம், லேண்ட் ரோவர் கார்களின் கம்பீரமான தோற்றம் மற்றும் லக்சரியான கேபின் ஆகும்.

இதன் காரணமாகவே உலகளவில் பலர் லேண்ட் ரோவர் கார்களை போட்டி போட்டுக் கொண்டு வாங்கின்றனர். இந்தியாவில் லேண்ட் ரோவர் கார்கள் ரேஞ்ச் ரோவர், டிஃபெண்டர் என 2 விதமான கார்களாக விற்பனை செய்யப்படுகின்றன. இதில், பிரபல பாலிவுட் நடிகர் அபிஷேக் பச்சன் வாங்கியிருப்பது லேண்ட் ரோவர் டிஃபெண்டர் 130 (Defender 130) காரை ஆகும்.
இந்தியாவில் லேண்ட் ரோவர் டிஃபெண்டர் கார்கள் 90, 110 மற்றும் 130 என 3 விதமான வெர்சன்களில் விற்பனை செய்யப்படுகின்றன. இதில் டிஃபெண்டர் 130 காரை அபிஷேக் பச்சன் வாங்கியுள்ளார். இதுதொடர்பாக இணையத்தில் வெளியிடப்பட்டுள்ள வீடியோவில், கிரே நிறத்திலான லேண்ட் ரோவர் டிஃபெண்டர் காரில் நடிகர் அபிஷேக் பச்சன் விமான நிலையத்திற்கு வரும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன.

அதாவது, இந்த புத்தம் புதிய டிஃபெண்டர் காரை அபிஷேக் பச்சன் ஏற்கனவே வாங்கிவிட்டார். அதனை முதல்முறையாக தற்போதுதான் பொது வெளியில் கொண்டுவந்துள்ளார். வீடியோவில், காரின் முன் இருக்கையில் இருந்து அபிஷேக் பச்சன் வெளியே வருவதை பார்க்க முடிகிறது. ஆனால், இவர் காரை ஓட்டிவரவில்லை. காரில் இருந்து வெளியே வந்த பின்பு கேமராக்கள் முன் கையசைத்துவிட்டு கொஞ்சமும் தாமதிக்காமல் விமான நிலையத்திற்குள் நுழைந்துவிட்டார்.
லேண்ட் ரோவர் டிஃபெண்டர் 130 காரை பற்றி சொல்ல வேண்டுமென்றால், உலகின் மிகவும் பவர்ஃபுல்லான ஆஃப்-ரோடு எஸ்யூவி வாகனங்களுள் இதுவும் ஒன்றாகும். அந்த அளவிற்கு பிரம்மாண்டமான எஸ்யூவி வாகனமாக டிஃபெண்டர் 130, அதிநவீன தொழிற்நுட்பங்களையும், பாதுகாப்பு அம்சங்களையும் கொண்டுள்ளது. இதனால், இந்த டிஃபெண்டர் காரில் பயணிப்பது கிட்டத்தட்ட ரோல்ஸ்-ராய்ஸ் காரில் பயணிப்பது போன்று இருக்கும்.

டிஃபெண்டர் 130 காரினுள் டேஸ்போர்டில் 11.4 இன்ச்சில் இவி புரோ டச் ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் டிஸ்பிளே, டிரைவர் அசிஸ்டன்ஸ் சிஸ்டம், 700 வாட்ஸ் மெரிடியன் சரவுண்ட் சிஸ்டம், லைவ் வீடியோ உடன் க்ளியர்சைட் ரியர் வியூ மிரர், 4-ஸோன் க்ளைமேட் கண்ட்ரோல், கேபின் காற்று சுத்திகரிப்பான், 3டி சரவுண்ட் கேமரா உள்ளிட்டவை வழங்கப்படுகின்றன.
5.0 லிட்டர் வி8 சூப்பர்சார்ஜ்டு பெட்ரோல் என்ஜின் டிஃபெண்டர் 130 காரில் பொருத்தப்படுகிறது. அதிகப்பட்சமாக 500 பிஎஸ் வரையிலான இயக்க ஆற்றலை வெளிப்படுத்தக்கூடிய இந்த என்ஜின் உடன் 8-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இணைக்கப்படுகிறது. 0-இல் இருந்து 100kmph வேகத்தை வெறும் 5.7 வினாடிகளில் எட்டிவிடக்கூடிய இந்த காரின் டாப்-ஸ்பீடு 240kmph ஆகும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்த லேண்ட் ரோவர் டிஃபெண்டர் 130 காரை நடிகர் அபிஷேக் பச்சன் எப்போது வாங்கினார் என்பது தெரியவில்லை. ஆனால், இப்போதுதான் முதல்முறையாக வீட்டில் இருந்து வெளியே கொண்டுவந்துள்ளார். கார் பார்ப்பதற்கு மிகவும் பளபளப்பாக இருப்பதால், சில வாரங்களுக்கு முன்னர்தான் இவர் வாங்கியிருக்க வேண்டும்.


Click it and Unblock the Notifications









