ரூ.22 கோடியில் லைக்கன் ஹைப்பர் கார் வாங்கிய அபுதாபி போலீஸ்!

Written By:

ஐக்கிய அரபு அமீரகத்தில் அங்கம் வகிக்கும் துபாய் மற்றும் அபுதாபியிடையே போலீஸ் துறைக்கான விலையுயர்ந்த கார்களை வாங்குவதில் போட்டா போட்டி நடக்கிறது. உலகின் காஸ்ட்லி கார்களை பட்டியல் போட்டு வாங்கி குவித்த துபாய் போலீசார் லெக்சஸ் ஆர்சிஎஃப் சூப்பர் காரை சமீபத்தில் வாங்கினர். இந்தநிலையில், துபாய் போலீசாரை விஞ்சும் வகையில், அபுதாபி போலீசார் ஒருபடி மேலேபோய், லைக்கன் சூப்பர் ஸ்போர்ட்ஸ் கார் மாடலை வாங்கியுள்ளனர்.

உலகிலேயே அதிக விலை கொண்ட மிகவும் பிரத்யேகமான சூப்பர் கார் மாடல் இது. சமீபத்தில் வந்த ஃபாஸ்ட் அண்ட் ஃப்யூரியஸ் ஹாலிவுட் சினிமாவில் கூட இந்த காரை பயன்படுத்தியிருந்தனர். இந்த நிலையில், சுற்றுலாப் பயணிகளை கவர்வதற்காக இந்த காரை வாங்கியிருப்பதாக அபுதாபி போலீசார் கூறியுள்ளனர்.

அரபு நாட்டு தயாரிப்பு

அரபு நாட்டு தயாரிப்பு

அரபு நாட்டில் தயாரிக்கப்பட்ட முதல் கார் என்ற பெருமை லைக்கன் ஹைப்பர் காருக்கு உண்டு. லெபனான் நாட்டின் டபிள்யூ மோட்டார்ஸ் நிறுவனம்தான் இந்த காரை தயாரித்தது. 2013ம் ஆண்டு கத்தார் ஆட்டோ ஷோவில் முதல்முறையாக அறிமுகம் செய்யப்பட்டது.

லிமிடேட் எடிசன்

லிமிடேட் எடிசன்

மொத்தமே 7 லைக்கன் ஹைப்பர் கார்கள் மட்டுமே தயாரித்து விற்பனை செய்யப்பட திட்டமிடப்பட்டது. ஆனால், 100க்கும் மேற்பட்ட ஆர்டர்கள் குவிந்ததால், உற்பத்தி இலக்கை மாற்றியமைக்க டபிள்யூ மோட்டார்ஸ் முடிவு செய்திருக்கிறது. இந்த நிலையில், ஒரு காரை ஆரடர் செய்து அபுதாபி போலீசார் வாங்கிவிட்டனர். அபுதாபி போலீசார் கேட்டுக்கொண்ட பிரத்யேக வண்ணத்தில் இந்த காரை டெலிவிரி கொடுத்துள்ளது டபிள்யூ மோட்டார்ஸ் நிறுவனம்.

 எஞ்சின்

எஞ்சின்

இந்த அரேபிய குதிரையில் 740 பிஎச்பி பவரையும், 960என்எம் டார்க்கையும் அளிக்கும் 3.7 லிட்டர் ட்வின் டர்போ எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. 6 ஸ்பீடு சீக்குவென்ஷியல் கியர்பாக்ஸ் அல்லது 7 ஸ்பீடு டியூவல் கிளட்ச் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் மாடல்களில் தேர்வு செய்து கொள்ளலாம்.

டாப் ஸ்பீடு

டாப் ஸ்பீடு

மணிக்கு 390 கிமீ வேகம் வரை பறக்கும் திறன் கொண்ட இந்த கார் 0- 100 கிமீ வேகத்தை வெறும் 2.8 வினாடிகளில் கடந்துவிடும். ஆனால், இதெல்லாம் அபுதாபி போலீசாருக்கு தேவையில்லை. காரணம் என்ன தெரியுமா?

பயன்பாடு

பயன்பாடு

இந்த அதிவேக காரை அமெரிக்க போலீஸ் போன்று திருடர்களை விரட்டிப் பிடிக்கவும், ரோந்துக்காகவும் பயன்படுத்தப் போவதில்லையாம் அபுதாபி போலீஸ். ஆம், சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையில், அபுதாபியின் முக்கிய சுற்றுலா மையங்களில் பார்வைக்கு நிறுத்தப்பட உள்ளதாக அபுதாபி போலீசார் தெரிவித்துள்ளனர்.

சிறப்பம்சங்கள்

சிறப்பம்சங்கள்

முழுவதுமான 3டி திரையுடன் கூடிய டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்ட்டர், தங்க நிற நூலில் கைத்தையல்கள் செய்யப்பட்ட, லெதர் இருக்கைகள் என மதிப்பு கூட்டு அம்சங்கள் ஏராளம்.

உலகின் காஸ்ட்லி கார்

உலகின் காஸ்ட்லி கார்

ரூ.21.48 கோடியில் விற்பனைக்கு வந்திருக்கும் இந்த கார்தான் தற்போதைய நிலையில், விலையுயர்ந்த ஹைப்பர் ஸ்போர்ட் என்ற பெருமையை பெற்றிருக்கிறது. இந்த காரை ரூ.22 கோடி கொடுத்து டெலிவிரி பெற்றிருக்கின்றனர் அபுதாபி போலீசார்.

 
மேலும்... #ஆஃப் பீட் #offbeat
English summary
Abu Dhabi's police force (not to be confused with Dubai) seems to just have added a Lykan HyperSport to their fleet.
Story first published: Thursday, June 4, 2015, 11:49 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark