பைக்கில் 120 கிமீ வேகத்தில் சென்றவருக்கு நேர்ந்த கதி! பலவீனமான இதயம் உள்ளவர்கள் வீடியோவை பாக்காதீங்க!
இந்தியாவில் விற்பனை செய்யப்படும் பெரும்பாலான வாகனங்களில் ஏபிஎஸ் பிரேக் வசதி தற்போது ஸ்டாண்டர்டாக வழங்கப்படுகிறது. இந்திய சாலைகளில் வாகனம் ஓட்டும்போது, இது அவசியம் தேவைப்படும் பாதுகாப்பு வசதிகளில் ஒன்றாகும். ஏபிஎஸ் பிரேக் வசதி பல முறை சாலை விபத்துக்களில் இருந்து பயணிகளின் உயிரை காப்பாற்றியுள்ளது.
இந்த வரிசையில் யமஹா ஆர்15 (Yamaha R15) பைக்கில் பயணம் செய்த ஒருவரின் உயிரை ஏபிஎஸ் பிரேக் வசதி காப்பாற்றியிருக்கும் வீடியோ (Video) தற்போது வெளியாகியுள்ளது. யூடியூப் (YouTube) தளத்தில் இந்த வீடியோ பதிவேற்றப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் உள்ள ஒரு 2 லேன் நெடுஞ்சாலையில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

யமஹா ஆர்15 பைக்கில் ஒருவர் பயணம் செய்வதை இந்த வீடியோவில் நம்மால் பார்க்க முடிகிறது. இது வி4 (V4) மாடல் ஆகும். யமஹா ஆர்15 பைக்கின் ரைடர் அணிந்திருந்த ஹெல்மெட்டில் கேமரா பொருத்தப்பட்டிருந்தது. அந்த கேமராதான் இந்த சாலை விபத்து சம்பவத்தை பதிவு செய்துள்ளது.
மணிக்கு 124 கிலோ மீட்டர் வேகத்தில் யமஹா ஆர்15 பைக்கின் ரைடர் பயணம் செய்வதை இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் நமக்கு மிகவும் தெளிவாக காட்டுகிறது. இந்த வேகத்தில் டெம்போ டிராவலர் (Tempo Traveler) உள்ளிட்ட ஒரு சில வாகனங்களை அந்த ரைடர் ஓவர்டேக் செய்து செல்கிறார்.

அப்போது டாடா ஏஸ் (Tata Ace) பிக்அப் டிரக் ஒன்றை அவர் நெருங்கினார். அந்த பிக்அப் டிரக்கின் டிரைவர் வலது பக்கத்தில் திரும்ப முயற்சி செய்தார். ஆனால் சுற்றுப்புறத்தை அவர் கவனிக்கவே இல்லை. அத்துடன் இன்டிகேட்டரையும் அவர் ஆக்டிவேட் செய்யவில்லை. அந்த பிக்அப் டிரக்கை ஓவர்டேக் செய்யலாம் என்றிருந்த யமஹா ஆர்15 ரைடருக்கு இது குழப்பத்தை ஏற்படுத்தியது.
இதனால் பதற்றம் அடைந்த அவர், உடனடியாக பிரேக் பிடித்தார். இதனால் பைக்கின் வேகம் உடனடியாக குறைந்தது. எனினும் யமஹா ஆர்15 பைக், டாடா ஏஸ் பிக்அப் டிரக்கின் பின் பகுதியில் மோதுவதை அவரால் தவிர்க்க முடியவில்லை. எனினும் நல்ல வேளையாக அவர் பைக்கின் கட்டுப்பாட்டை இழக்கவில்லை.
இருப்பினும் இந்த மோதல் காரணமாக பைக்கின் முன்பகுதி சேதமடைந்து விட்டது. அத்துடன் யமஹா ஆர்15 பைக் ரைடருக்கும் சிறிய அளவிலான காயங்கள் ஏற்பட்டன. எனினும் அவர் உயிர் தப்பியதே நல்ல விஷயம்தான். அவர் உயிர் தப்பியதற்கு ஏபிஎஸ் பிரேக் வசதிதான் மிகவும் முக்கியமான காரணம் ஆகும்.
யமஹா ஆர்15 பைக்கானது, ட்யூயல்-சேனல் ஏபிஎஸ் பிரேக் வசதியுடன் வருகிறது. இந்த வசதி இல்லாத பைக்காக மட்டும் இருந்திருந்தால், இந்த விபத்தின் பின் விளைவுகள் பயங்கரமானதாக இருந்திருக்கலாம். ஆனால் இந்த சாலை விபத்திற்கு டாடா ஏஸ் பிக்அப் டிரக்கின் டிரைவரை மட்டும் குறை கூறுவது சரியாக இருக்காது.
உண்மையில் யமஹா ஆர்15 ரைடர் மீதும் தவறு இருக்கவே செய்கிறது. 2 லேன் நெடுஞ்சாலை ஒன்றில் இந்த அளவு வேகத்தில் பயணம் செய்வது நல்லதல்ல. இந்திய சாலைகளில் எப்போது வேண்டுமானாலும், எது வேண்டுமானாலும் நடக்கலாம். எனவே மிதமான வேகத்தை கடைபிடிப்பது நல்லது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: டாடா ஏஸ் பிக்அப் டிரக்கின் டிரைவர் இன்டிகேட்டரை போட்டிருந்தாலோ அல்லது யமஹா ஆர்15 பைக்கின் ரைடர் குறைவான வேகத்தில் பயணம் செய்திருந்தாலோ இந்த விபத்து தவிர்க்கப்பட்டிருக்கும். எனவே 2 பேர் மீதுமே தவறு உள்ளது என்பதுதான் எங்கள் கருத்து.


Click it and Unblock the Notifications








