24 வயதில் வாழ்க்கை மொத்தமா மாறிடுச்சு... இப்போதைக்கு இருக்குறது 2 கார் தான் - ஆனால் எல்லாம் மாறும்

அபிஷேக் சர்மா (Abhishek Sharma), இந்த பெயர் நேற்றிரவில் இருந்து இந்தியா முழுவதும் ஒலித்துக் கொண்டிருக்கிறர்து. காரணம், நேற்று (பிப்.2) நடைபெற்ற இங்கிலாந்துக்கு எதிரான 5வது டி20 போட்டியில் வெறும் 37 பந்துகளில் 100 ரன்கள் அடித்து இந்தியா மட்டுமின்றி ஒட்டுமொத்த உலக கிரிக்கெட் ரசிகர்களையும் அபிஷேக் சர்மா திரும்பி பார்க்க வைத்தார். 24 வயது மட்டுமே ஆன அபிஷேக் சர்மாவிடம் ஏற்கனவே 2 கார்கள் உள்ளன என்றால் நம்ப முடிகிறதா? அதில் ஒன்று விலையுயர்ந்த பிஎம்டபிள்யூ (BMW) கார் ஆகும். அவை இரண்டை பற்றி தான் இந்த தொகுப்பில் பார்க்க போகிறோம். வாருங்கள் செய்திக்குள் போகலாம்.

ஐபிஎல் (IPL) மூலமாக இளம் வயதிலேயே சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விளையாடும் வாய்ப்பை பெற்ற இந்திய வீரர்கள் ஏராளம். கடந்த 2024 ஐபிஎல் மூலம் அத்தகைய வாய்ப்பை பெற்ற இளம் இந்திய கிரிக்கெட் வீரர் தான், அபிஷேக் சர்மா ஆவார். 2024 ஐபிஎல் தொடரில் சன்ரைசஸ் ஐதாராபாத் அணிக்கு தொடக்க ஆட்டக்காரராக கலக்கினார்.

cricketer abhishek sharma car collections

இதே சன்ரைசஸ் ஐதாராபாத் அணிக்காக ஆடிய தென்னாப்பிரிக்காவை சேர்ந்த ஹென்ரிச் கிளாசன் மிடில்-ஆர்டரில் பந்து வீச்சாளர்களை நொறுக்கி தள்ளிக் கொண்டிருக்க, தொடர் முழுவதும் அவரது அதிரடி ஆட்டத்திற்கு தொடக்கத்திலேயே அபிஷேக் சர்மா நல்ல அடித்தளம் அமைத்துக் கொடுத்ததை யாரும் அவ்வளவு எளிதில் மறந்திருக்க மாட்டீர்கள் என நினைக்கிறேன்.

இதன் மூலமாக சர்வதேச டி20 போட்டிகளில் இந்திய அணிக்காக விளையாடும் வாய்ப்பை பெற்ற அபிஷேக் சர்மா, சில போட்டிகளில் தடுமாறினாலும் இங்கிலாந்துக்கு எதிரான நேற்றைய போட்டி போன்று சில போட்டிகளில் தனது அதிரடி ஆட்டத்தால் அனைவரையும் கவர்ந்துவிடுகிறார். மும்பை வான்கடே மைதானத்தில் நடைப்பெற்ற நேற்றைய போட்டியில் வெறும் 54 பந்துகளில் 135 ரன்கள் அடித்து இந்திய அணியின் வெற்றிக்கு முக்கிய பங்களித்தார்.

cricketer abhishek sharma car collections

தற்போதைய நிலவரப்படி, கிரிக்கெட் வீரர் அபிஷேக் சர்மாவிடம் இரு கார்கள் உள்ளன. பிஎம்டபிள்யூ 3-சீரிஸ் (3-Series) மற்றும் மஹிந்திரா எக்ஸ்யூவி300 (Mahindra XUV300) என்பன அந்த 2 கார்கள் ஆகும். இதில், பிஎம்டபிள்யூ 3-சீரிஸ் காரின் 320டி (320d) என்கிற டீசல் வேரியண்ட்டை அபிஷேக் சர்மா வைத்துள்ளார்.

இந்தியாவின் முன்னணி லக்சரி கார் உற்பத்தி நிறுவனங்களுள் ஒன்றாக விளங்கும் பிஎம்டபிள்யூவின் கிரான் லிமௌசைன் (Gran Limousine) ரக காராக 3-சீரிஸ் விளங்குகிறது. டீசல் என்ஜின் உடன் இந்த பிஎம்டபிள்யூ கார் ஆனது எம் ஸ்போர்ட் மற்றும் எம் ஸ்போர்ட் புரோ என 2 விதமான வேரியண்ட்களில் விற்பனை செய்யப்படுகிறது.

cricketer abhishek sharma car collections

மஹிந்திரா எக்ஸ்யூவி300 காரை பொறுத்தவரையில், இந்த காரின் விற்பனை கடந்த 2024இல் நிறுத்தப்பட்டுவிட்டது. இதற்கு பதிலாக எக்ஸ்யூவி 3எக்ஸ்.ஓ என்கிற காரை மஹிந்திரா அறிமுகம் செய்தது. விற்பனை நிறுத்தப்படுவதற்கு முன்பு வரையில், எக்ஸ்யூவி300 காரின் ஆரம்ப எக்ஸ்-ஷோரூம் விலை ஆனது ரூ.7.99 லட்சமாக இருந்தது. மேலே கண்ட பிஎம்டபிள்யூ காரின் விலை ரூ.62 லட்சம் என்கிற அளவில் உள்ளது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: பிஎம்டபிள்யூ 3-சீரிஸ் காரின் எந்த வேரியண்ட்டை கிரிக்கெட் வீரர் அபிஷேக் சர்மா வைத்துள்ளார் என்பது தெரியவில்லை. எங்களுக்கு தெரிந்தவரையில், மஹிந்திரா எக்ஸ்யூவி300 காரை தான் அவர் முதலாவதாக வாங்கியிருக்க கூடும். நாளுக்கு நாள் இந்திய கிரிக்கெட் அணியின் தவிர்க்க முடியாத வீரராக மாறி வருவதால், அபிஷேக் சர்மா வரும் காலங்களில் மேலும் பல சொகுசு கார்களை வாங்குவார் என எதிர்பார்க்கிறோம்.

More from DriveSpark

Article Published On: Monday, February 3, 2025, 15:22 [IST]
English summary
Abhishek sharma car collections bmw 320d and mahindra xuv300
மேலும்... #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X