ஏபிஎஸ் இந்தியாவில் ஏன் அவசியம் தெரியுமா? இந்த வீடியோவை பாருங்கள்

இந்திய சாலைகளில் பயணிக்க ஏபிஎஸ் எவ்வளவு அவசியம் என்பதை உணர்த்தும் விதமாக நெடுஞ்சாலையில் அதிக வேகத்தில் பயணித்த இன்னோவா க்ரைட்டா கார் ஓன்று திடீர் என அதிக பிரஷரில் பிரேக் பிடித்தும் அதை சமாளித்து கார்

இந்திய சாலைகளில் பயணிக்க ஏபிஎஸ் எவ்வளவு அவசியம் என்பதை உணர்த்தும் விதமாக நெடுஞ்சாலையில் அதிக வேகத்தில் பயணித்த இன்னோவா க்ரைட்டா கார் ஓன்று திடீர் என அதிக பிரஷரில் பிரேக் பிடித்தும் அதை சமாளித்து கார் ஸ்கிட் ஆகி பெரும் விபத்திற்குள் சிக்காமல் அந்த சூழ்நிலையை அசால்டாக சமாளித்துள்ளது இது குறித்து முழு செய்தியை கீழே படியுங்கள்.

இந்தியாவில் ஏன் ஏபிஎஸ் அவசியம் தெரியுமா?

இந்திய சாலைகளில் வேகமாக பயணிப்பது என்பது சவாலான விஷயம் இந்தியாவில் சமீப காலமாக சிறப்பான சாலைகள் அமைக்கப்பட்டாலும் அதன் பாராமரிப்பு சரியல்லாததால் அதை நம்பி நாம் சற்று அசால்ட்டாக சென்றால் விபத்தில் சிக்க வேண்டியது தான்.

இந்தியாவில் ஏன் ஏபிஎஸ் அவசியம் தெரியுமா?

இந்த வகையில் சமீபத்தில் சமூகவலைதளத்தில் வீடியோ ஒன்று வெளியானது. அந்த வீடியோ மூலம் இந்தியாவில் உள்ள வாகனங்களுக்கு ஏன் ஏபிஎஸ் அவசியம் என்பதை விளக்கும் வகையில் சிறந்த உதாரணத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவில் ஏன் ஏபிஎஸ் அவசியம் தெரியுமா?

இந்த வீடியோ ஒரு இன்னோவா க்ரைட்டா கார் நெடுஞ்சாலையில் செல்லும் போது எடுக்கப்பட்டது. இந்த கார் சுமார் 140-150 கி.மீ. வேகத்தில் சென்றதாக குறிப்பிட்டது. இந்த வீடியோவில் மற்றொரு இன்னோவா க்ரைட்டா காரும் கிட்டத்தட்ட இதே வேகத்தில் இந்த காருக்கு சற்று முன்பாக சென்று கொண்டுள்ளது.

இந்தியாவில் ஏன் ஏபிஎஸ் அவசியம் தெரியுமா?

அப்பொழுது எதிர்பாராத விதமாக ரோட்டின் குறுக்குகே தடுப்பு ஒன்று அமைக்கப்பட்டிருந்தது. இதை கண்ட முதலில் போன இன்னோவா க்ரைட்டா கார் அதிக பிரஷர் உடன் பிரேக்கை அப்ளே செய்தது. உடனடியாக டேஷ் போர்டு கேமரா பொருத்தப்பட்ட காரும் பிரேக் பிடித்தது.

இந்தியாவில் ஏன் ஏபிஎஸ் அவசியம் தெரியுமா?

இந்த வேகத்தில் வரும் போது அதிக பிரஷரில் பிரேக் பிடித்தால் ஏபிஎஸ் இல்லாத கார் டிரைவரின் கண்ட்ரோலை இழந்து ஸ்கிட் ஆகி பெரும் விபத்தை ஏற்படுத்தி இருக்கும். ஆனால் இந்த இன்னோவா க்ரைட்டா காரில் ஏபிஎஸ் இருப்பதால் இந்த சூழ்நிலையை அசால்ட்டாக இரண்டு கார்களும் சமாளித்தனர்.

இந்தியாவில் ஏன் ஏபிஎஸ் அவசியம் தெரியுமா?

பொதுவாக எபிஎஸ் என்பது சாதாரண பிரேக் போல தான் ஆனால் இந்த ஏபிஎஸ் என்ன செய்யும் என்றால் நீங்கள் வேகமாக செல்லும் போது பிரேக் பிடித்தால் உங்கள் வாகனத்தின் வீல் லாக் ஆகி ஸ்கிட் ஆகும்.

இந்தியாவில் ஏன் ஏபிஎஸ் அவசியம் தெரியுமா?

ஆனால் ஏபிஎஸ் வசதி உள்ள வாகனத்தின் இந்த தொழிற்நுட்பம் பிரேக் பிடிக்கும் போது வீல் லாக் ஆகும் சூழ்நிலை ஏற்பட்டால் லேசாக பிரேக்கை விடுவித்து வீல் லாக்கை தவிர்த்து விட்டு மீண்டும் பிரேக்கை அப்ளே செய்யும் இதனால் வீல்லாக் ஆவதை தடுக்கலாம்.

இந்தியாவில் ஏன் ஏபிஎஸ் அவசியம் தெரியுமா?

இந்தவீடியோவில் மாருதி ஸிப்ட் டிசையர் காரையும் நீங்கள் பார்க்க முடியும் இந்த கார் மித வேகத்தில் வந்து பிரேக் பிடித்ததில் ஸ்கிட் ஆகி ரோட்டின் ஓரமாக செல்வதையும் நீங்கள் பார்க்க முடியும். இதன் மூலம் வாகனங்களுக்கு ஏபிஎஸ் எவ்வளவு அவசியம் என்பதை நீங்கள் இந்த உணர முடியும் இந்த வீடியோவை நீங்கள் கீழே பாருங்கள்

இந்தியாவில் நெடுஞ்சாலைகளில் நடக்கும் பெரும் விபத்துக்களுக்கு இந்த வீல் லாக்கிங் தான் காரணம். இதனால் இந்தியா போன்ற நாடுகளுக்கு ஏபிஎஸ் என்பது மிகவும் அவசியமான ஒன்றாக உள்ளது. இதை அரசு அனைத்து வாகனங்களிலும் கட்டாயம் ஆக்க வேண்டும் என்பதை ஆட்டோமொபைல் வல்லுநர்கள் பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #offbeat
English summary
why abs is more important for india? here is the proof. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X