1970, 80களில் சென்னையை கலக்கியவர்! யாரென்று தெரிகிறதா? புதுசா வாங்கிய காரின் விலையை கேட்டால் மயக்கம் வருது
பிஎம்டபிள்யூ (BMW) கார்களுக்கு ரசிகராக இருக்கலாம் தப்பில்லை. ஆனால், தொடர்ச்சியாக 6 முறை பிஎம்டபிள்யூ கார்களை மட்டுமே வாங்குவது நாம் இந்த தொகுப்பில் பார்க்க போகும் நபர் எந்த அளவிற்கு தீவிரமான பிஎம்டபிள்யூ கார் ரசிகராக உள்ளார் என்பதை காட்டுகிறது. இத்தனைக்கும் பிஎம்டபிள்யூ நிறுவனத்தில் கூட இவர் வாங்குவது ஒரேயொரு மாடலை தான். அதாவது, ஒரேயொரு மாடல் காரை தான் தொடர்ச்சியாக 6 முறை பல்வேறு காலங்களில் வாங்கி வந்துள்ளார். யாருங்க அது? எனக்கே அவரை பார்க்கனும் போல இருக்கு என நீங்கள் கேட்பது புரிகிறது.
அபிராமி ராமநாதன் (Abirami Ramanathan), இந்த பெயரை சமீப காலமாக அதிகமாக கேட்க முடிவதில்லை என்றாலும், ஒரு சமயத்தில் தமிழ்நாடு முழுக்க ஒலித்துக் கொண்டிருந்த பெயர். குறிப்பாக, சென்னையில் இவரை தெரியாத ஆட்களே கிடையாது என்கிற அளவிற்கு ஒரு காலத்தில் பிரபலமாக இருந்தவர்.

இந்தியாவின் முதல் ஷாப்பிங் மால் மற்றும் குடும்ப பொழுதுப்போக்கு மையமான அபிராமி மெகா மாலின் ஓனர் அபிராமி ராமநாதன் ஆவார். 77 வயதான இவர் 1970, 80 சமயங்களில் சென்னையில் பெரும் தொழிலதிபராக இருந்தார்; இப்போதும்தான். இருக்கும் பணத்தை வைத்து வரிசையாக திரைப்படங்களை தயாரித்தார், அபிராமி ராமநாதன்.
இவருக்கு ஆரம்பத்தில் இருந்தே கார்கள் என்றால் தனி பிரியம் உண்டு. செல்வந்தராக இருந்துக் கொண்டு கார்களை பிடிக்கவில்லை என்றால்தான் ஆச்சிரியம். குறிப்பாக, பிஎம்டபிள்யூ கார்களை அபிராமி ராமநாதன் வரிசைக்கட்டி வாங்கி தள்ளினார். அதிலிலும் குறிப்பாக, பிஎம்டபிள்யூ 7-சீரிஸ் (7-Series) கார்கள் தான் அபிராமி ராமநாதனின் முதல் டார்க்கெட்டே.

இதுவரையில் 6 பிஎம்டபிள்யூ 7-சீரிஸ் கார்களை வாங்கிவிட்டார் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். 'ஒரு லைஃப் பாய் சோப்பு கரையறதுக்கு உள்ளேயே ஒருத்தன் லைஃப் கரைஞ்சிடுமே' என்கிற விவேக்கின் காமெடி வசனத்தை போல, ஒரு பிஎம்டபிள்யூ கார் அதன் ஆயுட்காலத்தை முடித்துக் கொள்வதற்கே பல வருடங்கள் ஆகும், அப்படியிருக்க இவர் தொடர்ச்சியாக பல்வேறு காலங்களில் 7-சீரிஸ் கார்களை வாங்கி குவித்துள்ளார்.
6 கார்களை வாங்கிய பின்னர், 7வதாக ஒரு பிஎம்டபிள்யூ காரை வாங்க ஷோரூமுக்கு அபிராமி ராமநாதன் சென்றுள்ளார். எப்படியிருந்தாலும் மீண்டும் 7-சீரிஸ் காரை தான் வாங்க போகிறோர் என அனைவரும் நினைத்துக் கொண்டிருந்த நேரத்தில் அனைவரையும் ஆச்சிரியப்படுத்தும் விதமாக ஐ7 (i7) என்கிற எலக்ட்ரிக் காரை வாங்கினார். ஐ7 ஆனது பிஎம்டபிள்யூ 7-சீரிஸ் காரின் எலக்ட்ரிக் வெர்சன் ஆகும்.

இந்த நிலையில், ஐ7 காரை வாங்கியது ஏன் என்பதற்கு அபிராமி ராமநாதன் விளக்கம் கொடுத்துள்ளார். புதிய ஐ7 கார் தனது வாழ்வில் நல்லதை உண்டாக்கும் என நம்பும் இவர், பிஎம்டபிள்யூ கார் என்பதாலேயே நிச்சயமாக இதனால் நல்லது நடக்கும் என கூறியவர், பிஎம்டபிள்யூ டீலர்களின் கஸ்டமர் அணுகுமுறையும், எந்த நேரத்தில் கேட்டாலும் அவர்கள் வழங்கிய உதவிகளும் தான் என்னை தொடர்ந்து பிஎம்டபிள்யூ கஸ்டமராக இருக்க வைப்பதாகவும், இனியும் பிஎம்டபிள்யூ கார்களை தொடர்ந்து வாங்குவேன் என்றும் தெரிவித்துள்ளார்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஒரு குறிப்பிட்ட கார் நிறுவனத்துடன் இத்தனை வருடங்களாக தொடர்ந்து இணைப்பில் இருப்பது உண்மையில் ஆச்சிரியமான விஷயம் ஆகும். இதில் இருந்து, அபிராமி ராமநாதனுக்கு பிஎம்டபிள்யூ நிறுவனம் வழங்கும் சவுகரியமான அனுபவத்தை அறிய முடிகிறது. தொடர்ந்து 7-சீரிஸ் கார்களாக வாங்கிக் கொண்டிருந்தவர், காலத்திற்கு ஏற்ப ஐ7 எலக்ட்ரிக் காரை வாங்கியது நம்மை பரவசப்படுத்துகிறது.


Click it and Unblock the Notifications









