என்ன ஆனாலும் சரி... இன்ஜின் அருகே ஏசி பெட்டிகளை பொருத்தமாட்டாங்க... ஏன் தெரியுமா?
ரயில்களில் இன்ஜின்கள் ஏசி பெட்டிக்கு அருகே இருக்கும் இருக்கும்படி பொருத்தமாட்டார்கள். இது குறித்த விரிவான விபரங்களைக் காணலாம் வாருங்கள்.
இந்தியாவில் ரயில் சேவை மிகவும் முக்கியமான போக்குவரத்து வசதியாகும். தினமும் இந்தியா முழுவதும் இயங்கும் ஆயிரக்கணக்கான ரயில்களில் லட்சக்கணக்கான பயணிகள் பயணம் செய்து வருகின்றனர்.

இப்படியான ரயில்களில் பல விஷயங்கள் பின்பற்றப்படுகின்றன. இவை எல்லாம் நம் கண் முன் தெரிந்தாலும் அதற்கான காரணம் நமக்குத் தெரிவது கிடையாது. சிலர் அதைப் பற்றி யோசித்திருக்கக் கூட மாட்டோம். அப்படியா ஒரு விஷயத்தைப் பற்றித் தான் நாம் இங்கே காணப்போகிறோம். தலைப்பில் படித்ததை போல ரயில்களில் ஏசி பெட்டிகள் மட்டும் இன்ஜின் அருகே இருக்கும் வகையில் பொருத்தமாட்டார்கள் ஏன் எனக் காணலாம்.
இந்த விஷயத்தை நாம் அடிக்கடி ரயிலில் பயணித்த பலர் கவனித்திருப்பார்கள். ரயில்களில் ஏசி பெட்டிகள் எப்பொழுதும் இன்ஜின் அருகே இருக்காது. மாறாக இன்ஜினை தொடர்ந்து லக்கேஜ் பெட்டி, பின்னர் ஜெனரல் கம்பார்ட்மெண்ட், பின்னர் சிலீப்பர் கம்பார்ட்மெண்ட், அதன் பின்னர் தான் ஏசி கம்பார்மெண்ட், பின்னர் கடைசியாக மீண்டும் ஜெனரல் கம்பார்ட்மெண்ட் இருக்கும். ஏசி பெட்டிகள் ரயிலில் எப்பொழுதும் ரயிலில் முகப்பிலோ அல்லது பின் புறத்திலோ நிச்சயமாக இருக்காது.
இந்த விதி முழுமையான ஏசி பெட்டிகளைக் கொண்ட ரயில்களுக்குப் பொருந்தாது. ஏசி மற்றும் சிலிப்பர் வகுப்புகள் கொண்ட ரயில்களுக்கு மட்டும் பொருந்தும். இப்படியாக ஏசி பெட்டியை ஏன் முன்/ பின்புறம் வைக்கமாட்டார்கள் தெரியுமா?
இது குறித்து இந்திய ரயில்வே எதுவும் அதிகாரப்பூர்வமான விளக்கம் தரவில்லை. இருந்தாலும் ரயில்களில் குறித்து அதிகம் படிக்கும்/ எழுதும் ஆர்வலர்களிடம் கேட்ட போது ஏசி பெட்டிகள் இப்படிப் பொருத்துவதற்கான சில காரணங்களைக் குறிப்பிட்டுள்ளனர். அதாவது ஏசி பெட்டியில் பயணிப்பவர்கள் அதிக விலை கொடுத்து டிக்கெட்களை வாங்கி பயணிக்கின்றனர். அதனால் அவர்களுக்குப் பயணம் சொகுசாக அமைய வேண்டும் ரயில்வே நிர்வாகம் நினைக்கிறது.
இது பிரிட்டிஷ் காலத்தில் உள்ள ஸ்டீம் இன்ஜின் தயாரிக்கப்பட்ட காலத்திலேயே உள்ள பழக்கம் அப்பொழுது ஏசி பெட்டிகள் இல்லை என்றாலும் முதல் வகுப்பு பெட்டிகள் இருந்தது. அப்பொழுது இன்ஜின் அருகே முதல் வகுப்பு பெட்டிகள் இருந்தால் இன்ஜினிலிருந்து வரும் சத்தம் மற்றும் புகை முதல் வகுப்பு பெட்டியில் இருப்பவர்களுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்தும் என்பதால் ரயிலின் நடுவே முதல் வகுப்பு பெட்டிகளைப் பொருத்தி வந்தனர்.
பின்னர் வளர்ச்சியடைந்த பின்பு ஏசி பெட்டிகள் இப்படியாக ரயில் நடுவே இருப்பது போல அமைத்தனர் பின்னர் ஏசி பெட்டிகளை டீசல் இன்ஜின் வந்துவந்துவிட்ட பிறகு சிலிப்பர் கோச்சிற்கு அடுத்ததாக ஏசி கோச் இருக்கும் வகையில் மாற்றினர். தற்போது வரை ஏசி கோச் பெட்டிகள் ரயில் இன்ஜிற்கு அருகே இல்லாதவாறு வேறு பெட்டிகளுக்கு இடையே பொருத்தத் துவங்கிவிட்டனர்.
ரயிலில் பயணத்தின் போது இன்ஜினை முன்புறமிருந்து பின்புறம் மாற்றி ரயிலை இழுக்கும் வழக்கம் இருப்பதால் இன்றும் ரயில்களில் ஏசி இன்ஜினிற்கு அடுத்ததாக ஒரு ஜெனரல் கோச்சை பொருத்துகின்றனர். இதனால் ரயிலின் இன்ஜினை மாற்றினாலும் இன்ஜின் அருகே ஏசி பெட்டிகள் இல்லாமல் இருக்கும். இது குறித்த உங்கள் கருத்தை கமெண்டில் சொல்லுங்கள்.


Click it and Unblock the Notifications